தாய்மார்களும் ஈமானும்

“நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் உள்ளான்”

என்ற இறைவசனத்திற்கு அமைய மனித வாழ்வில் பல்வேறுபட்ட கஷ்ட, நஷ்டங்களும், இன்னல், இடைஞ்சல்களும், துன்ப துயரங்களும் மாறி மாறி வருவது யதார்த்தம். எனினும் ஈமானின் சுவை அறிந்து, நிரந்தர மறுமை வாழ்வின் வெற்றிக்காய் வாழ்பவனுக்கு இவ்வுலகின் சோதனைகள் அனைத்தும் அற்பமே.

அந்த வகையில் சிலருக்கு வாழ்வின் கஷ்டங்களை சகிக்க முடியாமல் இறைகட்டளை வருவதற்கு முன்னால் தமது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தற்கொலை செய்துக்கொள்கின்றனர். அந்த வகையில் மேலே உள்ளப்படத்தில் ஒரு தாய் தன் உயிரை மாய்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், கள்ளம் கபடமில்லா பிஞ்சு மனம் கொண்ட சின்னம் சிசுவினதும் உயிரை மாய்த்துள்ளாள்.

இவளது நிலையைப் பார்க்கும் போது மன ரீதியான உளைச்சல், நெருக்கீடுகள், குடும்ப நெறிசல்கள், கணவனின் ஆதரவின்மை, குடும்ப உறவுரீதியான சிக்கல்கள் என பல்வகையான பிரச்சினைகள் இருந்திருக்கலாம். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

எது எவ்வாறாயினும் ஒரு பிள்ளையை சிறுவயதிலிருந்தே தாய்ப் பாலை மட்டும் ஊட்டாமல், நன்நடத்தை, நல்லொழுக்கம், மென்மை, பொறுமை, பணிவு, விட்டுக் கொடுத்தல், ஒத்துப்போகுதல் என சிறந்த நன்நடத்தைகளையும் கட்டாயம் ஊட்டி வளர்ப்பது ஒவ்வொரு தாயின் மீதும் கடமையாகும்.

இந்நிலையில் வளர்க்கப்படும் போது எந்நிலமையில் தன் வாழ்வை சமாளித்துக் கொண்டு, தன் வாழ்வில் சாதனைப்புரிவாள்.
அதுமட்டுமின்றி ஈமான் எனும் மரத்தையும் சரியாக பிள்ளைப்பருவத்திலே வளரவிடும்போது அதன்கிளைகளும் செளிப்புற்று வாழ்வை வளப்படுத்தும். அந்த வகையில் வாழ்வின் எல்லா நிலைகளிலும் வெற்றிக்கான வழியமைக்கும்.

இன்னொரு புறத்தில் எத்தனையோ தாய்மார்கள் எத்தனையோ குழந்தைகளின்றி ஏங்கித்தவிக்கின்றனர். எனினும் அல்லாஹ் நாடுவோருக்கே அந்த அருளை வழங்குகின்றான். ஆனால் அந்த அருளின் சுவை உணராதவர்களாக எத்தனையோ தாய்மார்கள் பிள்ளைகளை மார்கப்பற்றின்றி வளர்க்கிறார்கள். இவ்வருளைப்பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவார்கள் என்பதையும் மறந்து வாழ்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் பிடி கடுமையானது.

“நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே, உமது பொறுப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்”

என்ற நபிமொழிக்கேற்ப கட்டாயமாக நாமும் அதற்கேற்ப நமது பிள்ளை வளர்ப்பில் கவனமாக இருக்க வேண்டும். அப்போது வாழ்வின் எந்நிலை ஏற்பட்டாலும் துச்சமாக நினைத்து வாழ்வின் பயணத்தில் இறை ஆணைக்கு மாறு செய்யாமல், அற்ப விடயங்களுக்காய் இறை உதவியையும், அருளையும் மறக்காமல் முன்னேற்ற பாதையில் வாழ வழி செய்ய வேண்டும்.

“ஒரு விசுவாசி வாழ்வில் இன்பம் நடந்தால் அல்லாஹ்வைப்புகழ்ந்து நன்றி செலுத்தும்போது அது அவனுக்கு நலவாய் அமையும், அதேபோல் வாழ்வில் துன்பம் நடந் தால் பொறுமையுடன் எதிர்க்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நலவாகிவிடும்” என்ற நபிமொழிக்கேற்ப அற்ப சுகபோக இம்மை வாழ்வை மட்டும் வாழாமல் மறுமையை நோக்காக் கொண்டு எம்வாழ்வை அமைத்து, எமது சில அவசர முடிவுகளினால் பாவமறியாத பிஞ்சுகளையும் வாழவிடாமல், உயிரை பறிக்காமல், அல்லாஹ்விற்காகவே எமது செயல்பாடுகளை மாற்றியமைத்து, எமது வாழ்வின் இறுதிமுடிவு நல்லதாகவே அமைய வேண்டும் என்று இறைவனை எப்போதும் வேண்டுவோம். நிச்சயம் அவன் விடையளிப்பான் இன்ஷா அல்லாஹ்.

நம்மில் எத்தனைப்பேர் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளோம். சிந்திப்போம் செயற்படுவோம். இச்சம்பவம் எமக்கு விழிப்புணர்வாக அமையட்டும். இம்மை மறுமை இரு உலகிலும் பயனுடையோராய் அல்லாஹ் நம்மனைவரையும் மாற்றுவானாக.

Ummu Adheeba
Seusl
Badulla

Leave a Reply

Cart
Your cart is currently empty.
%d bloggers like this: