கடற்கொள்ளையர்களின் அசோரஷ் தீவு

  • 16

கடற்கொள்ளையர்களின் புதையல்
The treasure of pirates
பாகம் 05

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்க வில்லை. பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டே கண்ணாடியை இழுத்து தலையில் போட்டு கொண்டாள். ரெயான் அவளுக்கு கை கொடுக்க அவளும் சற்று தங்கிவிட்டு அவன் கையை பிடித்து கொண்டு ஏறினாள்.

“நாம அங்க போய் பேசலாமா!” என்று இவர்கள் மூவரும் வெயிலில் காயும் சாய்ந்த கதிரைகளை காட்டினான்.

அவளும் அங்கு அருகில் இருந்த டவலை எடுத்து கொண்டு தலையை துவட்டியபடி அவன் சொன்ன இடத்துக்கு சென்று அமர ரெயானும் முன்னாடி வந்து இருந்தான்.

“ஒஹ்ஹ் ஸாரி, முதலில் என்னை அறிமுகப்படுத்தி கொள்ளுறேன். என்னோட பெயர் ரெயான் ரிச். இங்க புதுசா வந்திருக்கிற” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“புதுசா வந்திருக்கிற சமையற்காரனா?” என்று கேட்டு அவனை கலாய்த்தாள் ஐரிஸ்.

“அப்படியே வெச்சிக்கோ, ஆமா உன்னோட பெயர் என்ன?” என்று கேட்டான்.

“ஐரிஸ். ஷிப் மெக்கானிக்.” என்றாள்.

“ஓஹோ. நைஸ் நேம். ஐரிஸ் என்கிறது பெர்முடா நாட்டோட நேஷனல் பிளவர் தெரியுமா?” என்று திருப்பி கேட்டான் அவளிடம்.

“நானும் பெர்முடா நாட்டு பொண்ணுதான், அது உங்களுக்கு தெரியுமா?” என்று திருப்பி கேட்டாள் ஐரிஸ்.

“கூல் கூல், ரொம்ப சூடாகுறீங்க. ஆமா இந்த ராத்திரியில் கடலுக்குள்ள என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என கேட்டான்.

“நான் ஒரு ஷிப் மெக்கானிக் என்னோட வேலையே அது தான்.” என்றாள்.

“அந்த பெரிய மீன் தப்பிச்சி போனதே அதனால் ஏதும் பிரச்சினையா?” என்று இவன் கேட்டான்.

“அது ஒன்னும் தப்பிச்சி போகல, தப்பிக்க வெச்சிருக்காங்க.” என்றதும் ரெயான் முகம் மாறியது.

“என்ன சொல்ற நீ…”‘ என்று சந்தேகமாக கேட்டான்.

“இதோ…” என்று அந்த பூட்டை உடைக்கும் ஆயுதத்தை பின்னாடி இருந்து எடுத்து காட்டினாள்.

“ஒஹ்ஹ். மை. நீதான் அதை திறந்து விட்டாயா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் ரெயான்.

“வாட் நானா?”

ஆமா. நீதானே இப்போ சொன்னே. இதை வெச்சி தான் பூட்டை உடைச்சாயா?” என்று ஏதோ இவளே திறந்து விட்டது போல ரெயான் பேச பேச கடுப்பாகி போனாள் ஐரிஸ்.

“எக்ஸ்கியூஸ் மீ, வேற யாரோ இதை பண்ணி இருக்காங்க இந்தாங்க.” என்று அந்த ஆயுதத்தை அவன் கையில் திணித்து.

“எங்கள மேலே வர விடமாட்டார்கள். நீங்களே உங்க சுபிரீயண்ட் கிட்ட இந்த விஷயத்தை சொல்லிடுங்க.” என்று விட்டு அங்கு தாமதிக்காமல் நகர்ந்து அவர்கள் தூங்கும் அறைக்குள் சென்றுவிட்டாள்.

கையில் இருந்த அந்த பூட்டு உடைக்கும் ஆயுதத்தை பார்த்து கொண்டு இருந்த ரெயான் வெகு அலட்சியமாக அதை மறுபடியும் தூக்கி கடலில் எறிந்து விட்டு அவன் இடத்துக்கு சென்றான்.

******************

கேப்டன் குக்குடைய கப்பல் பெர்முடாவை அடைய முதல் அசோரஷ் தீவில் தரித்தது.

“நாம எதுக்காக பாஸ் இப்போ இங்க வந்திருக்கோம். ஒருவேளை நாம தேடறே தீவு இது தானா?”

“கிடையாது. இது பழங்கால கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதை விட்டுட்டு குறியேறின் தீவுகளில் ஒன்னு.”

“அப்படின்னா.”

“சில ரகசியங்களை இன்னும் இவர்கள் பாதுகாத்துட்டு வராங்க.” என்றான் கேப்டன் குக்.

“புரிஞ்சிடுச்சு. தீவோட தலைவரை சந்திச்சி அவங்க பாதுகாத்துட்டு வர்ற டோரடோ ரகசியத்தை தெரிஞ்சிக்க போறீங்க. அதானே” என்றான் அவரது கையாள்.

“ஒரு சின்ன திருத்தம். சந்திச்சி சாவகாசமா பேசப்போறதில்லை. அவங்கள சாவடிச்சாவது உண்மைகளை வாங்க போறோம்.” என்றான் அந்த கொடுமைக்கார கேப்டன்.

அப்படியே கப்பலில் இருந்து கேப்டன் குக் கூட ஒரு குழு துப்பாக்கிகளுடன் தீவில் இறங்கியது.

வட அத்திலாந்திக் கடலில் காணப்படும் அசோரஷ் தீவு மக்கள் ஏனைய மக்களுடன் பெரிதாக தொடர்பு இன்றி தாமுண்டு தம் வேலை உண்டு என்று வாழ்பவர்கள். தொழிநுட்பம் எல்லாம் இங்கு இன்னும் எட்டிப்பார்க்காத நிலையில் தீவு தலைவரது கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கொடுமைக்கார குக் இங்கு தனது ஆட்களுடன் இறங்கியதும் கடலூர் வாசிகள் கலவரமடைந்தனர்.

தொடரும்
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 05 அவளும் அவனை அங்கு எதிர்பார்க்க வில்லை. பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டே கண்ணாடியை இழுத்து தலையில் போட்டு கொண்டாள். ரெயான் அவளுக்கு கை கொடுக்க…

கடற்கொள்ளையர்களின் புதையல் The treasure of pirates பாகம் 05 அவளும் அவனை அங்கு எதிர்பார்க்க வில்லை. பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டே கண்ணாடியை இழுத்து தலையில் போட்டு கொண்டாள். ரெயான் அவளுக்கு கை கொடுக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *