கடற்கொள்ளையர்களின் புதையல்

  • 9

அறிமுகம்

கடற்கொள்ளையர்களின் புதையல். (The Treasure of Pirates) இறைவன் படைப்பில் மிகப்பெரிய உயிரினம் எப்படி கடலில் தான் வாழ்கின்றதோ அதே போல் மனிதன் படைப்பில் மிகப்பெரிய வாகனமான கப்பல்களும் கடலில் தான் பயணிக்கின்றன.

இந்த கப்பல்களையும் கடல்வாணிபங்கள் பற்றியும் எண்ணற்ற ஆங்கில வழி வரலாறுகள் உள்ளன. ஏன் தமிழிலும் கூட இவ்வாறான படைப்புக்கள் உள்ளன.

காற்றையும் கடலையும் கிழித்து கொண்டு மிடுக்காக பயணிக்கும் கப்பல்கள் கம்பீரத்தின் சின்னங்களாகவே கருதப்படுகின்றன.

16ம் நூற்றாண்டுகளில் முன் பகுதிகளில் கடல் மார்க்க வாணிபங்கள் ஆரம்பித்த போதே கடற்கொள்ளை என்ற விடயமும் ஆரம்பித்து விட்டது. கடற்கொள்ளையர்கள் தமக்கென தனியான சாம்ராஜ்யங்களை அமைத்து கொண்டு கப்பல்களையும், அதில் ஏற்றி வரும் வர்த்தக பொருட்களையும் நடுக்கடலில் வைத்தே கொள்ளை அடித்து விடுவார்கள்.

இது தவிர கடற்கொள்ளையர்களிடத்தே புதையல் வேட்டை, மூடநம்பிக்கை, மந்திர தந்திர வழிபாடுகள் எல்லாமே புரையோடிப்போய் இருந்தன. அவை பற்றி ஏராளமான கதைகளும், வரலாறுகளும், கற்பனை சரிதங்களும் உள்ளன.

கடற்கொள்ளையர்களின் புதையல் என்ற எனது இந்த புதிய சிந்தனையும் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாவதுடன் சில பல உண்மை தகவல்களையும் இணைத்து கொண்டு புதிய வரலாக மாறப்போகின்றது.

நவீனவரலாற்றில் இருந்து பண்டைய வரலாறுவரை தொட்டு செல்ல இருக்கின்றது.

இங்கே பழம் பெரும் கடல் புதையல் ஒன்று பற்றியும் அதனை அடைவதற்காக பல குழுக்கள் முயற்சிப்பதையும், இடை இடையே ரசனைக்காக சில கற்பனை வரிகளையும் இணைத்துள்ளேன்.

வாசகர்களான நீங்கள் உங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்லதோ தீயதோ நிறையதோ குறையதோ எல்லா வகையான கருத்துக்களையும் பதிவிடுவதன் மூலம் எனது இந்த முயற்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

A.L.F. Sanfara.

அறிமுகம் கடற்கொள்ளையர்களின் புதையல். (The Treasure of Pirates) இறைவன் படைப்பில் மிகப்பெரிய உயிரினம் எப்படி கடலில் தான் வாழ்கின்றதோ அதே போல் மனிதன் படைப்பில் மிகப்பெரிய வாகனமான கப்பல்களும் கடலில் தான் பயணிக்கின்றன.…

அறிமுகம் கடற்கொள்ளையர்களின் புதையல். (The Treasure of Pirates) இறைவன் படைப்பில் மிகப்பெரிய உயிரினம் எப்படி கடலில் தான் வாழ்கின்றதோ அதே போல் மனிதன் படைப்பில் மிகப்பெரிய வாகனமான கப்பல்களும் கடலில் தான் பயணிக்கின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *