உயர் தேசிய டிப்ளோமாவை வழங்கும்  SLIATE  பற்றிய கண்ணோட்டம்

  • 46

இலங்கையின் கல்வித் துறையில் உயர் தேசிய  டிப்ளோமாவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் SLIATE நிறுவனமும் ஒன்றாகும். இது சமீபகாலத்தில் உயர் கல்வி அமைச்சில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அறிந்திருப்போம்.

1980இல் நிறுவப்பட்ட உயர் கல்வி அமைச்சானது இன்றும் சமூக, பொருளாதார, அபிவிருத்தி துறையில் பாரிய பொறுப்பைக் கொண்டது. இன்றும் எமது கௌரவ பந்துல குணவர்த்தன அவர்கள் பொறுப்புக்களுடனான பணியை சிறப்பாக மேற்கொண்டும் அதனை செயற்படுத்துவதும்  பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். இதன் கீழ் செயற்பட்டுவரும் உயர் கல்வி நிறுவனமே SLIATE ஆகும்.

இலங்கை மேம்பட்ட தொழிற்நுட்பக்கல்வி நிறுவனம்  (Sri Lanka Institute of Advanced Technological Education) SLIATE ஆகும். இது 1994ஆம் ஆண்டு உயர் கல்வித் துறை அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ண பாலா அவர்கள் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி இலங்கை மேம்பட்ட தொழிற்நுட்பக்கல்வி நிறுவனம் (SLIATE) 1995ஆம் ஆண்டு   இலங்கை   மேம்பட்ட தொழிற்நுட்பக்கல்வி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இது உயர் கல்விக்கு மாற்றீடான கல்வியை வழங்கும் நிறுவனமாகவும் இயங்கி வருகின்றது.

பணிக்கூற்று

இதன் பணிக்கூற்றானது “நிலையான அபிவிருத்திக்கான நவீன தொழிற்நுட்பத்துடன் சிறந்த உயர் தேசிய மற்றும் தேசிய இராஜதந்திரிகளை உருவாக்குதல், தொழிற்நுட்ப கல்வியில் சிறந்து விளங்கும் மையமாக மாற்றல்” போன்ற கூற்றுக்களைக் கொண்டது. இது உயர் தேசிய மற்றும் தேசிய டிப்ளோமா படிப்புகளை நிர்வகிப்பதற்கான ஒரு தன்னாட்சி நிறுவனமாக செயல்படுகின்றது.

இது ஒரு சிறிய பல்கலைக்கழகம் எனவும் சிறப்பிக்கப்படுகின்றது. இது ஸ்ரீலங்காவின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. அத்துடன் பொருளாதார வளர்ச்சியின் மாறிவரும் தேவைகள் தொடர்பாக முழு தொழிற்நுட்ப மற்றும் தொழிற்கல்வி முறையை சீர்திருத்துவதும் மறு சீரமைப்பதும் தேசிய அபிவிருத்தி உத்திகளின் மனித வள தேவைகளை பூர்த்தி செய்வதுமாகும்.

தகைமைகள்

இங்கு உயர் கல்வியை தொடர்வதற்கு உயர் தரத்தில் (Advanced Level) மூன்று பாடங்களில்   S   சித்தி இருக்க வேண்டும். அத்துடன்   நியமப்   புள்ளியும் (z.score) சிறந்ததாக   இருக்க   வேண்டும்.  ஆனால், ஏனைய தொழில்நுட்ப கல்லூரி, இதர அரசுசார் கல்வி கூடங்களிற்கு இவ்வாறான தகைமைகள் அவசியம் இல்லை. இதற்கு சாதாரண தரத்தில்   ஆறு பாடம்   சித்தியும் 9ஆம்   வகுப்பு சித்தியை வைத்து   அனைத்து மாணவர்களும்   உள்வாங்கப்படுவார்கள். அத்துடன்   உயர் தரத்தில்   தேர்ந்தெடுத்த துறைக்கேற்ப விரும்பிய   கற்கை   நெறிக்கு விண்ணப்பிக்க   முடியும்.

அத்துடன் முழு நேர, பகுதி நேர அடிப்படையில்   கற்கை நெறிகளுக்காக இணையலாம். பல்கலைக்கழகம் போன்றே இங்கும் முழு நேர கற்கை நெறிக்கான படிப்புகள் இலவசம், விடுதி வசதியுண்டு, நூலக வசதிகளுண்டு, பட்டதாரி விரிவுரை சபை, மகாபொல உதவித்தொகை, இலவச வைபை (wi-fi) இணையசேவை போன்ற சலுகைகளைக் கொண்டது. பகுதி நேர கற்கை நெறிகளுக்கு சிறிதளவிளான கட்டணம்   அறவிடப்படுகின்றது.

இவ்வாறான கற்கை நெறிகளை ATI மூலமாக நிறுவுகின்றது. இது தொழிற்நுட்ப நிறுவனங்களாகும். இது ஒவ்வொரு மாகாணத்திலும் தொழிற்படுகின்றது. தற்போது இது 11 ATI (Advanced Technological Education) களையும், 7 பகுதி நேர ATI பிரிவுகளையும் நிர்வகித்து மேற்பார்வையிடுகின்றது. அந்த வகையில் முழு  நேர  பிரிவுகள், இலங்கையில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களான அம்பாறை (Hardy), பதுளை, தெஹிவளை, காலி, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை, மட்டக்குளி, குருணாகல், கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களிலும் பகுதி நேர நிறுவனங்களாவன அநுராதபுரம், மட்டக்களப்பு, இரத்தினபுரி, சம்மாந்துறை, தங்காலை, வவுனியா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய இடங்களிலும் நிறுவப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இது இயக்குனர், கல்வி ஒருங்கிணைப்பாளரால் நிர்வகிக்கப்படுகின்றது. தற்போது இதன் சேவைகளை துரிதப்படுத்தும் வகையில் 2019 ஒக்டோபர் 28ஆம் திகதி அன்று AHED எனும் உலக வங்கியின் உயர் கல்வி விரிவாக்கம் மற்றும் புதிய மடிக்கணிணிகளை (Laptop), கணிணிகளை (Computer) ஜெனரலிடம் வழங்கியிருந்தமை இதன் தரமான எழுச்சிக்கான உந்துசக்தியினை அளிக்கும் நிகழ்வாகும்.

கற்கைநெறிகள்

இங்கு 14 வகையான கற்கைநெறிகள் உயர் தேசிய டிப்ளோமா (HND) கல்வித்தகைமைகளில் கற்பிக்கப்படுகின்றன. இன்று இக்கற்கைநெறிகளை தொழில்நுட்பவியல் (Technical), தொழில்நுட்பவியல் சாராதது (Non-Technical) என்றும்  பிரிக்கப்பட்டுள்ளது. பொறியியல் (HND  in  Engineering) விவசாயம் (HND in Agriculture), தகவல் தொழில்நுட்பம் (HND in Information Technology), உணவுத் தொழில்நுட்பம் (HND in Food Technology), கணிய   அளவியல்   (HND  in Quantity   Survey) மற்றும்   (HND  in  Consumer   Science   and  product) ஆகியவை தொழில்நுட்பவியலாகவும் ஆங்கிலம் (HND in English), முகாமைத்துவம் (HND in Management), கணக்கியல் (HND in Accountancy), வர்த்தகம் (HND in Business Addministration), விருந்தோம்பலும் சுற்றுலாத்துறையும் (HND in Tourism & Hospitality) மற்றும் HND in Business Fiance போன்றன தொழில்நுட்பவியல் சாராதவையாகவும் பிரிக்கப்பட்டமை மாணவர் எதிர்நோக்கும் பாரிய சவாலாகும். காரணம் இத் தொழில்நுட்பவியல்சார் பாடநெறிகளுக்கு தேசிய  தொழிற்தகைமை (NVQ 5) சான்றிதழ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரிமைக்காக மாணவப் போரட்டம்

இவ்வாறான தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் உயர் கல்வி  அமைச்சில் இருந்து 2020-01-20 ஆம் திகதி அன்று விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உயர் கல்வி அமைச்சில் இருந்து தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி 5இல் கையளிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரமூடாக உயர் தேசிய கல்லூரிகளை தொழிற்நுட்ப கல்லூரிகளாக மற்றப்படபோவதாகவும் இதற்காக 19 கல்லூரிகளில் தெஹிவளை, மட்டக்குளி, காலி, அம்பாறை, யாழ்ப்பாணம் போன்ற 5 கல்லூரிகள் தொழிற்நுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றப்படவுள்ளன.

இவ்வாறான மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக உயர் கல்வி அமைச்சு கூறியுள்ளது. SLIATE இனால் வழங்கப்படும், கற்கைநெறிகள் மிகவும் தரம் வாய்ந்தவை என்பதனால் இதனை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்சத்தில் குறித்த துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலகுவாக தரமான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு இக்கற்கைநெறிகள் தரமானவையாகும். அத்துடன் குறித்த துறைக்கான பட்டப்படிப்பினை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (Open University of Sri Lanka) உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஓரிரு வருடங்களில் நிறைவு செய்ய முடியுமாக காணப்பட்ட போதிலும், தற்போது திறந்த பல்கலைக்கழகங்களின் (Open University of Sri Lanka)  கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறந்த அனுபவக்கல்வியும் வழங்குவதில் முன்னணி வகிக்கின்றது.

இங்கும் பல்கலைக்கழகங்கள் போலவே GPA சோதனை மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்கின்றது. ஒரு தவணைக்கான (Semester) நேர  அட்டவணை (Time Table) உள்ளது. அடுத்த பல் ஊடக (Multi  Media) வசதிகளுடன் மொழி அட்டை மற்றும் தொழிற்நுட்ப ஆய்வகங்கள் போன்றவை பல்கலைக்கழகங்களுடன் ஒத்துப்போகும் விடயங்களாகும்.

திடீரென உயர் கல்வி அமைச்சு SLIATE இனை நீக்கியதன் விளைவாக HND  (Higher National Diploma) மேற்கொள்ளும் மாணவர்கள் இதற்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டனர். அதில் சாதாரண தரத்தில் ஆறு பாடம் சித்திபோதும் என  கூறும் கற்கைநெறி எவ்வாறு டிகிரி பெறுவதற்கு தகுதிஉடையது? எனில், உயர் தரத்தில் 3S உடனான நியமப்புள்ளியுடன் (Z.score) கூடியது எந்த விதத்தில் தகுதி குறைந்தது? இத்தனை காலம் எமது பாடத்திட்டம் (Syllabus) இனை Update செய்து தாருங்கள். ATI இல்  உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள் என்ற எம் கோரிக்கைகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் எவ்வித தீர்வும் இல்லை. என்றும் தாம் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்பட்டதாக தமது ஆதங்கங்களை முன்வைத்தனர். அத்துடன் (Technical Colleges) தொழிற்நுட்ப கல்லூரிகளும் COT என்ற நிறுவனங்களும், உயர் கல்வி அமைச்சின் கீழ் தொழிற்படுவதாகவும் அறிவித்தனனர். SLIATE இன் கற்கை நெறிகளையும் டிகிரி (Degree) தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும் தம் கருத்துக்களை பதிவு செய்தனர்.

SLIATE நிறுவனம் பல்கலைக்கழகங்கள் போலவே கற்கை நெறிகளை வழங்குவதுடன் சிறந்த பட்டத்தோடு வேலை வாய்ப்புக்களையும் வழங்குகின்றது. இதனால் உயர் கல்வி அமைச்சில் இருந்து நீக்கப்பட்ட இந்நிறுவனம், ATI மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் உயர் கல்வி அமைச்சானது, மீண்டும் SLIATE நிறுவனத்தினை தனக்கு கீழ் கொண்டுவந்துள்ளது எனலாம்.

இவ்வாறான நிறுவனங்கள் மூலமே இலங்கையின் மாணவ சமுதாயம் மேலும் கல்வியில் எழுச்சியடைகின்றது எனலாம். இவ்வாறான உயர் கல்வி நிறுவனங்கள் மாணவ சமுதாயத்தினை உலகளாவிய ரீதியில் எழுச்சியடையச் செய்கின்றன. அத்துடன் சிறந்த எதிர்காலத்தினையும் வழங்குகின்றது. இவ்வாறான கல்விசார் உயர் கல்வி நிறுவனங்கள் மேலும் உருவாகி தம் சேவையை நிலைநாட்ட வேண்டும். இலங்கையின் உயர் கல்வி இதனூடாக பாரிய அளவிளான எழுச்சியை அடையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

றிஸ்வான்    ஜுஸ்லா,
2ஆம் வருடம்,
கல்வியியல் சிறப்புக்கற்கை,

கல்வி பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

SLIATE Official Website 

இலங்கையின் கல்வித் துறையில் உயர் தேசிய  டிப்ளோமாவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் SLIATE நிறுவனமும் ஒன்றாகும். இது சமீபகாலத்தில் உயர் கல்வி அமைச்சில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி பயிலும்…

இலங்கையின் கல்வித் துறையில் உயர் தேசிய  டிப்ளோமாவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் SLIATE நிறுவனமும் ஒன்றாகும். இது சமீபகாலத்தில் உயர் கல்வி அமைச்சில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் கல்வி பயிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *