ஐரிஸ்ஸை காப்பாற்றிய ரெயான்

  • 8
கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 08】

சத்தமின்றி ஐரிஸ் மேல் தளத்தை அடைந்து விட்டாள். அடுத்து யாராவது பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்து கொண்டு கட்டுப்பாட்டு அறையை நெருங்க சரியாக அதே நேரத்தில் ரெயான் உள்ளே கணினியில் ஏதோ தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். ஐரிஸ் கதவில் இருந்து லேசாக எட்டிப்பார்க்கையில்,

“ஏய்! நீ இங்க என்ன பன்றே” என்று சயின்டிஸ்ட் ஒருத்தன் கத்துவது கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் ஐரிஸ்.

அந்த அதட்டல் உள்ளே இருந்த ரெயானுக்கும் கேட்டது. உடனே திரையில் இருந்த அனைத்து விண்டோக்களையும் நீக்கிவிட்டு வழக்கமாக எப்படி இருக்குமோ அப்படியே வைத்து விட்டு அவனும் வெளியேற வாயிலடியே ஐரிஸை கண்டதும் கொஞ்சம் திணறினான்.

அவளை அங்கு கண்ட விஞ்ஞானி இன்னும் சிலருடன் வேகமாக வந்தான். ரெயான் அறையை பூட்டிவிட்டு வெளியேறவும் ஐரிஸுக்கு அவர்களில் ஒருவன் அறையவும் சரியாக இருந்தது.

“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வந்திருப்பே?”என ஒருத்தன் கேட்டான்.

“ஹேய் ஹேய் எதுக்காக அவளை அடிச்சீங்க” என ரெயான் கேட்டான்.

“ஆமா, நீங்க இங்க என்ன பண்றீங்க சார். இந்த நேரத்தில் சுபிரீயண்ட் தவிர மற்றவர்கள் போக கூடாது. நமக்கு வேலை காலையிலேயும் இரவைக்கும் தான்.” என்றான் இன்னொருவன்.

“ஓஹ் நான் புதுசா வந்ததால் எனக்கு உங்க டைமிங் சிஸ்டம் தெரியாது. பை த வே நான் என்னுடைய ரூம் சாவியை இங்கேயே வெச்சிட்டு வந்துட்டேன். அதை எடுக்க தான் இப்போ வந்தேன்.” என்றான்.

“ஓகே சார் நீங்க போங்க, இவளை சுபிரீயண்ட் கிட்ட சொல்லி வேலைய விட்டு நிறுத்திடுவோம்.” என்றான் இன்னொருவன். கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்த ஐரிஸ் ஏங்கிப்போனாள்.

“இருங்க அவசரப்படாதீங்க. இவ என்ன தப்பு பண்ணா? எதுக்காக அடிச்சீங்க?” என்று கேட்டான் ரெயான்.

“சார் இது ரெஸ்டிக்டட் ஏரியா. நம்மள தவிர மற்றவர்கள் இங்கே வரவே கூடாது. இவ இங்க வேலை செய்யும் சாதாரண ஷிப் மெக்கானிக. இவ இங்க வந்திருக்க கூடாது.” என்றான்.

அப்பறம் ரெயான் ஐரிஸ் பக்கம் திரும்பி,

“ஆமா நீ எதுக்காக மேலே வந்தே?” என்று கேட்டான்.

நல்ல வேளையாக மீன்கள் வீசிய பந்து அங்குதான் கிடந்தது.

“அதை எடுக்க தான் வந்தேன்.” என்றாள் அப்பாவி போல.

“சரி, இவளை விட்டுடுங்க. இனிமேல் இப்படி பண்ண மாட்டா என்னு நினைக்கிறேன்.” என்று அந்த விஞ்ஞானிகளை சமாதானப்படுத்தி அவளை அனுப்பினான்.

“ஆஹ். ஐரிஸ். இனிமேல் இங்க வரக்கூடாது புரியுதா?” என்று கேட்டு அவளை அனுப்பி விட்டான். அவள் போகும் போது பந்தை எடுத்து கொண்டு ரெயானையும் பார்த்து கொண்டே இறங்கினாள்.

ரொம்ப நேரமாக ஐரிஸை காணும் என்று லில்லியும் ,ஜிம்சனும் வெளியே வரும் போது ஐரிஸ் கலவர முகத்துடன் மேலிருந்து கீழ் வந்து கொண்டிருந்தாள்.

“அங்கப்பாருடா அவளை” என லில்லி கத்த ஆச்சர்யப்பட்டான் ஜிம்சன்.

“ஹேய் ஐரிஸ். நீ எதுக்காக மேலே போனே. அவங்க உன்னை பார்க்கல.” என்று கேட்டாள் லில்லி.

“போடி என் வேலையே போய் இருக்கும். இனி வம்பே வேணாம். அவன் மேலே சந்தேகப்பட்டு தான் மேலே போனேன். ஆனா என்னை இப்போ காப்பாத்தினதே அவன்தான்” என்று சொல்லி நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

“சரி சரி விடு, வா நீ வந்து ரெஸ்ட் எடு” என்று சொல்லி அவளை அறைக்குள் கொண்டு சென்றனர். கீழே இவர்களையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ரெயான் அவனும் கீயை சுழட்டி கொண்டே அவன் அறைக்கு சென்றான்.

***********************

கேப்டன் குக்கும் அவரது ஆட்களும் அந்த தீவில் இருந்த பர்மீஸின் நெருங்கிய வலது கையாக இருந்த ஒருவனுக்கு தான் பர்மீஸின் வாரிசுகள் வாழும் இடம் தெரிந்திருக்க வேண்டும் என்று ஒருவரை இழுத்து கப்பலில் போட்டுக்கொண்டே பயணத்தை ஆரம்பித்திருந்தனர். பர்மூடா முக்கோண வலையத்தின் முதலாவது முனையான பர்மூடாவில் அடுத்து காலடி எடுத்து வைத்தனர்.

தொடரும்
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 08】 சத்தமின்றி ஐரிஸ் மேல் தளத்தை அடைந்து விட்டாள். அடுத்து யாராவது பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்து கொண்டு கட்டுப்பாட்டு அறையை நெருங்க சரியாக அதே…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 08】 சத்தமின்றி ஐரிஸ் மேல் தளத்தை அடைந்து விட்டாள். அடுத்து யாராவது பார்க்கிறார்களா?என்பதை உறுதி செய்து கொண்டு கட்டுப்பாட்டு அறையை நெருங்க சரியாக அதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *