கொரோனாவும் வறுமையும்

  • 12

நிலவுக் கன்னிக்கு
செலவுக்குப் பணமில்லை
தொலைவு கண்ணனுக்கு
தொழிலுக்கு வழியில்லை

அடுப்பு எரிகிறது
குழம்புக்கு அரிசியுமில்லை
ஆதரம் தேடுவதற்கு
தனவந்தரும் பிறக்கவில்லை

அரசாங்கப் பணம்
அனைவருக்கும் இல்லையாம்
வெளிநாட்டு பணம் வந்துசேரும் சொல்லையாம்

ஆஸ்ரமத்தில் பிறந்தவருக்கு
அனாதை என்றே பெயர்
அரவணைக்க அயலாரும் இல்லை
இருந்தாலும்
அவர்களுக்குத் தொல்லை

கொள்ளைக்காசி குவிந்து கிடக்கிறது
கொடுத்துதவத்தான் யாரும் இல்லை

இறை யாசகி
இல்லம் தேடிப்போய் யாசிப்பாளா
இதுதான் விதியென்று
உள்ளத்திற்கு புரியவைப்பாளா

வறுமையில் செம்மை
வெறுமையிலும் பொறுமை

கொரோனா செய்த
கோர யாகம்
கொள்ளைக் காரர்களுக்கு
அதில் நல்ல இலாபம்

நல்ல வீடு
நாலுமாடென்றில்லை

ஒரு நேர உண்டிக்காய்
கட்களை புசிக்கவும் முடியாது
கால்நடையை அறுக்கவும் முடியாது

உள்ளதை அடமானம் வைத்து
ஊர்தாண்டிப் பயணம்
ஊரெல்லாம் கடன் பட்டு
ஊதியம் தேடிய படலம்

பட்ட கடன்
படமெடுக்கிறது கொத்தித்தீர்க்க

சுமந்த மண்
சுமையாய் பார்க்கிறது – இதை
சொல்ல நினைக்க

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

நிலவுக் கன்னிக்கு செலவுக்குப் பணமில்லை தொலைவு கண்ணனுக்கு தொழிலுக்கு வழியில்லை அடுப்பு எரிகிறது குழம்புக்கு அரிசியுமில்லை ஆதரம் தேடுவதற்கு தனவந்தரும் பிறக்கவில்லை அரசாங்கப் பணம் அனைவருக்கும் இல்லையாம் வெளிநாட்டு பணம் வந்துசேரும் சொல்லையாம் ஆஸ்ரமத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *