கலட்டிக்கையும் காய்ஞ்ச தேங்கையும்

0 Comments

ரஷாத்தும், ஷாகிரும் சகபாடிகள். ஆனால் இருவரின் ஆளுமைகளும் எதிரும் புதிருமானவை. ரஷாதோ கற்றலில் முதலிடம் ஆனால் ஷாக்கிருக்கோ கற்றலோ ஏறுவதேயில்லை. ஆனால் ஷாகிரோ கவிதை எழுதுவதில் மன்னன் ரஷாத்துக்கோ அந்த ஆளுமை இல்லை. ஆனால் சமூகக் கட்டமைப்பில் இதனால் பாடசாலையில் ஒவ்வொரு தவணை முடிய புள்ளிகளின் அடிப்படையில் ரஷாத்தின் நன்மதிப்பு கூடிக் கொண்டும், ஷாகிரின் நன்மதிப்பு குறைந்த வண்ணமே வந்தது.

கொரோனா விடுமுறைக்காலம் ஷாகிரோ தனக்கு விரும்பிய விதத்தில் கவிதைகளை வீட்டில் எழுதிய வண்ணமிருந்தான்.

“தேங்காயில்
கலட்டிக் காயும்
காய்ஞ்ச காயும்
பார்த்து
சமைக்கத் தெரிந்த
சமூகத்திற்கு
மாணவனில் உள்ள
ஆளுமை கண்டு
வளர்க்கத் தெரியவில்லை.”

என ஏதோ தனக்கு தெரிந்த விதத்தில் கவிதைகளை தாளொன்றில் கிறுக்கிக் கொண்டிருந்தான். அப்போது அவ்விடத்திற்கு அவனது தாய் வந்தான்.

“மகன் என்ன செய்ற?”

“கவித எழுதுறன் உம்மா”

தாய் பரீனா சற்று கோபங் கொண்டவளாக,

“உனக்கு எதுன தடவ செல்லிட்டன், இந்தக் கவித எழுதி காலத்த வீணாக்க வேணாண்டு, பாரு ஒன்ட வகுப்பிலே படிக்கிய ரஷாத், போனா வருஷம் மூணாம் தவணையிலயும் எல்லா பாடத்துலயும் ஏ மார்க்ஸ், ஒனக்குத்தான எல்லா பாடத்தலயும் நாப்பதும், நாப்பத்தஞ்சிம், ஒன்ட இந்தக் கவிதய வச்சி கம்பஸ் போக எலா, இந்த கவித எழுதுத உட்டுப்போட்டு ஒழுங்காப் படி லீவு காலம்”

என ஏசியவளாக சென்றாள்.

மகன் ஷாகிரோக்கு அவையெல்லாம் செவிடன் காதில விழுந்த சங்கு மாதிரி பொருட்படுத்தாது கவிதை எழுதுவதிலேயே மூழ்கினான்.

***********

இரண்டு நாட்களின் பின்,

“மவன், பராத் மாஸம், இன்டக்கி பராத் ரொட்டி சுட்டு கொடுக்க ரெண்டு தேங்கா கொணவாங்க”

“ஆ உம்மா, சல்லி தாங்க, இப்ப தேங்க ஒன்டு எழுவதுருவா”

தாயிடம் நூற்றி ஐம்பது ரூபாய் பெற்றுக் கொண்டு கடைக்கு போய் கலட்டிக் காய் ஒன்றும் (இளம் காய்), காய்ந்த தேங்காய் ஒன்றும் வாங்கிக் கொண்டு வந்தான்.

“மவன், ரொட்டி சுட ரெண்டு கலட்டிகாய பார்த்து கொணவர தெரியவா? என்த காய்ஞ்ச தேங்கையும், கலட்டிக் காயும் கொண வந்த”

“உம்மா, காய்ஞ்ச தேங்கயால ரொட்டி சுட ஏலவா?”

“இல்ல, ரொட்டிக்கு கலட்டிக்க தேங்கதான் நல்லம்”

“உம்மா கடயில இந்த ரெண்டு தேங்காதான் இருந்த, எப்பிடி சரி ரொட்டி சுடுங்க, ஆனா உம்மா”

“என்த”

“இந்த தேங்கைல கலட்டிக்க, காய்ஞ்ச தேங்க மாரி,  ஸ்கூல் போற புள்ளகளிலும், ஒவ்வத்தருக்கு ஸ்பஷல் டலண்ட் ஈக்கி, இந்த காஞ்ச தேங்க ரோட்டி சுட சரில்ல, ஆனா கறிக்கு நல்லம், நீங்க அத கறிக்குதான் எடுக்குஅ, அ ஃ மாரிதான் நானும், ரஷாத்தும். சொல்லுத்த பெருமய எடுக்க வணாம், எனக்கு கவித எழுதுஅ டலண்ட் ஈக்கி ஆனா அவனுக்கு படிக்கிய டலண்ட் தான் ஈக்கி. உம்மா என்ன தட்டிக் கழிக்காம கவித எழுத தூண்டுங்க, ஒருநாள் கம்பனாகவும் மாறாலாம்.”

என மனதில் நெடுநாளாக இருந்த எண்ணத்தை தாயிடம் கூறினான்.

Ibnuasad

Article of Ibnuasad

One thought on “கலட்டிக்கையும் காய்ஞ்ச தேங்கையும்”

  1. Fathima Badhusha Hussain Deen says:

    கிராமத்து பேச்சு நல்லா ஈக்கிது..

Leave a Reply

%d bloggers like this: