கொரோனா தொற்றில் உலகளவில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியது- டொனல்ட் ட்ரம்ப்

“உலகளாவிய நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிப்பது பெருமைக்குரியது” என ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அது அதிகமானோரிடம் வைரஸ் தொற்றுக்கான சோதனை நடத்தப்படுவதைப் பிரதிபலிக்கிறது . அந்த வகையில் அது பெருமைக்குரியதே என்றார் அவர்.

அமெரிக்காவில் வைரஸ் பரவல் ஆரம்பித்தது தொடக்கம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பேசிய போதே இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க நோய்த் தடுப்பு நிலையம் வெளியிட்ட புள்ளிவி பரப்படி , இதுவரை அங்கே 12.5 மில்லியன் சோதனைகள் நடத் தப்பட்டுள்ளன. எண்ணிக்கை அளவில் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா அதிகமான வைரஸ் தொற்றுச் சோதனைகளை நடத்தியிருப்பது உண்மையே.

ஆனால், மக்கள்தொகை அடிப் படையில் அது உலகின் முதல் நிலையில் இல்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆயிரம் அறிவியல் அறிக்கை யொன்று அதனைத் தெரிவித்தது.

ஆயிரம் பேருக்கு எத்தனை பேரிடம் சோதனை நடத்தப்பட்டது என்ற அடிப்படை பார்க்கும்போது  அமெரிக்கா அளவில் 16 – ஆவது இடத்தில் உள்ளது.

அந்த அம்சத்தில் ஐஸ்லந்து, நியூசிலந்து ரஷ்யா, கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவைக் காட்டிலும் மேம் பட்ட நிலையில் உள்ளன.

கடந்த வாரம் அமெரிக்கா நாளொன்றுக்கு 300,000 முதல் 400,000 சோதனைவரை நடத்தியது . அமெரிக்காவை மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பச் செய்ய அந்த எண்ணிக்கை 9 லட்சத்துக்கு அதிகரிக்கப்பட வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Thinakaran

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: