சாகும் வேர்கள்

  • 7

களைகள் விதைக்கப்படுவதும்
களைநாசினிகள் தெளிக்கப்படுவதும்
உலக நாகரீகத்தின்
புதிய பாடத்திட்டம்

மனிதவதை எனும் மிலேச்சத்தனம்
இந்த நூற்றாண்டின்
இயற்றப்படாது இயங்கும் சட்டம்
இறை சீற்றத்திற்கான அபய ஓலம்
ஆறாம் அறிவின் அஃறிணை வாதம்
அறிவியல் உலகத்தின் அதர்ம தானம்

பாவபுண்ணியம் பதராகி
பணங்கள் ஆழும் பிணங்கள்
இனங்களை வஞ்சித்து இரத்தம் குடிக்கிறது
இருள் மயமான இதயங்கள்
இரும்பைக் கடித்து
கரும்புச்சார் ருசிக்கிறது

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சிப் போடும் மலட்டுத்தத்துவம்
உலக நியதிகளை ஊனமாக்கிறது
மனித நேயம் உணர்வற்ற பிண்டமாய்
மயக்க போதையில் மரண வலிப்புடன்

கறுப்பினக் கழுத்து நெரிக்கப்படுகிறது
வெள்ளை ஓநாயின் விசக் கால்களால்
இன முறண்பாட்டுக் கணிதம்
இயற்கை சமன்பாட்டை உடைத்து
இயல்பு வாழ்வு பக்கவாதத்தில்

ஏகாதிபத்தியம் எரிந்து போக
சாதிகள் ஒழிந்து சமத்துவம் பிறக்கும்
தீண்டாமை விலங்கு தெறித்து விலக
சமநீதிகளை சாலைகள் சுவாசிக்கும்

பேதை உணர்ச்சிகள் பெருகி
அகிம்சை வேர்கள் அறுந்து போகிறது
ஆதிக்க எரிமலை வெடிப்பில்
சாதிவெறிகள் சமாதானம் கொல்கிறது

வர்க்க பேதங்கள் அக்கினிக் பிழம்பாக
அவதாரம் எடுக்கிறது
கோத்திர வன்மங்கள் குரல்வளை நசித்து
குருதி மழை குடிக்கிறது

கெடுதிச் சேர்மானங்கள் சேர்ந்து
சேதாரமாகும் உடல்கள் போல்
சமத்துவம் புண்ணாகி
தேள்கள் மொய்க்கிறது
இது- நீதியின் நாடித்துடிப்பு
நின்று போகும் நிமிடங்கள்
நியாயங்களின் நிராகரிப்பு
தொடரும் அவலங்கள்

பைஸல் மதனி

களைகள் விதைக்கப்படுவதும் களைநாசினிகள் தெளிக்கப்படுவதும் உலக நாகரீகத்தின் புதிய பாடத்திட்டம் மனிதவதை எனும் மிலேச்சத்தனம் இந்த நூற்றாண்டின் இயற்றப்படாது இயங்கும் சட்டம் இறை சீற்றத்திற்கான அபய ஓலம் ஆறாம் அறிவின் அஃறிணை வாதம் அறிவியல்…

களைகள் விதைக்கப்படுவதும் களைநாசினிகள் தெளிக்கப்படுவதும் உலக நாகரீகத்தின் புதிய பாடத்திட்டம் மனிதவதை எனும் மிலேச்சத்தனம் இந்த நூற்றாண்டின் இயற்றப்படாது இயங்கும் சட்டம் இறை சீற்றத்திற்கான அபய ஓலம் ஆறாம் அறிவின் அஃறிணை வாதம் அறிவியல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *