மௌனியானவள்

  • 9

மௌனியானவளுக்கு
பேசத் தெரியாது
என்பதெல்லாம் இல்லை
அவள் உள்ளத்தை
உடைப்பதை விடவும்

உறவை நிலைக்கச் செய்வதில்
அக்கறை கொண்டிருக்கிறாள்

உங்களை அவள் நேசித்த
காரணத்துக்காகவே
அதிகம் விட்டுக் கொடுக்கிறாள்
அதிகம் கருணை காட்டுகிறாள்
அதிகம் சகித்துக் கொள்கிறாள்

அவளை நீங்கள் காயப்படுத்தும்
போதெல்லாம்
அவள் கண்ணீர்தான்
பேசிக் கொள்கிறது
அவள் மொழிகள்
விலங்கிட்டுக் கொள்கிறது

நீங்கள் அவள் உணர்வுகளை
உடைக்கும் போதெல்லாம்
அவள் இதயம் இறந்து போகிறது
அவள் இதழ்கள் மட்டும்
உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாய்
காட்டிக் கொண்டிருக்கிறது

அவளை விடவும்
நீங்கள் நேசிக்கும் ஒருவர் இருந்தால்
அவளை விடவும்
நீங்கள் நம்புமொருவர் இருந்தால்
அவளை விடவும்
நீங்கள் கொண்டாடித் தீர்க்கும்
ஒருவர் இருந்தால்

அவளை விடவும் நீங்கள்
விரைவில் காயப்பட்டு போவீர்கள்

அவள் மௌனி தான்
உங்கள் உணர்வுகளை
மதிக்கும் வரை
உங்களைப் பொருத்த மட்டும்
அவள்
மௌனியாகவே இருக்கிறாள்

ஏரூர் நிலாத் தோழி
ஹைறாத் மகளிர் இஸ்லாமிய கலாபீடம்
ஏறாவூர்

மௌனியானவளுக்கு பேசத் தெரியாது என்பதெல்லாம் இல்லை அவள் உள்ளத்தை உடைப்பதை விடவும் உறவை நிலைக்கச் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறாள் உங்களை அவள் நேசித்த காரணத்துக்காகவே அதிகம் விட்டுக் கொடுக்கிறாள் அதிகம் கருணை காட்டுகிறாள் அதிகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *