கலங்கரை விளக்கு – கலாநிதி சுக்ரி

  • 8

ரமழான் 25ன்
இன்றைய விடியலில்
இதயப் பெருமழை
சோவெனப் பொழிகிறது
இயற்கை
இடியின் மொழியில்

எம் உணர்வுகள் சுமந்த
இதயப் பெருமகன்
நளீமியா வாழ்வின்
மணக்கும் நறுமணம்
அருமை ஆசான்
சுவனமேகிய செய்தி
சொல்கிறது.

அறிவின் ஆய்வின்
வாசல் எமக்கு
திறந்து காட்டிய
கலங்கரை விளக்கே
நீங்கள் இன்று
அணைந்து விட்டாலும்
எஙகள் இதயங்களில்
வல்லவன் ரஹ்மானின்
அருளின் ஒளியில்
நிச்சியம் ஒளிர்வீர்கள்.

BMICHல்
உங்கள் வாழ்துரை நிகழ்வில்
வழங்கிய
என் கவிதை வரிகளை
காணும் போதெல்லாம்
நினைவு படுத்துவீர்கள்
இஸ்லாமிய சிந்தனைக்கு
ஆக்கம் எழுதவில்லை
என்றால் ஏன் என்று
கேட்பீர்கள்.
இந்த ஏழைச் சிறுவனுக்கு
ஆய்வின் உலகை
உங்கள் விழிகளால்
திறந்து காட்டினீர்கள்.

நளீமியாவின்
நந்தவன நினைவுகளில்
எங்கள் அறிவுத் தந்தைக்கு
அப்பால்
இன்றும் இருப்பது
உங்கள் நினைவுகள்தான்.

என் அருமை ஆசானே
விழிகள் மூடி
அமைதியாய் அழுகிறேன்
உங்கள் முகத்தை
இறுதியாய் ஒரு முறை
பார்க்க முடியாமல்
போன அவலத்தை எண்ணி
என்
தஹஜ்ஜுத் முசல்லாவின்
காயாத ஈரத்தில்
இனி எப்போதும்
இருப்பீர்கள்.
விடை தருகிறோம்
சுவனத்து கதவுகள்
உங்களுக்காய் திறந்தே
இருக்கும்.

எம்.நவாஸ் ஸனூர்தீன்

ரமழான் 25ன் இன்றைய விடியலில் இதயப் பெருமழை சோவெனப் பொழிகிறது இயற்கை இடியின் மொழியில் எம் உணர்வுகள் சுமந்த இதயப் பெருமகன் நளீமியா வாழ்வின் மணக்கும் நறுமணம் அருமை ஆசான் சுவனமேகிய செய்தி சொல்கிறது.…

ரமழான் 25ன் இன்றைய விடியலில் இதயப் பெருமழை சோவெனப் பொழிகிறது இயற்கை இடியின் மொழியில் எம் உணர்வுகள் சுமந்த இதயப் பெருமகன் நளீமியா வாழ்வின் மணக்கும் நறுமணம் அருமை ஆசான் சுவனமேகிய செய்தி சொல்கிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *