போதும் என்ற மனம்

  • 11

“பொதுவாக மனிதன் வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும். ஆயினும் எமக்கு கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே ஒரு முஃமினின் பண்பாகும்.

‘எமது வாழ்க்கையில் இன்று நிம்மதியை இழப்பதற்கான முக்கிய காரணங்களுள் இதுவும் பாரியதாக்கம் செலுத்துகிறது. திருப்தியில்லாத மனம் நிம்மதியை இழக்கும்.’

எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் திருப்தியில்லை, யாரைப்பார்த்தாலும் ஏதாவது குறை, அதிருப்தியை வெளிக்காட்டுவார்கள்.

  1. பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை எடுத்தும் திருப்தியில்லை,
  2. வசதி வாய்ப்புக்கள் பெற்றிருந்தும் திருப்தியில்லை,
  3. நல்ல தொழிலை பெற்றிருந்தும் திருப்தியில்லை,

இவ்வாறு யாரை எடுத்தாலும் அதிருப்தியை வெளிக்காட்டுகிறார்கள் காரணம் போதும் என்ற மனமின்மையே ஆக அதிருப்தி எமது வாழ்க்கையை நரகமாக்கிடும்

இப்னு கையிம் ரஹ் குறிப்பிடுகிறார். “திருப்தியே அனைத்து சிரமங்களுக்குமான மருந்து. மாத்திரைகள் தராத நிவாரணத்தை மனதிருப்தி தரும்.

ஆக இறை விதியை குறித்து திருப்தி கொள்வது மனிதனுக்கு பெரும் நிம்மதியை கொடுக்கும்.

‘ஒரு முறை நபி ஸல் அவர்கள் அபுதர் (ரழி) க்கு இவ்வாறு உபதேசம் செய்தார்.’ “அபுதர்!! செல்வ செழிப்புதான் உண்மையான தன்னிறைவு என்று எண்ணாதே உள்ளத்தின் ஏழ்மை தான் உண்மையான ஏழ்மை. உள்ளத்தில் தன்னிறைவு கொண்டவரை உலகத்தின் மாற்றங்களால் எதுவும் செய்ய முடியாது. உள்ளத்தில் ஏழ்மை இருப்பவரிடம் உலகத்தையே கொடுத்தாலும் தன்னிறைவு ஏற்படாது.” என்றார் நபித்தோழர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தும் நியதிகளை திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இறைவன் எமக்காக விரும்பியதை நாம் இறைவனுக்காக விரும்பி திருப்தியடையக்கூடாதா?

பெரும் சோதனைகளிலே பெரும் நற்கூலி உள்ளது என்பது யதார்த்தபூர்வமான உண்மையாகும்.

அதேபோல் அவன் தந்த அருட்கொடைகளிலும் மனநிறைவு அடையவேண்டும்.

நாம் அல்லாஹ்விடம் எதையாவது கேட்கிறோம் அதை அல்லாஹ் தந்தால் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அதை அல்லாஹ் தரவில்லையானால் கவலை அடைவதைவிட்டு பல தடவை மகிழ்ச்சி அடையவேண்டும்.

காரணம் இதை தந்தமை எம் தெரிவு அதை தடுத்தமை அல்லாஹ்வின் தெரிவு எமது தெரிவை விட அல்லாஹ்வின் தெரிவு மிகச்சிறந்தது என்று திருப்தியடைய வேண்டும்..

நீ கேட்டதை தருவது மட்டும் இல்லை அல்லாஹ்வின் வேலை தடுப்பதும் அல்லாஹ்வின் வேலை தான்

எனவே எமக்காக வடிவமைக்கப்பட்ட இறை ஏற்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் மனிதன் என்ன தான் முயற்சியை மேற்கொண்டாலும் இறைவன் விதித்தது மட்டுமே அவனுக்கு கிடைக்கும். என்பதே உண்மை

எனவே இறைவன் தந்தவற்றை திருப்தியுடன் ஏற்றுக்கொள் தன்னிறைவு கொண்டவனாய்

Faslan Hashim
Islahiyya Arabic College®
South Eastern University Of Sri Lanka
BA®

“பொதுவாக மனிதன் வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும். ஆயினும் எமக்கு கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே ஒரு முஃமினின் பண்பாகும். ‘எமது வாழ்க்கையில் இன்று நிம்மதியை இழப்பதற்கான முக்கிய காரணங்களுள்…

“பொதுவாக மனிதன் வாழ்க்கையின் சகல விடயங்களின் முன்னேற்றத்திற்காக இயலுமானவரை முயலவேண்டும். ஆயினும் எமக்கு கிடைத்ததை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே ஒரு முஃமினின் பண்பாகும். ‘எமது வாழ்க்கையில் இன்று நிம்மதியை இழப்பதற்கான முக்கிய காரணங்களுள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *