டோரடோ புதையலைத் தேடிப் பயணம்

  • 7

கடற்கொள்ளையர்களின் புதையல்
(The treasure of pirates)
பாகம் 02

லில்லியும் ஐரீஸும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஜிம்சன் கூலாக ஒரு கொக்கோ கோலாவை அருந்திக்கொண்டு அங்கு வந்தான்.

“வா ஜிம்சன். வேலையை முடிச்சிட்டியா?” என்று கேட்டாள் லில்லி.

“அந்த என்ஜினுக்கு மரக்கழண்டு போய்டுச்சி என்னு நினைக்கிறேன். எப்போ பாரு ரிப்பெயர் ஆகிட்டே இருக்கு.” என்று சலித்து கொண்டான்.

“நேத்து தானே நான் அதை சரி பண்ணேன்.” என்றாள் ஐரிஸ்.

“இவனுங்க இங்க மீனை எதுக்காக வளர்க்குறானுங்க என்னே புரியல்ல. அந்த பெரிய திமிங்கிலம் தான் தப்பிக்க பார்த்து இருக்கு அதுதான் அடிக்கடி எஞ்சின் விசிறி டேமேஜ் ஆகிடுது.” என்றான்.

“எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு. இனப்பெருக்கம் பண்ணுறதா சொல்லுறாங்க. ஆனா இங்க குட்டிங்க எதுவும் காணும். ஒரு வேளை உள்ளே லேப்ல வெச்சி இருக்காங்களோ என்னவோ!” என்றாள் லில்லி.

“அழிஞ்சி வர்ர உயிரினங்கள் என்றால் சும்மாவா. அதுக்கு நிறைய ப்ரோஸஸ் இருக்கும். கண்டிப்பாக இவங்க கீழே கூண்டுல உள்ள மீன்களோட குட்டிகளை லேப்ல தான் உருவாக்கிட்டு இருக்காங்க போல.” என்றாள் ஐரிஸ்.

“சரி அதை விடு. நம்ம வேலை எதுவோ அதை மட்டும் செய்யலாம். அவங்க தான் லேப்ல நம்மள உள்ள போக விடமாட்டாங்களே. ஹே இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும்.” என்றான்.

“என்னது?”

“இன்னிக்கி புதுசா ஒரு சயின்டிஸ்ட் வரானாம். ரொம்ப பெரிய எக்ஸ்பேட் ஆம். அவன் பேரு கூட, ஏதோ டர்ரூ, புர்ருன்னு சொன்னாங்க.” என்றுவிட்டு அவன் பெயரை யோசித்து கொண்டிருந்தான்.

“ஆமா உனக்கெப்படி இது தெரியும்?” என லில்லி கேட்டாள்.

“அதான் நம்ம கேன்டீன் பையன் மார்கோ சொன்னான். அவங்க கேன்டீன்ல இருந்து பேசிட்டு இருந்ததை கேட்டனாம். வரப்போறவர் ரொம்ப ஸ்ட்ரிட் என்னும் தப்பு பண்ணா கண்ணா பின்னா என்னு திட்டிடுவானாம்.” என்றான் ஜிம்சன்.

“சும்மாவே இதுங்க பண்ணுற அலப்பறை தாங்காது. இதுல புதுசா ஒருத்தனா? பாப்போம்.” என்று சொல்லி கொண்டே காதில் ஹேண்ட் பிரீயை மாட்டிக்கொண்டு நகர்ந்தாள் ஐரிஸ்.

**************

“கேப்டன் தேவையான ஆயுதங்கள் மற்றும் வீரர்களை தயார்பண்ணியாச்சு. இன்னிக்கே பயணத்தை ஆரம்பிக்கலாம்.” என்றான் ஒரு சிப்பாய்.

“நல்லது மேப்பை என்கிட்ட கொடுங்க.” என்றான் கேப்டன் குக்.

அவ்வாறே கொடுக்கப்பட்டது. அவரும் அவரது ஆட்களும் டேஞ்சர் வூட் என்ற அந்த பிரம்மாண்டமான கப்பலில் ஏறிக்கொண்டனர். பொழுது போக்கிற்காக சில அழகிய அடிமைபெண்களையும் கப்பலில் ஏற்றி கொண்டனர். கேப்டன் குக்கும் அவரது ஆட்களும் காணாமல் போன கப்பல்களுக்கு என்னவாயிற்று என்பதனையும், பலஆயிரம் வருடங்களுக்கு மேலாக தேடப்பட்டு வரும் டோரடோ புதையலை கண்டுபிடிக்கவும் புறப்பட்டனர்.

************

மதிய நேரம் ஆகி இருந்தது. கட்டிடத்தின் மேல் தளத்தில் அனைத்து விஞ்ஞானிகளும் குழுமி இருந்தனர். கீழே இருந்து இதனை பார்த்து கொண்டிருந்த ஐரிஸ்,

“ஓவரா பில்டப் பண்ணுறாங்க. ஏதோ பில்கேட்ஸ்ஸே வந்த மாதிரி.” என்று சொல்லும் போதே ஹெலிகாப்டர் சத்தம் காதை கிழித்தது. மேல் தளத்தில் தான் ஹெலிகாப்டர் இறங்கியது. இங்கிருந்து பார்ப்பதற்கு முகம் சரியாக தெரியவில்லை.

இவர்கள் மூவரும் வெய்யில் கண்களை கூச கையால் மறைத்து கொண்டு அண்ணாந்து பார்த்தார்கள். வந்தவனை எல்லோரும் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

பார்ப்பதற்கு சூப்பர் ஹேன்ட்சமாய் பக்கவாட்டில் ஒரு புன்னகையோடு அவனும் அவர்களிடம் அறிமுகமாகி கொண்டான்.

அப்போது ஐரிஸ் கையில் இருந்த சில்வர் தட்டின் வெளிச்சம் அவள் வெயிலுக்கு கண்களை மறைக்கும் போது நேரே மேலே நின்று கொண்டிருந்த புது விஞ்ஞானியின் முகத்தில் தெறிக்க அவனும் கீழே அது யாரென்று பார்த்தான்.

வெளிச்சம் பட்டு அவன் முகம் தெளிவாக தெரிந்தது. தன்னால் தான் அவன் தன்னை பார்க்கிறான் என புரிந்து சட்டென சில்வர் தட்டை இறக்கி விட்டாள்.

மேலே நின்றபடியே கீழே நின்ற எல்லோருக்கும் புன்னகையுடன் ஒரு ஹாய் போட்டுவிட்டு அவன் ஏனைய விஞ்ஞானிகளுடன் உள்ளே சென்றான்.

“டேய், ஜிம்சன் நீ சொன்ன கேரக்டருக்கும், வந்திருக்கிற கேரக்டருக்கும் சம்மந்தம் இல்லியே! பிரண்ட்லி டைப் ஆகத்தான் தெரியுறான்.” என்றாள் லில்லி.

“இவனும் அவங்கள மாதிரி திமிர் பிடிச்சவனா தான் இருப்பான். வாங்க வாங்க இங்க என்ன வேடிக்கை நமக்கு. சுவிம்மிங் சூட்டை போட்டுட்டு வாங்க கடலுக்குள்ள கொஞ்சம் வேலை இருக்கு.” என்று கடுப்புடன் நகர்ந்தாள் ஐரிஸ்.

தொடரும்.
A.L.F. Sanfara

Following on Twitter 

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 02 லில்லியும் ஐரீஸும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஜிம்சன் கூலாக ஒரு கொக்கோ கோலாவை அருந்திக்கொண்டு அங்கு வந்தான். “வா ஜிம்சன். வேலையை முடிச்சிட்டியா?”…

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 02 லில்லியும் ஐரீஸும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ஜிம்சன் கூலாக ஒரு கொக்கோ கோலாவை அருந்திக்கொண்டு அங்கு வந்தான். “வா ஜிம்சன். வேலையை முடிச்சிட்டியா?”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *