தலைக்கனம் ஒரு தடைக்கல்

  • 41

வாழ்க்கையின் சாலைகளில்
விழுந்து விழுந்து பயணிப்பதால்
இனியொரு கட்டத்தில்
விருப்பமற்றுக் கூட நீ உன் பயணத்தை
நிறுத்தி விடக் கூடலாம்

விதி உன்னை
அதன் நிர்ணயத்தில் இருந்து
நழுவ விடப் போவதில்லை
நீ வெறுத்துப் புறந்தள்ளுவதும் கூட
உனக்கு நிரந்தரமாகிடலாம்

நீ கண்ணீரையே காணாதவன் என்றால்
நீ வலிகளையே உணராதவன் என்றால்
நீ அடிபட்டு திரும்பாதவன் என்றால்
நிச்சயமாக உன் பயணம்
உனக்கான சுயநலத்திலேயே
அரங்கேறி இருக்கிறது

நிச்சயமாக நீ ஒரு நாள்
அழுதே தான் தீர வேண்டும்
விழாமல் நடப்பதையே
வெற்றியென கொண்டாடுபவன் நீ

விழுந்தவனை ஏளனப் பார்வையிட்டு
சிரிப்பவனும் கூட நீ தான்
நிச்சயமாக நீ ஒரு நாள்
விழுந்தே தான் தீர வேண்டும்
நிச்சயமாக நீ ஒரு நாள்
தோல்வியில் புரண்டெழத்தான் வேண்டும்

பிறிதொரு நாளில்
வாழ்க்கையின் சாலைகளில்
விழுந்து விழுந்து பயணிப்பதால்
இனியொரு கட்டத்தில்
விருப்பமற்றுக் கூட நீ உன் பயணத்தை
நிறுத்தி விடக் கூடலாம்

அன்றியும் அதிலிருந்து
போராடி நீயொரு நாளில் வென்றால்
முதலெப்போதும் உனக்கிருந்த
தலைக்கனம் நினைத்து
நீயே வெட்கித்துக் கொள்வாய்

ஏரூர் நிலாத் தோழி

வாழ்க்கையின் சாலைகளில் விழுந்து விழுந்து பயணிப்பதால் இனியொரு கட்டத்தில் விருப்பமற்றுக் கூட நீ உன் பயணத்தை நிறுத்தி விடக் கூடலாம் விதி உன்னை அதன் நிர்ணயத்தில் இருந்து நழுவ விடப் போவதில்லை நீ வெறுத்துப்…

வாழ்க்கையின் சாலைகளில் விழுந்து விழுந்து பயணிப்பதால் இனியொரு கட்டத்தில் விருப்பமற்றுக் கூட நீ உன் பயணத்தை நிறுத்தி விடக் கூடலாம் விதி உன்னை அதன் நிர்ணயத்தில் இருந்து நழுவ விடப் போவதில்லை நீ வெறுத்துப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *