இசை

  • 9

இசை ஓர் அற்புதம் -அது
இரசிகனுக்குக் கிடைத்த வரம்
மருந்தாய் விருந்தாய்
போதையாய் பேதையாய்
உறவாய் உணர்வாய் – ஏன்
உயிராய் விளங்கும்
இசை என்றும் அற்புதமே.

ஒவ்வோர் அசைவும்
புகழுக்குரியது அதற்கு
இசை எனும் பட்டம் கிடைக்கும்
பொழுதினில் – எம்
இன்பத்திலும் துன்பத்திலும்
வெறுமையிலும் தனிமையிலும்
கோபத்திலும் கொண்டாட்டத்திலும்
உள்ளம் தேடும் ஒன்றாய்
திகழ்வதும் இசையே.

சந்தப் பாட்டுமோர் இசை
நதிகளின் ஓட்டமோர் இசை
கடலலையின் ஓசையோர் இசை
பூங்காற்றின் தீண்டலோர் இசை
அசையும் மரங்களில் ஓசையோர் இசை
பறவைகளின் மொழியோர் இசை
விலங்குகளின் ஒலியோர் இசை

மழலையின் சிரிப்பொலியும் இசை
கை தட்டல் ஓசையும் இசை
காலடி ஓசையும் இசை
கடிகார முள்ளின் அசைவும் இசை
பிடித்தவர் பேச்சும் இசை
இசைக்கு எல்லையில்லை
அதை இரசித்துக் கேட்கையிலே..

ஓவ்வோர் அசைவினிலும்
இசையினை தேடுபவன்.
ஒவ்வோர் அசைவிற்கும்
உயிர் கொடுத்து
இசையாய் வடிவமைப்பவன்.
அவனே இசை நேசன்
இசையின் பெருமையை
அறிபவன் என்றும் இசை நேசனே.

ɴɪғʟᴀ ᴛʜᴀʜᴀ
1 sᴛ ʏᴇᴀʀ
ғᴀᴄᴜʟᴛʏ ᴏғ ᴀʀᴛs
ᴜɴɪᴠᴇʀsɪᴛʏ ᴏғ ᴄᴏʟᴏᴍʙᴏ

இசை ஓர் அற்புதம் -அது இரசிகனுக்குக் கிடைத்த வரம் மருந்தாய் விருந்தாய் போதையாய் பேதையாய் உறவாய் உணர்வாய் – ஏன் உயிராய் விளங்கும் இசை என்றும் அற்புதமே. ஒவ்வோர் அசைவும் புகழுக்குரியது அதற்கு இசை…

இசை ஓர் அற்புதம் -அது இரசிகனுக்குக் கிடைத்த வரம் மருந்தாய் விருந்தாய் போதையாய் பேதையாய் உறவாய் உணர்வாய் – ஏன் உயிராய் விளங்கும் இசை என்றும் அற்புதமே. ஒவ்வோர் அசைவும் புகழுக்குரியது அதற்கு இசை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *