மர்ம தீவைத் தேடி பயணம்

  • 9

கடற்கொள்ளையர்களின் புதையல்
(The treasure of pirates)
பாகம் 01

அடலாண்டிக் பெருங்கடலை கிழித்து கொண்டு ஒரு பாரிய கப்பல் செல்கின்றது. கப்பலின் பெயர் மோரிச். கிரேக்கத்து சிப்பாய்களும் ஜெனரல் கில்பெர்ட் அவர்களும் அதில் பயணித்து கொண்டு இருக்கின்றனர்.

பாதி புகைக்கப்பட்ட சுருட்டை தூக்கி கடலில் வீசிவிட்டு கப்பலில் கட்டி வைக்கப்பட்டு இருந்த ஒருவனை நோக்கி வந்தான் கில்பெர்ட்.

ஏற்கனவே பலரால் அடிக்கப்பட்டு இரத்தம் வடிய தலையை தொங்க போட்டு கொண்டு நின்றான் அவன். சிறிய கத்தியை எடுத்து அவன் நாடியில் வைத்து முகத்தை தூக்கி, அங்கிருந்த அவரது அடியாட்களிடம்.

“எங்கிருந்து இவனை பிடிச்சீங்க?” என்று கேட்டார்.

அவர்களுள் கொஞ்சம் கில்பெர்ட்டுக்கு நெருக்கமாக வந்தான் அவன் பெயர் தாமஸ்.

“மடகஸ்காரில் கப்பல் கட்டற இடத்தில் இருந்து கொண்டுவந்தோம். இவனை கண்டுபிடிக்க பட்ட பாடு, அப்பப்பா, சரியான திமிர் பிடிச்சவன் பாஸ், அந்த தீவு எங்க இருக்குன்னு கேட்டு இவ்வளவு அடிச்சும் ஒரு வார்த்தை கூட சொல்லுறானில்லை.” என்றான்.

“உயிர் மேல இவனுக்கு ஆசையில்ல போல இருக்கு, ஒன்னுத்துக்கும் உதவாத இந்த குப்பையை தூக்கி கடல்ல போட்டுடுங்க.” என்று விட்டு மறுபடியும் பைனாக்குளரை எடுத்துக்கொண்டு கப்பலின் விளிம்புக்கு சென்று விட, இங்கே இவனை கட்டுகளை அவிழ்த்து இழுத்து கொண்டு போய் கடலில் வீசி விட்டார்கள்.

***********

இரண்டு நாட்களுக்கு பிறகு ஹவாய் தீவில் உள்ள ஒரு கடலியல் ஆராய்ச்சி கூடம்.

கடலுக்குள் அமைக்கப்பட்டு இருந்த அந்த ஆராய்ச்சி கூடத்தின் மேற்பகுதி ஒரு குட்டி தீவு போல தோற்றமளித்தது. கிட்டத்தட்ட நாற்பதுக்கு மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களும் இதர ஊழியர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

அருகிவரும் கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்து அவற்றை தேடிப்பிடித்து இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தி அவற்றை வளர்த்து கடலில் விடுவதே இவர்களின் வேலை. பக்கத்து தீவுக்கு செல்வதற்கு வசதியாய் ஒருசில படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும், தேவைக்கு அதிகமான பலூன் வளையங்களும் அங்கு இருந்தன.

கடலுக்குள்ளேயே ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனியான கூடு அமைத்து அவற்றை பராமரித்து வந்தனர்.

ஐரிஸ், லில்லி, ஜிம்சன் மூவரும் இங்கு தொழிநுட்ப திருத்த வேலை செய்யும் ஆட்கள். இவர்களுக்கும் கடலியல் ஆராய்ச்சிகளுக்கும் தொடர்பு கிடையாது. அங்கு அடிக்கடி ஏற்படும் தொழினுட்ப கோளாறுகளை திருத்துவதற்கு இவர்களை விட்டால் வேறு ஆட்கள் இல்லை.

என்ஜினில் ஏதோ திருத்துவதற்காக ஐரிஸ் கடலுக்குள் சுழியோடி போய் இருந்தாள். மேலே லில்லியும் ஜிம்சனும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“நான் இந்த இடத்துக்கு வந்து மூணு வருஷம் ஆகுது. நீயும் ஐரிஸும் மட்டும் தான் எனக்கு தெரிஞ்ச உலகம் என்னு சொல்லுவேன். இங்க இருக்குற திமிர் பிடிச்ச சைன்டிஸ்ட் நம்மள கண்டுக்கிறானுங்களும் இல்ல.” என்றான் ஜிம்சன்.

அதற்கு லில்லி, “இந்த கஷ்டம் எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு சும்மா ஃபீல் பண்ணாதே” என்றாள்.

“ஆமா என்ன ரொம்ப நேரமாச்சு. இன்னும் ஐரிஸ் மேலே வரவே இல்லை. நான் வேணா போய் பாக்கட்டுமா?” என ஜிம்சன் கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவளே எல்லாத்தையும் பார்த்துப்பா. நம்ம வேலையில நமக்கு சீனியர் அவ.” என்று சொல்லும் போதே நீச்சலுடையில் நீச்சல் கண்ணாடியையும் அணிந்து கொண்டு ஐரிஸ் மேலே வந்தாள்.

“அதோ வந்துட்டாள்.”

கட்டிடத்துக்கு நீந்தி வரும் போது அவளை சுற்றி இரு சுறாமீன்கள் வட்டமிட ஜிம்சனும் லில்லியும் பயந்து போய் விட்டார்கள். கடைசியில் பார்த்தால் அவை இரண்டும் டால்பின் மீன்களை போல ஐரிஸ் கூட விளையாடி விட்டு அவள் போட்ட ஏதோ ஒன்றை சாப்பிட்டு கொண்டே சென்றுவிட்டன.

“ரெண்டு பேரும் என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டுக்கொண்டே இவர்களை நெருங்கினாள்.

“எப்படி அவ்வளவு பயங்கரமான சுறாமீன்களை நண்பர்கள் ஆக்கி கொண்டாய்?”

“அது ஒரு ரகசியம்.” என்று சிரித்து கொண்டே சொல்ல மூவரும் அவர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த கூடத்துக்கு சென்றனர்.

**********

கிரேக்கத்தில் உள்ள கப்பற்படை நிலையம்.

“ஜெனரல் கில்பெர்ட் போன கப்பல் காணாம போய் இருக்கு.” என்று ஒருவன் தகவலை கேப்டன் குக் கிட்ட சொல்லி கொண்டு இருந்தான்.

“இதோட பதினேழு கப்பல்களை தொலைச்சி இருக்கோம். அந்த தீவை கண்டுபிடிக்குற முயற்சியில் அடுத்து நானே களமிறங்க போறேன். நம்ம கப்பலை தயார் படுத்துங்க.” என்று கட்டளையிட்டார் கேப்டன் குக்.

தொடரும்.
A.L.F. Sanfara

 

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 01 அடலாண்டிக் பெருங்கடலை கிழித்து கொண்டு ஒரு பாரிய கப்பல் செல்கின்றது. கப்பலின் பெயர் மோரிச். கிரேக்கத்து சிப்பாய்களும் ஜெனரல் கில்பெர்ட் அவர்களும் அதில்…

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 01 அடலாண்டிக் பெருங்கடலை கிழித்து கொண்டு ஒரு பாரிய கப்பல் செல்கின்றது. கப்பலின் பெயர் மோரிச். கிரேக்கத்து சிப்பாய்களும் ஜெனரல் கில்பெர்ட் அவர்களும் அதில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *