நிறைகுடம் ததும்பாது குறைகுடம் ததும்பும்

  • 10

ஒரு ஆலிம் or பல உலமாக்கள் மார்க்க போதகர்கள் பெற்றிருக்க வேண்டிய மார்க் கல்வியும் உலக கல்வியின் அவசியமும்.

கல்லாதவனுமும் கற்றவனும் எப்படி சமமாக முடியும்?

உலமாக்கள் என்பவர்கள் வெருமெனே மார்க்க கல்வி என்பதோடு தனது அறிவை சுருக்கிக் கொள்ளாமல் உலக அறிவையும் நிலமைக்கு ஏற்ற அறிவையும் பெற்றிருப்பது மிக அவசியமாகும்.

ஒரு உலமா என்பவர் ஆலிமாக, விஞ்ஞானியாக, வைத்தியனாக, பொறியியலாளராக, பல் துறை சார் நிபுணத்துவத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் இவைகள் அனைத்திலும் தேவையான அறிவு இருப்பதோடு நாம் இருக்கும் மார்க்க துறையில் எல்லையற்ற அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதே அவசிமாகும்.

அப்போதுதான் ஒரு சமூகத்தை அவனால் வழிநடத்த முடியும். இல்லை என்றால் ஏதாவதொன்றை மார்க்கம் என்ற பெயரில், தான் தான் எல்லாமே கற்றரிந்த அறிவாளி என்று காட்டிக் கொண்டு கண்டதையெல்லாம் மார்க்கம் என கூத்தாடித் திரிவார்.

இதனால் உண்மையான அறிவு வாய்ந்த மௌலவி இனத்திற்கும் உலமா சமூகத்திற்கும் சேரு பூசும் வேலையை இப்படிப்பட்டவர் மெற்கொள்கிறார்கள். ஒரு சிலர் விடும் தவறினால் ஒட்டுமொத்த மௌலவி சமூகமும் நிந்திக்கப் படுகிறது. சமூகமும் வழிகேட்டிலே செல்கிறது.

இதனை இவர்கள் உணர்ந்து தகுதியுடையவர்களுக்கு மேடையை கொடுத்து விட்டு அவர்கள் தானாகவே ஒதுங்கிக் கொள்வது ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்திற்கும் இவர்கள் செய்யும் மிகப்பெரிய நன்மையாக அமையும். இன்ஷா அல்லாஹ்.

P.T.KASEER Azhary.

ஒரு ஆலிம் or பல உலமாக்கள் மார்க்க போதகர்கள் பெற்றிருக்க வேண்டிய மார்க் கல்வியும் உலக கல்வியின் அவசியமும். கல்லாதவனுமும் கற்றவனும் எப்படி சமமாக முடியும்? உலமாக்கள் என்பவர்கள் வெருமெனே மார்க்க கல்வி என்பதோடு…

ஒரு ஆலிம் or பல உலமாக்கள் மார்க்க போதகர்கள் பெற்றிருக்க வேண்டிய மார்க் கல்வியும் உலக கல்வியின் அவசியமும். கல்லாதவனுமும் கற்றவனும் எப்படி சமமாக முடியும்? உலமாக்கள் என்பவர்கள் வெருமெனே மார்க்க கல்வி என்பதோடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *