கொரோனாவே நீ வென்று விட்டாய்

உன் நாமம் கேட்டு பயந்தோம் நாம்
உனை அழிக்க பலவும் செய்தோம் நாம்
ஆனால் நீயோ கைகோர்த்துக் கொண்டாய்
நம்முடன் வாழ பழகிக் கொண்டாய்

சமூக இடைவெளி பேண வைத்தாய்
குடும்ப பாசத்தை புரிய வைத்தாய்

நீயோ மனிதனை தூரமாக்கினாய்
ஆனால் இறையோனை நெருங்கச் செய்தாய்

கல்விக் கூடங்களை மூட வைத்தாய்
கச்சிதமாய் அறிவுக் கண்ணை திறந்து வைத்தாய்

நீயோ தனிமையை போதித்தாய்
சாதி பேதத்தை மறந்தாய்

நேரம் மறந்து ஓய்வை இழந்து
கதிகலங்கிய மாந்தருக்கு
நிமிடத்தின் நிம்மதியை
ஊக்கத்துடன் ஊட்டினாயே

நீயோ வீண்செலவை குறைத்து விட்டாய்
உழைப்பின் மகிமையை உணர்த்தி விட்டாய்

பணத்திமிரை உடைத்தெறிந்தாய்
வறுமைக்கு விளக்கமளித்தாய்

நீயோ உலகம் கடந்து வந்தாய்
சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தினாய்
ஓசோனையும் தூய்மைப்படுத்தினாய்

விடுதியாய் நம்மிடம் வந்தாய்
வல்லோன் வலிமையை உணர வைத்தாய்
மறையை ஏந்த வைத்தாய்
கொரோனாவே நீ வென்று விட்டாய்.

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: