கொரோனாவுக்கு Status தெரியாது.

  • 11

நான் யார் எனது பட்டமும் பதவியும் அந்தஸ்தும் தான் என்ன? என்று ஆணவத்தினால் மார்பு தட்டிக் கொண்டிருந்த அனைவரையும் கண்ணுக்குப் புலனாகாத அல்லாஹ்வின் சோதனை ஒருகணம் ஆட்டம் காண வைத்துவிட்டது.

வல்லரசுகள் வளர்முக நாடுகள் மூன்றாம் தர நாடுகள் என பெரிய அளவில் தொடங்கும் இந்த அதிகார பேதம் சாதாரண கிராமத்து தலைமைகளையும் விட்டுவிடவில்லை. ஒருவருக்கொருவர் எல்லா விடயங்களிளேயும் Status பார்க்கும் நிலை இஸ்லாமிய சமூகத்தில் கூட தனது கைவரிசையைக் காட்டத் தவறவில்லை. திருமண பந்தம் முதற்கொண்டு சாதாரண நட்பு வட்டாரங்களை கூட தீர்மானிக்கும் சக்தியாக இந்த Status மாறிவிட்ட நவீன உலகம் அல்லவா இது?

ஆனால் இன்று எல்லா ஆணவங்களும், பெருமை பல்லவிகளும் இறைவனின் முன் மண்டியிட்டு விடை தெரியா ஈசல்களாக செய்வதறியாது தடுமாறுவதைப் பார்க்கிறோம். உலகின் வல்லரசென கூறிக்கொண்டு தட்டிக் கேட்க யாருண்டெனும் மமதையில் ஆடிய ஐக்கிய அமெரிக்கா தொடங்கி சாதாரண சிறு தீவுகளை கொண்டமைந்த மாலைதீவு வரைக்கும் அனைத்துமே அல்லாஹ்வின் சோதனை Covid-19 முன் சமனே!

உலக பணக்கார வரிசையில் முதலிடம் பெற முனையும் பணக்கார முதலைகளுக்கும் அன்றாட உணவுக்கு வழியின்றி பரிதவிக்கும் ஏழைகளுக்கும் வீட்டுக்குள் அடைபட்டுக்கிட என எச்சரிக்கை விடுத்த இந்த கொடிய வியாதிக்கு Status தெரியாது. சுருங்கக் கூறின் அல்லாஹ்வின் முன் அனைவரும் சமமே!

இந்த வியாதியை அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு வந்த சோதனை என்பதா அல்லது பாவங்களும் அநியாயங்களும் அட்டூழியங்களும் நிறைந்த இந்த மானுட சமுதாயத்திற்கான வேதனை என்பதா?

வியாபாரம் என்றால் பொய், களவு, கலப்படம், போலி என்று உண்மைக்கு அங்கு இடமில்லை. அரசியல் கூட ஊழல், மோசடி, அநியாயம் என்று கரை படிந்த கரங்களை உரித்தாளர்களாக ஆக்கிக் கொண்டுள்ளது. சமூகமயமாக்கள் எனும் பெயரில் விபச்சாரமும் கூத்தும் கும்மாளமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு உலகிற்கு இறங்கியுள்ள இந்த நோய் இறைவனின் சோதனையாக எப்படி இருந்துவிட முடியும்?

அல்லாஹ்வின் முன் அனைவரும் அவனது அடியார்களே! அவன் மனித சமுதாயத்தை திடனாக நாம் கண்ணியப்படுத்தினோம் என்று கூறிக் கொண்டிருக்க பாவச் செயல்களை நாகரீகம் எனும் பெயரில் அரங்கேற்றி தமது கண்ணியத்தை நாமே தொலைத்துக் கொள்கிறோம். உங்கள் இறைவனுக்கு அதிகம் பயப்படுபவரே அவனிடத்தில் சிறந்தவர், மிகவும் கண்ணியத்துக்குரியவர் எனும் இறை வசனம் உலக மாந்தருக்கு சமர்ப்பணம் ஆகட்டும். மனிதனை கண்ணியமான படைப்பாக ஆக்கியது மட்டுமன்றி அவனுக்கு பயந்து பயபக்தியுடன் அவனை துதிக்கும் போது அந்த கண்ணியத்தை மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதே குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறும் ஈருலகிலும் Status ஐ வளர்த்துக்கொள்ளும் சரியான வழி.

எனவே அடிப்படையில் ‘கண்ணியமானவன்’ எனும் Status மனிதப் பிறவிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இறையச்சத்தை பொருத்து மனிதனுக்கு மனிதன் இதுகூடிக் குறைகிறது. இது தவிர வேறு உலகில் இருக்கும் எல்லா Statusகளும் நிலையற்ற போலிகள் என்பதை நிரூபித்துள்ளது இந்த கொரோனா.

சுருங்கக்கூறின் இறைவனைப் பயந்து நல்லடியானாக இருந்தால் இந்த வியாதி உனக்கு சோதனை. மறுபுறமாக உனக்கு அல்லாஹ் தந்த கண்ணியம் எனும் Statusஐ மறந்து உலக இன்பங்களின்பால் திரும்புவாய் என்று இருந்தால் இது உனக்கு வேதனை.

மனிதனே! சிந்திக்க மாட்டாயா? கொரோனாவுக்கு Status தெரியாது. ஆனால் உனக்கு அல்லாஹ் தந்த கண்ணியம் எனும் Statusஐ நீ மறந்துவிடாதே! உனது Status ஐ நீ மென்மேலும் வளர்த்துக்கொள்ள இறையச்சத்தை அணிகலனாக எடுத்துக்கொள்.

இறையச்சத்தை வளர்ப்போம்! படைப்பாளனின்பால் மீளுவோம்!

A.C.M. Shakir
(Abbasi)

நான் யார் எனது பட்டமும் பதவியும் அந்தஸ்தும் தான் என்ன? என்று ஆணவத்தினால் மார்பு தட்டிக் கொண்டிருந்த அனைவரையும் கண்ணுக்குப் புலனாகாத அல்லாஹ்வின் சோதனை ஒருகணம் ஆட்டம் காண வைத்துவிட்டது. வல்லரசுகள் வளர்முக நாடுகள்…

நான் யார் எனது பட்டமும் பதவியும் அந்தஸ்தும் தான் என்ன? என்று ஆணவத்தினால் மார்பு தட்டிக் கொண்டிருந்த அனைவரையும் கண்ணுக்குப் புலனாகாத அல்லாஹ்வின் சோதனை ஒருகணம் ஆட்டம் காண வைத்துவிட்டது. வல்லரசுகள் வளர்முக நாடுகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *