எரிந்தது நூலகமா ? இல்லை தாயகம்

  • 19

தெற்காசியாவிலேயே அறிவுப் பொக்கிஷமாக வர்ணிக்கப்படுகின்ற, இலங்கையின் ஓர் உன்னத சொத்தே யாழ்ப்பாண நூல்நிலையம். இலங்கையில் ஏற்பட்ட இனமுருகலில் இழந்த அதி உன்னத சொத்தும் இந்த யாழ் நூல்நிலையமாகும். இந்த நூல்நிலையம் 1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி எறியூட்டப்பட்டது.

இஸ்லாமிய உலக வரலாற்றிலும் முஸ்லிம்களை வீழ்த்த மேற்கொண்ட பணிகளில் ஒன்றே பக்தாதில் பல்லாயிரம் நூல்கள் அழிப்பு, அவ்வாறுதான் இலங்கை தமிழர் வரலாற்றிலும் ஓர் இனத்தை முடக்க மேற்கொண்ட பணியாகத்தான் இதுவும் உள்ளது.

இது பற்றி “விழிகள் தேடும் விடியல்” என்ற கவிதை நூலில் கவிச்சாரல் சாரா எழுதிய கவிதை.

ஏரிந்தது நூலகமா ? இல்லை தாயகம்

தமிழீழ தாயகத்திலே
தடம் பதித்து
செல்லப்பாவின் சிந்தனையில்
சிந்திய சேவை
சிகரம் எய்திட்ட
சோதியை சின்னமேயறியாது
சரித்து சவப்பெட்டிக்குள்
சாய்த்திட்ட சதிகாரர்களே!

கல் தோன்றி மண் தோன்றா
காலத்தில் உருவான
சரித்திரம் அதை
சத்திய விரல்களால்
செதுக்கிய சுவடிகளோடு
பட்டை தீட்டியது போல்
பட்டென்று பொறித்திடும்
பத்திரிகைகளும்
பல்லாயிரக் கணக்கான
நிகண்டுகளும்
கருகி காற்றிலே
கலந்திட்ட கயவர்களே!

பாடக்கல்வியில் செய்திட்ட மோசடி
பரீட்சைப் புள்ளியில்
எல்லை மீற எழுந்த கோபமே
உரிமையை கேட்க – அதில்
உண்டான பிணக்கு துளிர்விட
காவல் புரிய வேண்டிய
காவல் துறையே
அரை காசுக்காய்
அரசியல் வாதிகளுக்கு
அடிமையாகி

அறிவு பெட்டகமாம்
இருபதாம் நூற்றாண்டின்
இலக்கிய நூலகத்தை ஒழித்தனரே!

தமிழர் விட்டுச் சென்ற
தடயத்திற்கு
நெருப்பிட்டு நீராக்கியதில்
நெகிழ முடியா நெஞ்சங்கள்

ஆறா வடுக்களாக ஆழ்மனதில்
வீறுகொண்டெழுந்தும்
அந்நிய தேசத்தில் அடைக்கலம் தேடி
அன்னை தேசத்தை விட்டோரும்
அவலத்திற்கு ஆளாக்கியோரே
நம் சுவடுகளை நீ அழித்தாலும்
நீக்ககிடயியலா அறிவெனும்
உளி கொண்டு பொறித்திடுவோம்
எம் நாமத்தை
சிலை மீது எழுத்தாய் மிளிர!

புரிந்து கொள்ளுங்கள்
மதி கெட்ட மடையர்களே
அக்கினி குண்டத்தில்
எரிந்தது நூலகமல்ல தாயகமே!

விழிகள் தேடும் விரயல்
கவிச்சாரல் சாரா

Follow us Twitter 

தெற்காசியாவிலேயே அறிவுப் பொக்கிஷமாக வர்ணிக்கப்படுகின்ற, இலங்கையின் ஓர் உன்னத சொத்தே யாழ்ப்பாண நூல்நிலையம். இலங்கையில் ஏற்பட்ட இனமுருகலில் இழந்த அதி உன்னத சொத்தும் இந்த யாழ் நூல்நிலையமாகும். இந்த நூல்நிலையம் 1981 ஆம் ஆண்டு…

தெற்காசியாவிலேயே அறிவுப் பொக்கிஷமாக வர்ணிக்கப்படுகின்ற, இலங்கையின் ஓர் உன்னத சொத்தே யாழ்ப்பாண நூல்நிலையம். இலங்கையில் ஏற்பட்ட இனமுருகலில் இழந்த அதி உன்னத சொத்தும் இந்த யாழ் நூல்நிலையமாகும். இந்த நூல்நிலையம் 1981 ஆம் ஆண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *