தன்னை உருக்கி ஒளி கொடுத்த தீபம்

தன்னை உருக்கி ஒளி கொடுத்த தீபம்

ஒளியிழந்த என் வாழ்வில்
ஒளி தந்த விளக்கு என் தந்தை
பாச மலர் வீசி
பாரினிலே முத்து முத்தாய் வியர்வை சிந்தி
உருகிடும் மெழுகுவர்த்தியவர்
உலகு போற்றும் என் தந்தை

கல்விக்காய் கை நீட்டி
காசு கேட்கையிலே
அள்ளித் தந்து
அரவணைத்த வள்ளலவர்

எதிர்காலமென்ற கட்டடத்தை தொட்டிடவே
உறுதியான உறுதுணையாய் நின்று
தட்டிக் கொடுத்த தலைமகனவர்
தங்கமான என் தந்தை

தன் உதிரத்தில் உருவான
மறு உருவத்துக்காய்
வாழ்வையே தாரை வார்த்த
உத்தமத் தியாகியவர்

ILMA ANEES
(WELIGAMA)
SEUSL
கவிதை வியூகம் வெளியீட்டு மையம்