திருமண மேடையில் கால் வைக்கப்போகும் பெண்களின் கவனத்திற்கு!

  • 31
பெற்றோர்களே அவதானம்!

சகோதரிகளே! இன்று எம் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன தெரியுமா?

மகளை பேருக்கு படிக்க வைத்து முடித்து விட்டு, அவளது இலட்சியங்களை எட்டாக் கனியாக தொலைவாக்கி, அவளை அவசரமாக திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

ஏன் இந்த நிலை?

ஏனென்றால் மகள் உயர்கல்வி, பட்டப்படிப்பு  என்று தனது படிப்பை தொடர்ந்தால், மகளுக்கு வயதும் கூடி மாப்பிள்ளை கிடைக்காது என்ற மடத்தனமான நம்பிக்கையே இன்றைய அவசரத் திருமணங்களுக்கு காரணமாகின்றது.

“அவசரம் ஷைத்தானின் புறம் இருந்து வரக்கூடியது”

மகளுக்கு யார் மாப்பிள்ளை தருவாறோ என்று தினமும் சஞ்சலப்படும் பெற்றோரே! ஏன் உங்கள் மகளுக்கான வாழ்க்கையை இறைவன் அமைத்து தருவான் என்று சிந்திக்க தவறுகின்றீர்கள்? எங்கே உங்களது இறை நம்பிக்கை? மகளை படைத்தவன் ஒருவன் இருக்க மனிதனிடம் அடைக்கலம் தேட நினைப்பது சரி தானா?

மகள் கரம் பற்ற போகிறவன் நல்லவனா?இல்லை நல்லவனாக நடிப்பவனா என்று கூட தெரியாமல்  மகளை திருமணம் முடித்து கொடுக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்னரே கணவனின் உண்மை சுயரூபம் தெரிய வருகிறது. இப்போது அது தெரிந்து பயனேது? அவன் தான் ஒரு குழந்தையையும் வயிற்றில் கொடுத்து விட்டானே! இனி காலம் முழுக்க தீராத  குற்றம் செய்தவள் போல் நிம்மதியற்ற வாழ்வை வாழ்ந்து உங்கள் மகள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? அது தானா உங்கள் கண்குளிர்ச்சி?

கிளி போல் வளர்த்த உங்கள் அன்பு மகளை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ நரியிடம் ஒப்படைப்பது சரி தானா?

பெற்றோர்களே ஜாக்கிரதை!

திருமணம் எனும் போதே பெற்றோர்கள் தேடுவது கை நிறைய சம்பாரிக்க கூடிய மாப்பிள்ளையை தான். ஏனெனில் தான் பட்ட கஷ்டத்தை மகள் படக்கூடாது என்பதற்காக. அந்த எண்ணம் தவறல்ல.

என்றாலும் அவன் தொழுகையாளியா? ஒழுக்கம் பேணுபவனா? நேர்மையாக உழைப்பவனா? பகுத்தறிவுள்ளவனா? என்று யாரும் தேடிப் பார்ப்பதில்லை. இது ஓர் கசப்பான உண்மை! பணம் தான் பெரிதாக தெரிகின்றது. அதற்கு ஏற்றாற் போல் இன்றைய சில தரகர்களும் சுயலாபம் கருதி மென்மேலும்  மாப்பிள்ளையை வர்ணித்து மெருகூட்டியே கூறுகின்றனர்.

இப்படி வெறும் பொய்யால் கோர்க்கப்பட்ட ஓர் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுக்கும் தரகர்களே! பெண் பிள்ளைகளின் விடயத்தில் விளையாடி, அவளது கண்ணீரை உங்கள் தலைமுறைக்கே சாபமாக ஏற்க நீங்கள் தயாரா? சற்று சிந்தியுங்கள்!

பெற்றோரே! இது கணவன் என்ற பெயரில் கயவர்கள் வாழும் காலம். உங்கள் மகளது கற்பை கயவனிடமா விலை பேச ஆசைப்படுகிறீர்கள்? அவனோ இவளிடம் தனது இச்சைகளை தீர்த்து விட்டு அவளை சப்பிவிட்டு துப்பிய உணவுக்கவளமாய் துப்பி விடுவான். துப்பப்பட்ட உணவுக்கு மதிப்பேது? அது போல்  கற்பிழந்த உங்கள் மகளுக்கு சமூகத்தில் மதிப்புண்டா?

ஏன் மொட்டுக்களை மலரும் முன் சிதைக்கின்றீர்கள்? அவை பூக்களாக மலர்ந்து; இதழ் விரித்து; மணம் பரப்பி; காற்றில் தலையசைத்து ஆடுவதை காண பெற்றோரே உங்களுக்கும் ஆசையில்லையா?

பூக்களுக்கு இருக்கும் மதிப்பும் வசீகரமும் மொட்டுக்களுக்கு இருப்பதில்லை. எனவே மொட்டுக்களை நீங்கள் வலுக்கட்டாயமாக பூவாக்க நினைக்க வேண்டாம். அவற்றை சுதந்திரமாக விட்டு விடுங்கள். கால மாற்றத்தால் அவை தானாக பூக்களாக மாறும். அப்போது அந்த பூக்களைப் பறிக்க நீங்கள் விரல் தேட தேவையில்லை. காரணம் அந்த பூக்களுக்கு தகுதியான விரல்கள் உங்களை தேடி வரும்.

மகளுக்கு தகுதியான வாழ்க்கை வரும் வரை பொறுமையாக இருங்கள். அந்த பொறுமைக்கான கூலி சாலிஹான கணவனாக உங்கள் மகளை வந்தடையும். அல்லாஹ்வின் நாட்டப்படி உங்கள் மகளுக்கான சிறந்த வாழ்வை அல்லாஹ் அமைத்து தருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

நிச்சயமாக நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்களையே இறைவன் அமைத்துத் தருவான். இறை நியதி எப்போதும் மாறாது. கால தாமதம் ஆகும். ஆனால் தவறிப் போகாது.”

Noor Shahidha.
SEUSL
Badulla.

Follow on Twitter 

பெற்றோர்களே அவதானம்! சகோதரிகளே! இன்று எம் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன தெரியுமா? மகளை பேருக்கு படிக்க வைத்து முடித்து விட்டு, அவளது இலட்சியங்களை எட்டாக் கனியாக தொலைவாக்கி, அவளை அவசரமாக திருமணம் செய்து…

பெற்றோர்களே அவதானம்! சகோதரிகளே! இன்று எம் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன தெரியுமா? மகளை பேருக்கு படிக்க வைத்து முடித்து விட்டு, அவளது இலட்சியங்களை எட்டாக் கனியாக தொலைவாக்கி, அவளை அவசரமாக திருமணம் செய்து…

One thought on “திருமண மேடையில் கால் வைக்கப்போகும் பெண்களின் கவனத்திற்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *