பெர்மியுடா முக்கோண வளையம்

  • 22

கடற்கொள்ளையர்களின் புதையல்
The treasure of pirates
பாகம் 04

லில்லி காட்டிய திசையில் பயங்கரமான ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது.

பார்க்கவே கருப்பாக மண்டையோடு கொண்ட கொடிகளை தாங்கி எந்த ஒரு ஆட்களும் இன்றி வந்து கொண்டிருந்தது.

“ஒஹ்ஹ் மை காட்! என்னது இது.” என ஜிம்சன் கேட்க அது வந்த வேகத்தில் ஆராய்ச்சி கூடத்தை பிளந்து விடும் போல இருந்தது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்முன்னே மறைந்து போனது தான் ஆச்சர்யம்.

மேலே இருந்த விஞ்ஞானிகள் எவரும் இதை கண்டிருக்க வேண்டும். என்றே இவர்கள் எண்ணினார்கள். ஆனால் நடந்தது வேறு. அந்த கூண்டில் இருந்த பெரிய திமிங்கிலம் தப்பித்து போனதால் தான் அபாயமணி ஒலித்தது. மேலே பெரிய கலவரமே நடந்து கொண்டிருந்தது.

இவர்களை எல்லாம் தாண்டி மிகவும் மகிழ்ச்சியாக அது தப்பித்து சென்றதை ஐரிஸ் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.

இந்த ஆய்வுகூடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? என்ற கேள்வி அவளுக்கும் எழுந்தது.

“ஆமா அதை நீயும் பார்த்தாய் தானே!” என லில்லி கேட்டாள்.

“எது திமிங்கலம் தப்பிச்சதையா? இல்ல அந்த மர்மமான கப்பல் வந்து மறைஞ்சதையா?” என ஜிம்சன் மாறிக் கேட்டான்.

“சம்திங் வ்ரோங் காய்ஸ்! எனக்கென்னவோ இந்த ஆராய்ச்சிகள் மீது சந்தேகமா இருக்கு.” என்றாள் ஐரிஸ்.

“நீ என்ன சொல்ல வர்ர. நாம ஒன்னும் டிடக்ட்டிவ் ஏஜெண்ட்ஸ் இல்ல சாதாரண மெக்கானிக்ஸ் நம்ம வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்ப்போம்.” என்றாள் லில்லி.

அத்துடன் அவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு மேலே ஏறினார்கள். கொஞ்ச நேரத்தில் அந்த அபாய ஒலியும் நின்றுவிட்டது.

************************

“நாம இப்போ தெற்கு நோக்கி 75 பாகை திசையில் பயணித்து கொண்டிருக்கோம். காணாமல் போன கப்பல்கள் கடைசியா சமிக்கை அனுப்பின இடம் இங்கிருந்து கடல்வழியாக இன்னும் 503 கிலோமீட்டர் தூரத்தில் இருக்குது பாஸ்.”

கேப்டன் குக் மேப்பில் அந்த இடத்தை பார்த்தார். அதுதான் பெர்மியுடா முக்கோண வளையம் என்று மேப் காட்டியது.

“அப்படியென்றால் அந்த இடத்தில் தான் காணாம போன கப்பல்கள் எல்லாம் இருக்கணும். ஏதோ ஒருவித காந்த சக்தி கப்பலோட என்ஜின்களை வேலை செய்ய விடாமல் பண்ணியிருக்க வேண்டும். அதனால் தான் கில்பெர்ட் போன கப்பலும் திரும்பி வரல என்று நினைக்கிறேன்.”என்றான் கேப்டன் குக்.

“நீங்க சொன்னா சரியாக தான் இருக்கும் பாஸ்.” என்று ஒத்து ஊதினான் மற்றவன்.

“ஒரு வேளை இதற்கெல்லாம் காரணம் அங்க இருக்கும் கடற்கொள்ளையர்கள் என்றால் அவங்க ஒருத்தனையும் நான் உயிரோட விடப்போராதில்லை.” என்று சொல்லி கொண்டான் கேப்டன் குக்.

***********************

“எப்படியும் என்ஜினில் கோளாறு என்று அனுப்ப போகிறார்கள். அதுக்குள்ள நாமளே போய் சின்னதா ஒரு செக் பண்ணிட்டு வருவோம்.” என்று எண்ணிக்கொண்டு ஐரிஸ் நீருக்குள் குதித்தாள். அந்த நேரத்தில் ஜிம்சனும் லில்லியும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

வழக்கம் போலவே சுவிம்மிங் சூட்டை அணிந்து கண்ணாடி லைட்டையும் மாட்டி கொண்டு கடலுக்குள் என்ஜின் இயங்கும் பகுதிக்கு சென்றாள். கட்டிடத்தின் மையப்பகுதியில் நீருக்குள் என்ஜின் அமைந்து இருந்தது. அதன் சுற்று எல்லைக்குள் கூண்டுகள் அமைக்கப்பட்டு அரிதான மீனின வகைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

ஐரிஸ் எதிர்பார்த்த அளவுக்கு என்ஜின் அல்லது விசிறியில் எவ்வித பழுதுகளும் இருக்க வில்லை. அதுமட்டுமின்றி திமிங்கிலம் கூட்டை உடைத்து சென்றதற்கான ஆதாரங்களும் இல்லை. அது இருந்த கூட்டை நெருங்கி பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள். கண்டிப்பாக யாரோ கூண்டை திறந்து விட்டிருப்பது இவளுக்கு புரிந்தது. பூட்டை உடைக்க பயன்படுத்திய ஆயுதம் கடலுக்குள் கிடந்தது. இன்னும் குழப்பத்துடன் இந்த விஷயத்தை லில்லி மற்றும் ஜிம்சன் கிட்ட சொல்லுவதற்கு மேலே நீந்தி வந்தாள்.

அவள் நீருக்குள் இருந்து தலையை எடுத்த போது அவள் முன்னாடி ரெயான் நின்று கொண்டிருந்தான்.

தொடரும்.
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 04 லில்லி காட்டிய திசையில் பயங்கரமான ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது. பார்க்கவே கருப்பாக மண்டையோடு கொண்ட கொடிகளை தாங்கி எந்த ஒரு ஆட்களும்…

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 04 லில்லி காட்டிய திசையில் பயங்கரமான ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது. பார்க்கவே கருப்பாக மண்டையோடு கொண்ட கொடிகளை தாங்கி எந்த ஒரு ஆட்களும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *