உணர்ந்திடும் ரமழான் எளிமையின் பெருநாள்!

கோடிகோடியாய் உயிர்கள் சாகின!
கொடிய கொரோனா கொடூரமாகின
வைரஸ் கண்டு வையகம் கலங்கின
வைரல் மெசேஜ்கள் வதந்திகள் சொன்னன

முடங்கி கிடந்தோம்
அடங்கி நடந்தோம்

புலனே காணாத அங்கி கண்டு;
புலனே தோன்றாத நுண்ணங்கி கண்டு;
புலன்கள் பேணி பூண்டுண்டு கிடந்தோம்

சித்திரை; சிங்கள பண்டிகையெல்லாம்
சிக்கனமாக சீத்தவம் ஆகின.

பசியின் ருசிகண்டு குடிசைகள் குப்பிவிளக்கு
வெளிச்சத்தில் மெளுகுக்கண்ணீர் கசிந்தன.

இத்தனை கண்டும் இவையிடையே
இறைவா என்று கையுயர்த நினைக்கையிலே,
இறையருள் ரமழான் நம்முல்
இழையோட தொடங்கையிலே

பசியோடு சஹர் செய்து;
பசியோடே இப்தாரும் செய்து;
பகலும் பட்டினியாய்;
இரவும் பட்டினியுமாய் – ஏழை நோன்பிருக்க

ஊனின்றிய நோன்பு உள்ளம் வரை
சென்றிருக்குமோ என்னவோ?

இத்தனையும் கலங்கி, வதங்கி
ஓர்பாடாய் ஓரிடம் கண்டால்,
பெருநாள் பேச்சஸிங்கிற்கு பட்டியல் போடும் பத்தினிகளின் ரமழான் பக்குவமிதுதானோ

ஏழை பசியுணர்த்த வந்த ரமழானை,
ஏளனம் செய்து கோலம் கோலமாய்
பண்டிகை கொண்டாடும்
மனித மிருகங்களும் இவர்கள்தானோ

கூட்டமாய் கூத்தாட்டங்கள் வேண்டாம்
கோலாகலமான கொண்டாட்டங்களும் வேண்டாம்
ஆடம்பர அணிகளுடன் ஜிமுக்கும்
ஆணவமும் வேண்டாம்
உடுத்த ஆடையை ஊர்ப்பார்க்க
உலாவும் உலாக்களும் வேண்டாம்

கடமைகளுடன் தொழுகையும்;
கண்ணெதிர் உறவுகளுடன் உறவாடலுமாய்;
ஈத் முபாரக் கூறுவோம்.

“தகப்பலல்ஹு மின்னா வமின்கும்”

அல்லாஹ் என்னையும்
உம்மையும் பொருந்துவானாக!

ஆய்ஷா அப்துல் காதர்
(தரம் – 09),
அஸ்ஹர் மத்திய கல்லூரி
அக்குரணை

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: