விருந்தாளி

0 Comments

அற்புதம் மிகுந்த
றஹ்மத் நிறைந்த
மகத்தான மாதமே

உன் வருகையால்
உள்ளம் ஒளிவிளக்காகி
அமல்களால் வளம் பெறுதே

பாவக்கறைகளை நீக்கி
சுவனத்து மணம் கமழ
விருந்தாளியாய் வந்த ரமழானே

நீ விடைபெறும் தருணமிது
மஹ்ஷரில் நமக்காய் மன்றாடிடுவாய்
இறைவா நம்மை பொருந்திடுவாய்
சுவனத்தை பரிசாய் அளித்திடுவாய்

Asma Masahim
Panadura
SEUSL

Leave a Reply

%d bloggers like this: