ஈத் எனும் இனிய நாள்

முத்தான முப்பது
நாட்களின் சன்மானம்
ஈத் எனும் இனிய நாள்

புத்தாடை அணிந்து
புன்னகையுடன்
சாந்தியைப் பரப்பும்
இனிய நாள் – ஈத்

உறவுகள் கூடி
வாழ்த்துக்கள் தூவி
இனிப்புகள் பரிமாறும்
இனிய நாள் – ஈத்

பகை மறந்து
பாசம் கொண்டு
பரவசம் கொள்ளும்
இனிய நாள் – ஈத்

அன்பை பகிர்ந்து
அல்லாஹ்வை புகழ்ந்து
தக்பீர் கூறும் அழகிய நாள்
ஈத் எனும் இனிய நாள்!

Rushdha Faris
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: