திருமண உறவில் லீனா

  • 11
திருப்பு முனை
பாகம் 2

லீனா! அவள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு என்று ஒரு அண்ணன் மட்டுமே உடன்பிறப்பு. தாய் மர்யம் ஒரு விதவை. எனவே அவர்களது குடும்ப பொறுப்பு அவள் மாமாவின் தலையில் சுமத்தப்பட்டது.

அவள் அந்த குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த நாட்களை விட தொல்லைப் பிள்ளையாக வலம் வந்த நாட்களே அதிகம். ஏன் என்றால் அவள் செய்யும் சேட்டைகளும் குறும்புகளுமே அதற்கு காரணம். பல முறை ஏச்சு பேச்சு கேட்டாலும் அவளுக்கு அதை விட்டு விட ஏனோ மனம் வரவில்லை. காலப்போக்கில் அந்த குறும்புகள் அவளுக்கான அடையாளமாக மாறியது.

அது அப்படி இருக்க திடீரென அவளுக்கு கல்யாண பேச்சு அடிபட்டு இந்த நொடி அதற்காகவே அவளை தயார்படுத்திக் கொண்டு இருந்தது. பல வண்ணக் கனவுகளில் தன்னையும் மறந்து மூழ்கிப் போயிருந்தாள் அவள்.

“மேடம் கனவு கண்டது போதும் கைய ஒழுங்கா நீட்டுங்க” என்றாள் அவள் நண்பி ஷெரீன்.

சிரித்தவாறே கையை நீட்டினாள்.

“எந்த design அ போட?”

“ம்ம்… எது சரி போடுங்க No problem.”

ஒரு design ஐ காட்டி “இது நல்லமா?”

“ம்ம்… நல்லம்”

சில நிமிடங்களில்.

“Allaahh நா ஒன்ட மறந்துடனே”

“ஏன் என்னாச்சு?”

“Heart ல S❤L என்டு போட சொல்ல நெனச்சேன் மறந்துடு” முகம் வாடினாள் லீனா.

“ம்ம் இப்ப என்னா அத போடனும் அவ்வளவு தானே”

“ம்ம்” என்றால் மெதுவாக. அவள் கையை பிடித்து இழுத்து அழகாக அதை போட்டு விட்டாள் ஷெரீன். அதை பார்த்ததும் லீனா சந்தோசத்தில் Thanks ma என்றாள்.

“நீ எப்பவும் happy ஆ இருக்கனும் சரியா? ஒன்ன ரொம்ப மிஸ் பண்ணுவன்டி”

ஷெரீன் இப்படி சொன்னதும் லீனாவின் கண்கள் கலங்க என்கும் கவலதான்

“நா எல்லாதயும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். இங்க இருக்குற சந்தோசமே வேற. இங்க போட்ட சண்ட ஏச்சி பேச்சு எல்லாம் மறக்கவே ஏலா. எவ்வளவு ஜாலி தெரிமா” என்று சொல்லி முடிப்பதற்குள் அவளையும் மீறி கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

“Sorry di நா ஒன்ன upset ஆக்கிட்டேன். கவலபடாத ஒனக்கு ஒரு நல்ல life கெடச்சிருக்கு. அவர் ஒனய நல்லா பாத்துக்குவாரு. ஒன்னும் யோசிக்காதடி.”

“ம்ம்ம் என்கும் அந்த நம்பிக்க இரிக்கி” என்று கூறி கண்களை துடைத்து கொண்டாள் லீனா.

“இப்ப இப்படி தான் சொல்வீங்க அப்பறவ் மாப்புளய உட்டு வர ஏலான்டு அழுவீங்க பாரேன் பொய் என்டா”

அவள் பக்கென்று சிரித்து விட்டு,

“இல்லயே நா அவரயும் இழுத்து கொண்டு தானே வருவேனே”

“போடி இவளே” என்று ஒரு தட்டு தட்டினால் ஷெரீன்.

சற்று நேரத்தில் “எங்க பாப்பம் மெஹந்திய” என்றவாறே அறைக்குள் வந்தாள் மர்யம்.

“நல்லமா உம்மா” என்று ஒரு கையை மட்டும் காட்டினாள் லீனா.

“ம்ம் நல்லாயிருக்கு ஏன் மத்த கைக்கு போடல்லயா”

“பாருங்க உம்மா இவளவு நேரத்துக்கு இவ போட்டுடவும் இல்ல” என்று பொய்க் குற்றம் சாட்டினாள் லீனா.

“ஆன்டி பொய்க்கி அந்த கைய இப்ப காட்ட மாட்டாங்க ஏன்டா ஆன்டி அதுல லவ் யூ heart எல்லாம் போட்டு கொண்டு மேடம்”

“இல்ல உம்மா அதுக்கு கண்பட்டுட்டு என்டா பாவம் ஏன்ட லவ்” என்று கூறி வெட்கத்தோடு சிரித்தாள்.

“பாரு இவள்ட வாய பாப்பமே நாளக்கி இந்த வாய் எங்க போவுதுன்டு. நல்லம் நடத்துங்க நடத்துங்க” என்று கூறி விட்டு குசினிக்குள் சென்றாள் மர்யம்.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 2 லீனா! அவள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு என்று ஒரு அண்ணன் மட்டுமே உடன்பிறப்பு. தாய் மர்யம் ஒரு விதவை. எனவே அவர்களது குடும்ப பொறுப்பு…

திருப்பு முனை பாகம் 2 லீனா! அவள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுக்கு என்று ஒரு அண்ணன் மட்டுமே உடன்பிறப்பு. தாய் மர்யம் ஒரு விதவை. எனவே அவர்களது குடும்ப பொறுப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *