அறிஞர்களின் பொன்மொழி

  • 11

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الإنسان قد يُعدِّد المصائب وينسى النِّعم؛ فقد يذم أموراً كثيرة لِمضرَّة تلحقه ويكون فيها منافع كثيرة لا يذكرها.

 (مجموع الفتاوي ١٤٩/٢٠)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனிதன் சோதனைகளை எண்ணுகிறான் அருட்கொடைகளை மறந்து விடுகிறான், சிலவேளை அவனுக்கு ஏற்படும் தீங்குக்காக பல விடயங்களை இகழுகிறான், அவைகளில் பல பயன்கள் இருக்கும் (ஆனால்) அவற்றை அவன் ஞாபகிப்பதில்லை. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 02, பக்கம்: 149)

 قال الإمام ابن القيم -رحمه الله-:

لا تحسب أن نفسك هي التي ساقتك إلى فعل الخيرات بل إنك عبد أحبك الله فلا تفرط هذه المحبة فينساك.

 عدة الصابرين ٣٠٤

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உனது மனம் தான் நல்லவற்றை செய்ய உன்னை கொண்டு சேர்த்தது என்று நீ நினைத்து விடாதே, மாறாக நீ ஒரு அடியான் அல்லாஹ் உன்னை விரும்பிவிட்டான், அந்த விருப்பத்தில் நீ குறை செய்துவிடாதே, அவன் உன்னை மறந்து விடுவான். (நூல்: உத்ததுஸ் ஸாபிரீன், பக்கம்: 304)

قال الإمام ابن القيِّم -رحمه الله

وَكَذَلِكَ الْعلمَاء رُجـــــوم لشَياطين الإنس وَالْجِنّ؛ الَّذِي يُــــوحي بَعضهـــــــم إلى بعضٍ زُخرف القَوْل غرُورًا

( مفتاح دار السَّعادة(٦٦/١

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: (நல்ல) அறிஞர்கள் என்பவர்கள் ஏமாற்றும் வசீகர பேச்சை கெட்ட மனிதர்களில் சிலர் சில கெட்ட ஜின்களுக்கு கூறுவதை (தடுக்கும்) எரிகற்களை போல உள்ளவர்கள். (நூல்: மிப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 66)

‏ قالَ شيخُ الإسلامِ ابنُ تيمية -رحمه الله-:

الشيطانُ إذا زَيَّن المعصيةَ يجعل في القلب ظلمة، ويضعف نور الإيمان.

(‏ جامع المسائل ( ٥ / ٢٥

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஷைத்தான் பாவத்தை அலங்கரித்தால் உள்ளத்தில் இருளை போட்டு இறை நம்பிக்கை என்ற ஒளியை பலவீனப்படுத்திவிடுவான். (நூல்: ஜாமிஉல் மஸாயில், பாகம்: 05, பக்கம்: 256)

قال شيخُ الإسلامِ ابنُ تيمية -رحمه الله-:

الآمرون بالمعروف والناهون عن المنكر أطِبَّاءُ الأديان، الذين تُشفى بهم القلوب المريضة، وتهتدي بهم القلوب الضالة، وهم أعلامُ الهدى ومصابيح الدُّجى.

( جامع المسائل ( ٥ / ٢٣٧

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நல்லதை ஏவி தீயதை தடுப்பவர்கள் மார்க்கத்தின் வைத்தியர்கள் ஆவர், அவர்களின் மூலம் நோயுற்ற உள்ளங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும், அவர்களின் மூலம் வழிதவறிய உள்ளங்கள் நேர்வழி பெறும், அவர்கள்தான் நேர்வழியின் அடையாளங்கள், அவர்கள்தான் இருளின் விளக்குகள். (நூல்: ஜாமிஉல் மஸாயில், பாகம்: 05, பக்கம்: 237)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:

والأمْرُ بالسُّنّة والنهي عن البدعة هو أمرٌ بمعروف ونهي عن منكر، وهو من أفضل الأعمال الصالحة” .

[ منهاج السنة || ٥/٢٥٣ ]

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நபிவழியை ஏவி (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) அனாச்சாரத்தை தடுப்பது நல்லதை ஏவி தீயதை தடுப்பதாகும், அதுவே நல்லறங்களில் மிகச்சிறந்ததாகும். (நூல்: மின்ஹாஜுஸ் ஸுன்னா, பாகம்: 05, பக்கம்: 253)

‏قال الشيخ ابن باز -رحمه الله-:

بِـرُّ الوالِدَيْـن مِنْ أسبابِ تَفْريجِ الكُروب وتَيْسِير الأمُور .

|[ نور على الدرب (٢/١٢٢) ]|

அறிஞர் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பெற்றோருக்கு பணிவிடை செய்வது சோதனைகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கும், விடயங்கள் இலகுபடுத்தப்படுவதற்கும் காரணங்களில் ஒன்றாகும். (நூல்: நூருன் அலத்தர்ப், பாகம்: 02, பக்கம்: 122)

 قال الإمام الحَسنُ البَصري -رحمهُ الله-:

إنَّ الرَّجلَ يُذنِب الذنبَ فلا يَنساه، وما يزالَ مُتخوفاً مِنهُ حتى يدخلَ الجَنة.

 [الزهد للإمام أحمد (٣٣٨)]

இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மனிதன் பாவம் செய்வான், அதை மறப்பதில்லை, அவன் சுவர்க்கம் நுழையும் வரை அதை பார்த்து பயந்துகொண்டே இருப்பான். (நூல்: அஸ்ஸுஹ்து லில் இமாம் அஹ்மத், பக்கம்:338)

 قَـال الإمام ابن القَـيّم -رحمَـه الله-:

لا شيء أقبحَ بالإنسان مِنْ أنْ يكونَ غافلاً عن الفضائلِ الدينِّية، والعُلومِ النَّافِعةِ، والأعمالِ الصَّالِحةِ.

[ مفتاح دار السعاة ١٧٧/١ ]

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: மார்க்க ரீதியான சிறப்புக்கள், பயனுள்ள கல்விகள், நல்லறங்கள் போன்றதை விட்டும் பராமுகமாக இருப்பதை விட மனிதனுக்கு அலங்கோலமானது எதுவும் கிடையாது. (நூல்: மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா, பாகம்: 01, பக்கம்: 177)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله:-

البدعة أحبُّ إلى إبليس من المعصية لأنّ العاصي يعلم أنّه عاص فيتوب، والمُبتدع يحسب أنّ الذي يفعله طاعة فلا يتوب.

( مجموع الفتاوى (٦٣٣/١١)

அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவத்தை விட (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) அனாச்சாரம் இப்லீஸுக்கு (ஷைதானுக்கு) மிக விருப்பமானதாகும், ஏனென்றால் பாவம் செய்பவனுக்கு அவன் பாவி என்று தெரியும், அவன் பாவமன்னிப்பு கேட்டு விடுவான், ஆனால் (மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட) அனாச்சாரம் உருவாக்கியவன் அவன் செய்யக்கூடியதை வழிப்பாடு என்று நினைப்பான், (அதற்காக) பாவமன்னிப்பு கேட்கமாட்டான்.

 قـال العلامة ابن العثيمين -رحمـــہ الله-:

لا شك أن العقوبة بمرض القلوب أعظم من العقوبة بفقد الولد والأهل والمال.

[أحكام القرآن (١\٨٧)]

அறிஞர் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பிள்ளை, குடும்பம், செல்வம் (சொத்து) போன்றவற்றை இழப்பதை கொண்டு தண்டிப்பதை விட உளநோயை கொண்டு தண்டிப்பது மிகப்பெரியதாகும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. (நூல்: அஹ்காமுல் குர்ஆன், பாகம்: 01, பக்கம்: 87)

ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA.Hons)

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الإنسان قد يُعدِّد المصائب وينسى النِّعم؛ فقد يذم أموراً كثيرة لِمضرَّة تلحقه ويكون فيها منافع كثيرة لا يذكرها.…

 قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-: الإنسان قد يُعدِّد المصائب وينسى النِّعم؛ فقد يذم أموراً كثيرة لِمضرَّة تلحقه ويكون فيها منافع كثيرة لا يذكرها.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *