காதியாரும் காசோலையும்!

  • 66

இன்றைய கால கட்டத்தில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  இலங்கையில் எத்தனையோ காதி நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. என்றாலும் அவற்றில் எத்தனை நீதிமன்றம் நீதியை மட்டும் தவறாது பேசுகின்றது? விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில காதி நீதிமன்றங்களைத் தவிர ஏனையவை நீதியை நிலை நாட்டுவதில்லை.

இது அண்மைக்கால ஆய்வில் நிரூபனமான உண்மையே

ஏன்?

ஏனென்றால் சில காதியாரது பண மோகம் அந்த நீதியை கொன்று விடுகிறது. அவர்களோ பணம் உள்ளவரது பக்கமே பேசுகின்றனர். வாதிடுகின்றனர். அந்த பணம் ஆணிடம் கொட்டிக் கிடந்தால் நீதி ஆணின் பக்கமும், பணம் பெண்ணிடம் இருந்தால் நீதி பெண்ணின் பக்கமும் சாயக் கூடியதாகவே அவர்களது தீர்ப்புகள் காணப்படுகிறது.

அதற்கு ஏற்றாற் போல் குடும்பத்தினரும் உண்மை நிலவரம் அறிந்தும் கூட பணத்துக்கும் செல்வாக்கிற்கும் துணை போகின்றனர். அவர்கள்  இம்மை, மறுமை இறைத் தண்டனைக்கும்; தீவிர விசாரணைக்கும் அஞ்ச மாட்டார்களா?

ஏன் பெண் என்றால் உங்களுக்கு  அவ்வளவு கேவலமான பிறவியா? வெறும் பணத்துக்காக அவளை குற்றவாளி ஆக்கி சமூகத்தில் முத்திரை பதித்து விட! நெருப்பின்றி புகை வராது. அது போல் காரணமின்றி ஒரு பெண் விவாகரத்து கேட்கவும் மாட்டாள்.

உலக மோகம் உங்களை இன்று ஆட்டிப் படைக்கின்றது. ஆனால் எல்லாவற்றிற்கும் இறுதியாக முடிவு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அப்போது புரிந்து கொள்வீர்கள். அபலையின் கண்ணீர்த் துளிகளின் வலியையும் மதிப்பையும்!

அதிகாரம் இருப்பதால் மிருகத்தனமாக  ஆதிக்கம் செலுத்துபவர்களே, நாளை நியாயம் வெல்லும் போது விரண்டோடப் போவதும் நீங்கள் தான். பணத்தால் வென்று விட்டதாய் நினைத்திட வேண்டாம். ஏனென்றால் இங்கு யாருடைய வாழ்க்கையும் இன்னும் முடியவில்லை. உங்களுக்கான சந்தர்ப்பம் தான் முடிந்து விட்டது. இனி எமக்கான வாய்ப்பே மீதமிருக்கிறது.

மறுமையின் வங்கலோத்து காரன் யார் என்பதை அறிந்தோரே! அநீதி இழைக்கப்பட்டவனின் பிராத்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் அவன் மன்னிக்காத வரை உங்களுக்கு விடுதலையும் கிடைக்காது. அறிந்து கொள்ளுங்கள்.

நீதியை மறைத்து அநீதியை தீர்ப்பு வழங்கும் காதிமார்களே! நாளை மறுமையின் முதல் விசாரணைக்கு நீங்கள் தயாரா? வாருங்கள் பெண்களாகிய நாமும் ஒரு கை பார்த்து விடுவோம். அநீதி இழைக்கப்பட்ட பெண்களின் கோபம் மட்டும் அல்ல. அல்லாஹ்வின் சாபமும் உங்களுக்கு வெகு தூரத்தில் இல்லை.

“தீர்ப்பளிப்பவர்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த நீதியாளனாக அல்லாஹ் இருக்கிறான்.”

Noor Shahidha.
SEUSL.
Badulla.

இன்றைய கால கட்டத்தில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  இலங்கையில் எத்தனையோ காதி நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. என்றாலும் அவற்றில் எத்தனை நீதிமன்றம் நீதியை மட்டும் தவறாது பேசுகின்றது? விரல் விட்டு எண்ணக்…

இன்றைய கால கட்டத்தில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  இலங்கையில் எத்தனையோ காதி நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. என்றாலும் அவற்றில் எத்தனை நீதிமன்றம் நீதியை மட்டும் தவறாது பேசுகின்றது? விரல் விட்டு எண்ணக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *