தாகம்

எனக்குள் தாகிக்கிறது!
இது தண்ணீரை தேடிய
ஓர் தாகம் அல்ல- மாறாக
எனது இலக்குகளை
அடைவதற்கான தாகம்

எனது இந்த தேடல் பயணத்தில்
எங்கு பார்த்தாலும்
கானல் நீர் தான் தெரிகிறது

ஏற்கனவே கானல் நீரை கண்டு
ஏமாற்றம் அடைந்த
எனது கண்கள் இப்போது
முன்னெச்சரிக்கையாக இருக்கிறது

நான் இப்போது தேடுவது
கானல் நீரை அல்ல
அடிபட்ட என் வாழ்க்கை
காயங்களுக்கு மருந்திடப் போகும்
ஓர் நீரை தான்!

அந்த நீர் தான் எனது இலக்குகள்!
ஆம் – எனக்குள் தாகிக்கிறது
எனது வாழ்வின் மைல்கற்களை
அடையும் வரை இந்த தாகம் ஓயாது.

அன்று மழை போல் வெற்றிகள்
எனது தாகத்தை நிச்சயம் தீர்க்கும்
அந்த நாளுக்காக
தாகத்துடன் காத்திருக்கிறேன்!

 Noor Shahidha.
Badulla
தமிழ் கவிதைகள்

Leave a Reply