தனிமைப்படுத்திக் கொண்டாயா?

தனிமைப்படுத்திக் கொண்டாயா மனிதா!
நோய் விலகி ஊரமைதியடைய
உன்னை தனிமைப்படுத்திக் கொண்டாயா மனிதா!
பிறர் நோய் வராமலிருக்க,
தொற்றுநோய் பரவாமலிருக்க
உன்னை தனிமைப்படுத்திக் கொண்டாயா மனிதா!

கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில்
தினம் தினம் விடியும் உலகை
கண்டு கொண்டாயா மனிதா!
இதை வென்று கொள்ளும் நபிவழியை
உன் வாழ்வில் மென்று கொண்டாயா மனிதா!

குர்ஆனின் தேடல்களோடு உன்னை
தனிமைப்படுத்திக் கொண்டாயா மனிதா !
இல்லை பாவப்பாடல்களோடு உன்னை
இனிமைப்படுத்திக் கொண்டாயா மனிதா!

மரண பயம் உன் மார்பில்
ஊட்டிக்கொண்டாயா மனிதா!
மறுமை வாழ்விற்கு நல்லமல்களைதான்
கூட்டிக்கொண்டாயா மனிதா!

மழுங்கிய உன் அறிவை
கொஞ்சம் தீட்டிக்கொண்டாயா மனிதா!
பாவக்கறை எனும் சிறையில் இருந்து
உன் இதயத்தை திருமறையால்
மீட்டிக்கொண்டாயா மனிதா!

கொரோனாவின் கோர தாண்டவத்தில்
தவிக்கும்ஏழைகளின் பசியை
உணர்ந்து கொண்டாயா மனிதா!
இல்லை ,ஒரு வேலை உணவு வழங்கா
கோழையாகி விட்டாயா மனிதா!

நிலையற்ற உலகில் நிஜம் தேடி
அலைகின்றாயா மனிதா!
கிளையற்ற மரத்தில் நிழல் தேடி
தொலைகின்றாயா மனிதா!

தனிமைப்படுத்தி கொள் மனிதா!
உன்னை நீயே தனிமைப்படுத்திக் கொள்!
இறைவனோடு உன் வாழ்வை
இனிமைப்படுத்திக்கொள் !

Kafoordeen Mufasa
University of Peradeniya

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: