வாட்டர் போலோ விளையாட்டு

  • 10

கடற்கொள்ளையர்களின் புதையல்
(The treasure of pirates)
பாகம் 03

“கேப்டன் குக்! கண்டிப்பாக அந்த ஆபத்தான கடல் பகுதியில் கப்பலை செலுத்தத்தான் வேண்டுமா?” என்று எப்போதும் அவர் கூடவே இருக்கும் படைவீரன் பிலிப் கேட்டான்.

“ஏன் உன்கிட்ட இருந்து பின்வாங்குற பேச்சு எழும்புது?” என கேட்டான் குக்.

“அதில்ல கேப்டன், உங்களுக்கே தெரியும் நாம அனுப்பின எந்த கப்பலும் மறுபடி துறைமுகத்தை வந்து சேரல்ல. அவங்களுக்கு என்னாச்சுன்னு கூட தெரியாது. இல்லாத புதையலை தேடி இருக்கிறவங்க உயிரை விடுவது,” என்று சொல்லும் போதே விட்டான் ஒரு அறை பிலிப்புக்கு.

“டோரடோ புதையல் பற்றி என்ன தெரியும் உனக்கு! என்னோட பாட்டனோட பூட்டன் காலத்துல இருந்து அதை தேடிட்டு வர்றோம்.
கடற்கொள்ளையர்கள் சேர்த்து வெச்சிருக்குற சொத்து அங்க தங்கங்களும் வைரங்களும் விலை உயர்ந்த ரத்தினங்களும் இன்னும் ஏராளமான பொக்கிஷங்களும் இருக்கு. அது மட்டும் கிடைச்சிட்டா என்னை விட பெரிய செல்வந்தன் இந்த உலகத்திலேயே கிடையாது.” என்றான்.

“என்ன பாஸ் சொல்லுறீங்க கடற்கொள்ளையர்கள் சேர்த்து வெச்ச பொக்கிஷங்களா! அவங்கல்லாம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிஞ்சி போய்ட்டாங்க. நம்மள மாதிரி படைவீரர்களுக்கு ஈடுகொடுக்க முடியாம எல்லோரும் நகரத்துக்கு போய் வாழ ஆரம்பிச்சிட்டாங்க.” என்றான்.

“முட்டாள், அவங்க இன்னும் உயிரோட இருக்காங்க. அவங்க இருக்குற அந்த டோரடோ தீவை கண்டுபிடிச்சிட்டா போதும்.” என்றவன் மேப்பை புரட்டி புரட்டி பார்த்தான்.

**************

“போர் அடிக்குது. அடிக்கிற வெயிலில் மண்டை காஞ்சிடும் போல இருக்கு. வாட்டர் போலோ விளையாடுவோமா?” என்று கேட்டான் ஜிம்சன்.

“கிரேட் ஐடியா!” என்றபடி லில்லியும் ஐரீஸும் வாட்டர் போலோ விளையாட தயாரானார்கள்.

பந்தொன்றை எடுத்து கொண்டு மூவரும் நீருக்குள் குதித்து விளையாடிக்கொண்டு இருந்தனர். மேலே சன்பாத் எடுத்து கொண்டிருந்தான் ரெயான். தண்ணீர் சலசலப்பு ஏற்பட்டதும் எட்டி பார்த்தான் இவர்கள் மூவரும் தான்.

“ஹேய் அங்க பார்த்தியா? ஆராய்ச்சி பண்ண வந்தானா! இல்ல அரை ட்ரௌசர் போட்டுக்கிட்டு ஆராய்ச்சி கூடத்தை சுற்றிப்பார்க்க வந்தானா? என்றே புரியல்ல.” என்றாள் லில்லி விளையாட்டின் இடையே.

அவளுக்கு பந்தை மாற்றியபடியே, “பார்த்தாலே தெரியல்ல பையன் திமிரானவன் என்னு, இப்போ என்ன பன்றேன் பாரு.” என்ற ஜிம்சன் கடலுக்குள் இருந்த படியே பந்தை அவனை நோக்கி வீச இரு பெண்களும் சொல்ல சொல்ல கேட்காது வீசி விட்டான்.

ஆனால் ரெயான் எங்கிருந்தோ வந்த பந்தை லபக்கென பிடித்து கொண்டு கீழே எட்டிப்பார்த்தான். மறுபடியும் ஒரு ஹாய் போட்டு விட்டு சரசரவென கீழே வந்து விட்டான். இதுவரை மேலே ஆய்வு கூடத்தில் இருந்து யாரும் கீழே வந்தது இல்லை. என்ன கோளாறு என்றாலும் கண்ட்ரோல் ரூமில் இருந்து போன் பண்ணி சொல்லிவிடுவார்கள்.

“வாட்டர் போலோவா? நானும் உங்க கூட வரவா?” என்று கேட்டதும் மூவருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. அப்படியே திகைத்து நின்றனர்.

சரியாக அந்த சமயத்தில் இன்னொரு விஞ்ஞானி,

“ரெயான். அங்க என்ன பண்ணுறீங்க. மேலவாங்க. சீஃப் உங்க கிட்ட ஏதோ பேசனுமாம்.” என்று சொல்ல .

“ஒஹ்ஹ். ஸாரி. நீங்க கன்டினியு பண்ணுங்க.” என்று பந்தை கொடுத்து விட்டு ஓடினான். அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.

“பார்த்தியா ஐரிஸ் இவ்வளவு பக்கத்தில் வந்து நம்மகிட்ட பேசின ஒரே ஒரு சயின்டிஸ்ட் இவர்தான்.” என்று மெச்சி கொண்டாள் லில்லி.

“போதும் போதும் ஓவரா வழியாதே!” என ஜிம்சன் அவளை முறைத்தான். திடீரென மேலே அபாய எச்சரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது.

“என்னாச்சு!”

“அங்க பாரு.ங்க.” என லில்லி பயத்துடன் கடலை காட்டினாள்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 03 “கேப்டன் குக்! கண்டிப்பாக அந்த ஆபத்தான கடல் பகுதியில் கப்பலை செலுத்தத்தான் வேண்டுமா?” என்று எப்போதும் அவர் கூடவே இருக்கும் படைவீரன் பிலிப்…

கடற்கொள்ளையர்களின் புதையல் (The treasure of pirates) பாகம் 03 “கேப்டன் குக்! கண்டிப்பாக அந்த ஆபத்தான கடல் பகுதியில் கப்பலை செலுத்தத்தான் வேண்டுமா?” என்று எப்போதும் அவர் கூடவே இருக்கும் படைவீரன் பிலிப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *