வியூகமே நீ வாழ்க

இலக்கியத்துறையிலே
இளம் எழுத்தாளர்களுக்காய்
இளம் பிறையாய் வந்துதித்த
வீர வியூகம் மூன்றாண்டு அகவையிலே
அல்ஹம்துலில்லாஹ்

நாள்தோறும் மலரும் வியூகமே!
பல சிகரங்களுக்கும்
ஆதாரமாய்த் திகழும்
உன் வல்லமையால்
மெய் சிலிர்த்தோமே!

வியூகமே அற்புத
புதையல்களாய் உன்னில்
பல விகடங்கள்

கலை கலாசாரம்
கவிதை சிறுகதை
கட்டுரை அரசியல் என
வெளிவரும் வியூகமே
உன் விம்பங்கள் தான் எத்தனை?

வியூகமே”
நீ பூத்த மலர்கள்
நூறு – உன்னால்
சுவாசம் பெற்ற
மனங்களோ பல நூறு

சாதிக்கத் துடிக்கும்
இளைஞர் யுவதிகளுக்காய்
முதற்தர சஞ்சிகையுடனும்
இணையில்லா இணையதளத்துடனும்
கைகோர்த்த வாசகர் சார்பாக

இலைமறை காயாய் இருந்த
எம் திறமைகளை
வெளிக்காட்டிட உதயமாய் உதித்த
வியூகமே நீ வாழ்க!

எம் திறமையினை
நாம் அறியா வேளையிலும்
வலைத்தளமதில்
வலம் வரவைத்தாயே

வாசகர் ஆக்கங்களாய்
இருமையிலும்
இன்புற்று நாம் வாழ
இனிதாய் எடுத்துரைக்கும்
உன் பணிகளை
என்னவென்று வர்ணிப்பேன்

சொட்டும் கருத்துக்களை
நம் எழுத்துக்களாய்
செவ்வண்ண ஆக்கங்களாய்
பன்மொழிகளிலும் செதுக்குகின்றாயே

கவியுலகிலே
கவிமலர்களாய்
காவியம் படைக்கும்
கவிப்பிரியர்களுக்கு
களம் அமைத்த
வியூகமே நீ வாழ்க!

சிறுகதைப் பிரியர்களின்
சிக்கனவுகளை
சிங்காரத்துடன்
சிறகடிக்கச் செய்கிறாயே!

உன் திறமையை
என்னவென்று வர்ணிப்பேன்.
நீ நூலாய் நம் கரத்தில்
வலம் வர வேண்டும்
நம் அறிவுத் தாகத்தில்
ஒளியேற்றிடவும் வேண்டும்.

திறமைகளை வெளிக்காட்ட
நீ தினந்தோறும் வெளிவருகிறாய்
உன் அழகிய சேவையை
என் கவியால் வாழ்த்துகிறேன்
உன் சேவை நீடிக்க
உனை போற்றுகிறேன்.

தேடிவரும் வாசகர்
ஆக்கங்களை சிதறவிடாமல்
தினக்கவிகளையும்
சலிக்காமல்
சிந்தையில் ஏற்கும்
வியூகம் இணைப்பாளர்களே.
நீரும் வாழ வேண்டும்
பல்லாண்டு வாழ்கவே!

ASMA MASAHIM
PANADURA
SEUSL

Leave a Reply

WhatsApp chat
Cart
Your cart is currently empty.
%d bloggers like this: