விடை பெறக் காத்திருக்கும் ரமழானே!

விடை பெறக் காத்திருக்கும் ரமழானே!
விடை பெற்று விடுமா எமது அமல்களும்?
நோன்பால் புத்துணர்ச்சி பெற்றோம்
தொழுகையால் கண் குளிர்ந்தோம்

குர்ஆன் ஓதி உள்ளத்தை ஒளியேற்றினோம்
திக்ரால் தினமும் நாக்களை நனைத்தோம்
ஸகாத்தால் ஒன்று கூடினோம்
பசியியால் ஏழை உணர்வை மதித்தோம்

பொறுமையால் இறை நெருக்கம் பெற்றோம்
பணிவால் உயர்ந்தோம்
ஈமானின் சுவை உணர்ர்தோம்

இவை எல்லாம் இந்த ஒரு மாதம் மட்டும் தானா?
இல்லை ஆயுள் உள்ள வரை தானா?
மனிதா சிந்திக்க மாட்டாயா?
நன்மைக்கு முந்திக் கொள்ள மாட்டாயா?

உன்னை வரவேற்றோம் புன்னகையுடன்
உன்னை வழியனுப்புகிறோம் கண்ணீருடன்
விடை பெறக் காத்திருக்கும் ரமழானே!
விடை பெறப் போவது எமது பாவங்களும் தான்!

Noor Shahidha.
Badulla.

Leave a Reply