கல்வி ஏன் எதற்கு?

  • 13

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும். இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.

கல்வியின் சிறப்பு

இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்க்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்கு காரணம் அவன் கற்ற கல்வியே.

கற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு

என்று குறிப்பிடுகிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறுகின்றார்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

எண் என்று சொல்லப்படுவதும், எழுத்து என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப்படுவர். இந்த அளவிற்க்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர்

கற்றவரின் சிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிற்து. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப் படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.

கல்வி உடையவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர். இவர்களை பிரிக்கின்ற போது இனி நாம் எப்போது மீண்டும் சேர்வோம்! என்ற நினைவிலேயே பிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்கும் தன்மையாகும்

மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான்.

கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை

மேற்கூரிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பை கணலாம். அதாவது இக்கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார் ஆனால் அவர் கற்ற, கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும்.

இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை என கூறப்படுகிறது.

இதற்கு சிறந்த உதாரணம் 1400 வருடங்களுக்கு முன் கற்ப்பித்த புனித இஸ்லாம் மார்க்கம் இன்று வரை நடைமுறைப்படுத்தபடுகிறது. இதனைப் போதித்தவர் மரணித்து விட்டார். அவர் கற்ப்பித்தவை இன்றும் நம்மத்தியில் காணப்படுவதை காணலாம்.

கல்வியின் அவசியம் அறிவோம்

சமீபத்திய ஒரு நிகழ்வு 70 வயதான பெரியவர் ஒருவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டன. அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அணுகியும் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆகவே மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சென்றது. அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்தார். ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை.

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவா? அறிவு வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்று கருதப்படும் இக்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருவதை நாம் கண்டுவருகிறோம்.

என்ன காரணம்?

சிந்திக்கின்ற எவரும் தெளிவாக பதில் கூறமுடியும். அறிவு முறைப்படி புகட்டப் படுவதில்லை என்று!
அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, கள்ளக்காதல் கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள் என அனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது நமது கல்வி முறைகள் மாற்றி அமைக்கப் படவேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன.

கல்வியின் நோக்கம்

குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.

மனிதன் தன் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அத்துடன் படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும். அப்போதுதான் மனிதன் தன் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும் அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!

நன்மை- தீமை அறிதல்!

உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும். அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும். இப்படிப்பட்ட நீதிபோதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போது தான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம். அவை இன்று அணுஆயுத தளபாடங்களைக் காட்டி உலகநாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து வருவதும் உலகில் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தி மனித உயிர்களை மிக மலிவாகக் கருதி மாய்த்து வருவதும் தீய கல்வியின் பயன்பாடுகளே!

பொறுப்புணர்வை வளர்! குழந்தைகள் தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான பகுதியை பள்ளிக்கூடங்களில்தான் கழிக்கின்றன. பள்ளிப் பருவம் முடிந்து வெளியேறும்போது வாழ்வின் அனைத்து சவால்களையும் துணிச்சலோடு சந்திக்கக்கூடிய மனோபக்குவத்தையும் மனோதைரியத்தையும் அவர்கள் பெறவேண்டும். அதற்கும் அடிப்படை இறையச்சம்தான். இறையச்சம் மனிதனுக்குள் வந்துவிட்டால் அவனுக்கு வேறு எந்த அச்சமும் வருவதில்லை என்பதே உண்மை.

தங்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு தன் வாழ்வாதாரங்களை தேடும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும் விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.

பயனற்றவை தவிர்!

இப்படிப்பட்ட சீர்திருத்தப் பாடங்களுக்கு எங்கே நேரம்? என்ற கேள்வி எழலாம். ஆனால் ஆக்கபூர்வமான பயனுள்ள கல்வி வேண்டுமானால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத பல பாடங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தருணம் இது. சரித்திரம் என்ற பெயரிலும் இலக்கியம் அல்லது கவிதை என்ற பெயரிலும் அந்தக் காலத்து அரசர்களின் புகழ்பாடியும் இந்தக்காலத்து மந்திரிகளின் புகழ்பாடியும் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும். தேவையற்ற சரித்திரங்களையும் இலக்கியங்களையும் கவிதைகளையும் போதிப்பதர்க்கும் பறைசாற்றுவதர்க்கும் தொலைக்காட்சிகளும் பொதுமேடைகளும் அதற்கென தவம் கிடக்கும் ரசிகர் கூட்டங்களும் பள்ளிக்கு வெளியே காத்திருக்கின்றன. தயவுசெய்து இனிவரும் இளைய தலைமுறையினரை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இனி அதற்கு நேரமில்லை!

ஆண் – பெண் வேறுபாடு

ஒரு ஆரோக்கியமான சமூகம் அமையவேண்டுமானால் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு கடமைகளும் உரிமைகளும் வேறு வேறு என்பதை நாம் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இறைவன் எவற்றை ஆண்களுக்கு கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை ஆண்களுக்கும் எவற்றை பெண்களுக்குக் கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை பெண்களுக்கும் புகட்ட வேண்டும். இன்று பள்ளிகளில் நாம் கண்டுவரும் அவலங்கள் – அதாவது கர்ப்பிணிக் குழந்தைகளும் கள்ளக்காதல்களும் கொலைக் கலாசாரமும் – ஒழிய வேண்டுமானால் இனிமேலாவது இறைவன் நமக்கு விதித்த வரம்புகளை மீறக்கூடாது. பத்து வயதுக்கு மேறப்பட்ட ஆண்களும் பெண்களும் தனித்தனி பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப் படவேண்டும். சிரமங்கள் பல இருந்தாலும் இதை மேற்கொண்டால் சமூகமும் நாடும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் இன்னபிற நாசங்களிலிருந்தும் இறைவனின் தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றப் படும்.

நன்றி: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – மே 2012

மனித வாழ்வில் கற்றல் என்பது நடத்தையில் ஏற்படும் நிரந்தரமானமனித வாழ்வில் கற்றல் ஏன் அவசியம். Hstu மாற்றம் என்றே உளவியளாலர்கள் கருதுகின்றனர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் அனைத்துப் பாகங்களையும் கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை செலவு செய்கிறான். சில சந்தர்ப்பங்களில் தான் கல்வியின் உச்சத்தை அடைந்து விட்டதாக கூறியும் இறுமாப்புக் கொள்கின்றான்.

கல்வி கற்றுத் தேறிவிட்டால் சுவர்க்கப்பேறு பெற்றவன் போல் மகிழ்ச்சி அடைகின்றான்.

கல்வி கற்காதவனை கற்ற வர்க்கம் ஏளனம் செய்கின்றது. இவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடுகள், உனர்ச்சிப் புறல்வுகள் உருவாக காரணம் ‘கற்றல்’ எனின் “மனித வாழ்வில் கல்வி ஏன் அவசியம்? ”, “நாம் ஏன் கல்வி கற்க வேண்டும்” என்பது பற்றி தெளிவாக நோக்குவது பொருத்தப்பாடுடையதொன்றாகும்.

மனிதப் பண்புகள் வளர்ச்சி பெறும்

நன்மை, தீமை என்றும் நல்லவை, கெட்வை என்றும் பிரித்தறிகின்றோம் என்றால் அவை எமது எண்ண்ணங்களின் உள்ள உந்துதலே ஆகும். இங்கு மேற்க்கூறிய மனப்பான்மைகள் உருவாவதற்கு கற்றல் மிகவும் அவசியம். இதுவே மனிதனை மனிதனாக வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி செய்கின்றது ஏன்றால் மிகையாகாது.

நினைவாற்றலை வளர்ப்பதற்கு.

நல்ல நினைவாற்றல் ஒருவனுக்க இருக்க வேண்டும் எனின் திறம்பட கற்றல் அவசியம். நாம் எழுந்தமானமாக, பூரன விளக்கமில்லாமல் மேலோட்டமாக கற்ற ஒரு விடயத்தை நினைவில் வைத்திருக்க முடியாது. நாம் முழு விளக்கத்தோடு கற்ற ஒரு விடயத்தை எம் மனதிலே உள்ளெடுத்து அதை திரும்பத் திரும்ப நினைவுக்கு (மனதுக்கு) எடுத்து கொண்டு வருவதன் மூலமாக எமது நினைவாற்றல் எம்மை அறியாமலே வளர்க்கப்படும்.

சிலர் நினைக்கலாம் நினைவாற்றலுக்கும் கற்றலுக்கும் என்ன தொடர்வு என்று. இங்கு ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் பாடசாலை சென்றோ அல்லது, நாளாந்தம் கண்முன்னே கற்றுக் கொள்ளும் அனுபவப் பாடங்கள் மூலமோ கற்றுக்கொண்ட விடயமொன்றை ஞாபகப்படுத்தி குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின்னர் அதே நிகழ்வை அல்லது நாம் கற்றக்கொண்ட அதே அறிவை திரும்பப் பெற வேண்டும் என்றால் நினைவாற்றல் சீராக இருக்க வேண்டும். எனவே இதிலிருந்து ஒரு விடயம் எமக்கு புலனாகிறது. நினைவாற்றலை வளர்த்தக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் கற்றல் வேண்டும்.

ஆளுமையை வளர்ப்பதற்கு

கல்வியின் மிகப் பிறதான நோக்கம் யாது எனில் ஒருவன் கல்வி கற்பதன் மூலம் சிறந்த ஆளுமையுடைய ஒரு சமூக சிற்பியாக தன்னை உருவாக்கிக் கொள்வதே எனலாம். இதனையே குழந்தையின் தனித்தன்மை அல்லது ஆளுமை வளர்ச்சி பெறுவதே கல்வியின் பிறதான நோக்கமாக இருத்தல் வேண்டும். என ரி..பி.நன் என்ற ஆய்வாரள் கூறியுள்ளார்.

நல்லொழுக்கத்தை கட்டியெழுப்புதல்.

மனிதனாகப் பிறந்த நாம் எத்தணையோ எண்ணங்களையும், நோக்கங்களையும் அடி மனதில் ஆளப் புதைத்துவிட்டு அதன்படி கற்க முயல்கின்றோம். ஆனால் நாம் கற்கும் கல்வியின் இறுதி இலக்கு யாதாக இருக்க வேண்டும் எனில் அது நிச்சயமாக நல்ல ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் வளர்ப்பதாகவே இருக்க வேண்டும். இக் கருத்துக்களைத் தான் பல்வேறு தரப்பினர்களும் கூறுகின்றனர். குறிப்பாக கிரேக்கத் தத்துவ ஞானி ‘அரிஸ்ரோட்டில்’ கல்வியின் இலக்கு பற்றி கூறுகின்றபோது,

“கல்வியின் இறுதி நோக்கம் மாணவர்களுடைய நல்லொழுக்கத்தையும், அறபண்புகளையும் வளர்த்தலாகும்.”

என்றார்.

இக்கருத்தை கல்வி உலகிற்கு முதன் முதலில் கூறியவரும் இவரே.

கல்வியின் இறுதி இலக்கு யாதாக இருக்க வேண்டும் என கூறிய ‘ஹெர்பார்ட்’ என்பவரது கருத்துப்படி,

“கல்வியின் உண்மையான முழுப்பயன் நல்லொழுக்கத்தை எனும் சொல்லுக்குள்ளேயே அடங்கவதாகும்”

என்றார்.

எனவே நாம் கல்வி ஏன் எதற்கு அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.இதன் போது தான் பல சாதனைகளை எம்மால் நிறைவேற்ற முடியும்.

NAFEES NALEER IRFANI BA (R) SEUSL,
Diploma in Counseling (R) NISD,
Editor of Veyooham Media Center.

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும்,…

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *