இனிய ஈத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நாளை பெருநாளா இல்லையா
என்ற குழப்பத்திலே
இன்று நோன்பை திறந்தேன்

நொடிக்கொரு முறை கடிகார முட்களை கண்காணித்த வண்ணம் எனது கண்கள்

இடைக்கிடை போனையும்
உளவு பார்த்துக் கொள்ளும் கைகள்

யாராவது பிறை பார்த்து
நற்செய்தி சொல்ல மாட்டார்களா
என்று ஏங்கும் உள்ளம்

இஷாவுக்கான அதானும் ஒலித்தது
எனது எதிர்ப்பார்ப்பும்
ஏமாற்றம் அடைந்தது

உடனே குசினிக்குள் சென்று
சோற்றை வைத்து கறி சமைக்க
ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன்
சஹருக்கென்று!

திடீரென பள்ளியில்
தக்பீர் முழங்கியது
அல்ஹம்துலில்லாஹ்!
நாளை பெருநாள்

எனக்கோ சந்தோசம் தாங்கவில்லை
சிறு குழந்தை போல
நானும் சத்தம் போட்டேன்
‘நாளக்கி பெருநாளாம்’ என்று

பெருநாள் பாடல்களை
முணுமுணுத்தவாறே
அறைக்குள் ஓடினேன்
எனது அன்பான உறவுகளுக்கு
வாழ்த்து மழைப் பொழிய

இனிய ஈத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நாளைய விடியல்
அன்பை மட்டுமே விதைக்கும்
விடியலாக அமைய பிராத்திக்கிறேன்!

Noor Shahidha.
Badulla.

Leave a Reply