இறைவா உன்னிடம் முறையிடுகிறேன்.

  • 22

கொரோனாவுக்கு எதிராக
மனு தாக்கல் செய்கிறேன்
அழையா விருந்தாளியாக
வந்த கொரோனா இன்னும் என்னை
அங்கலாய்க்க செய்து கொண்டிருக்கிறது

பல்கலைக்கழக பதிவும் தாமதமாகியது
பல கற்கைநெறிகளும்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
என்றாலும் மனம் கலங்கவில்லை

ரமழானும் வந்தது
அருள் மழையும் பொழிந்தது
பெருநாளும் வருகிறது
பெருந்துயரம் தருகிறது

வீட்டிற்கு போக வழியுமில்லை
கொரோனாவுக்கு வழி தெரியவுமில்லை
கற்பனையில் பல வழிகள்
தோன்றினாலும் – கொரோனா
அவற்றை கானல்நீராக்கி விடுகிறது

கொரோனாவுடன் பேச நினைத்தாலும்
தொடர்பு தொலைவாகவே இருக்கிறது
என்ன செய்ய என்று விளங்கவில்லை
துஆ கேட்டும் மனம் சலிக்கவில்லை

என் வயோதிப தாயோ தனிமையில்
என்னை காண துடிக்கிறாள் தூரத்தில்
நானும் தாயை காண பேராவல் கொண்டேன்
அவள் மடி சாய ஏக்கம் கொண்டேன்

ஆனால் விதியின் விளையாட்டு கொரோனா
வடிவில் என்னை திண்டாட செய்கிறது
என்றாலும் பொறுமை இழக்கவில்லை

போய் விடு கொரோனாவே
போதும் இந்த விளையாட்டு
வெற்றி வாகை சூடிக் கொண்டு போய் விடு
நான் உன்னிடம் தோற்று விட்டேன்
இந்த தோல்வி எனக்கு புதிதல்ல
ஆனால் நான் தோற்க பிறந்தவளும் அல்ல

என்ன வேண்டும் உனக்கு
என் உயிர் தருகிறேன்
ஆனால் என் உயிரிலும் மேலான
தாயை காண மட்டுமாவது அவகாசம் கொடு
அல்லது உன் முகவரி சொல்லி அனுப்பு
அன்பை தருகிறேன்

இரும்புச் சுவரும் பசுமையான
வேர் மூலம் பிளந்திடும்
அது போல் கொரோனாவின்
மனமும் இளகிடுமா?

மனதில் உள்ள தவிப்புக்களை
இறைவனுக்காக பொறுக்கிறேன்
நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்
நல்ல முடிவுக்காக

இறைவனே உன்னிடம் முறையிடுகிறேன்
எனது முறையீட்டுக்கு பதில் அளித்து விடு
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான்

Noor Shahidha
Badulla

கொரோனாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்கிறேன் அழையா விருந்தாளியாக வந்த கொரோனா இன்னும் என்னை அங்கலாய்க்க செய்து கொண்டிருக்கிறது பல்கலைக்கழக பதிவும் தாமதமாகியது பல கற்கைநெறிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றாலும் மனம் கலங்கவில்லை ரமழானும்…

கொரோனாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்கிறேன் அழையா விருந்தாளியாக வந்த கொரோனா இன்னும் என்னை அங்கலாய்க்க செய்து கொண்டிருக்கிறது பல்கலைக்கழக பதிவும் தாமதமாகியது பல கற்கைநெறிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றாலும் மனம் கலங்கவில்லை ரமழானும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *