நிரந்தரமில்லாத வாழ்க்கை!

  • 21

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார்.

உங்களைப் பற்றிய அறிமுகம் ஏதும் தெரியாது. ​ என்றாலும் கூட உங்களது அகால மரணம் எனது கண்களை நனைத்து விட்டது கண்ணீரால்! எனது இதயத்தை பிளிந்து விட்டது – கவலையால்!

முஸ்லிம் என்ற போர்வைக்குள் நாம் அனைவரும் சகோதரர்களே! எனவே உங்களையும் ஒரு சகோதரராகவே கண்டேன். ஓர் உடன் பிறவா சகோதரியாகவே இதை எழுதுகிறேன்.

எதிர்ப்பாராத இந்த விபத்து – எமக்கு பாரிய இழப்பு. சில இழப்புகளை மனம் ஏற்க மறுத்தாலும் என்ன செய்வது அது தான் விதி. சில இழப்புகள் சோதனையாக வரும். காரணம் அது எமது ஈமானையும் பொறுமையையும் சோதித்து பார்க்கக் கூடியது.

நிரந்தரமில்லா இந்த உலக வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை உங்கள் மரணம் நினைவூட்டுகிறது.

நீங்கள் முந்தி விட்டீர்கள் சகோதரரே! ஆனாலும் உம்மை நாமும் ஒருநாள் பின் தொடரத் தான் போகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையே! நிச்சயமாக ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்!

மதிப்பிற்குரிய சிரேஷ்ட மாணவரே! வல்ல இறைவன் உங்களுக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸின் பாக்கியத்தை தந்து,உங்களுடைய கப்றை என்றுமே ஒளிமயமாக ஆக்குவானாக!ஆமீன்! என்றும் உங்களுக்காக பிராத்தித்தவளாக விடை பெறுகிறேன்…

Noor Shahidha.
SEUSL.
Badulla.

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார். உங்களைப்…

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழி பீட  3ஆம் (2020) வருட மாணவனான தோப்பூரைச்  அஹ்சன் ஜவாகிர் என்பவர் வாகன விபத்தில் 2020.06.24 ஆம் திகதி அகால மரணமடைந்தார். உங்களைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *