குழந்தைகளை காதலியுங்கள்

மனதில் ஆறாத காயங்கள் ஏராளம்
அழியாத வடுக்கள் தாராளம்
ஆனாலும் சில ஆறுதல் வார்த்தைகளால்
கூட தர முடியாத ஓர் சுகத்தை
ஒரு குழந்தையின் அணைப்பு தந்து விடுகிறது.

அது வெறும் அணைப்பு மட்டுமல்ல
ஓர் அருள்!
என் நெஞ்சில் தலை வைத்து – தனது
பிஞ்சுக் கரங்களால் என் தோள்களை
இறுகப் பற்றி – முகம் புதைத்து
என்னுள் உறங்கும் மழலையின்
இந்த அணைப்பை என்னவென்று சொல்வேன்?

என் செல்லத்தின் தூங்கும் அழகை
நொடிக்கொரு முறை பார்த்து
ரசித்துக் கொண்டே முத்த மழை பொழியும்
அந்த சில நிமிடங்கள் இன்னும்
தொடரக் கூடாதா என்று மனம் கேட்கும்!

கண்ணா! உன்னால் தாயன்பை
எனக்குள் நொடிக்கொரு முறை காண்கிறேன்!
சில பொழுது கண்ணீரை கரைக்கிறேன்!

தாய்மையை உணர
தாயாக தேவையில்லை கண்ணே!
பெண்ணாக பிறந்தாலே போதும்
தாய்மையை உணர!

குழந்தைச் செல்வம் என்பது
இறைவனின் பேரருள்.
அதற்கு நிகராக உலகில் எதுவும் இல்லை!

குழந்தைகளை காதலியுங்கள்!
அந்த காதல் அழகானது!
ஆழமானது பொய்யற்றது!

எனது அன்புத் தாய்க்கு பிறகு
இந்த உலகில் நான் குழந்தைகளிடமே
கண் குளிர்ச்சியை காண்கிறேன்!

குழந்தைகள் கடைசி வரை
குழந்தைகளாகவே
என் மடி சாய ஆசைப்படுகிறேன்!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

1 thought on “குழந்தைகளை காதலியுங்கள்

Leave a Reply