ஏதேதோ மாற்றம்

  • 11

உதவி செய்வதாய் சொல்லி
உதாசீனம் செய்கின்றனர்.
ஆறுதல்கூறும் விதத்தில்
ஆசைக்கிணக்க நினைக்கின்றனர்.

வழி காட்டுவதாய் சொல்லி
வழிகேட்டில் இழுக்கின்றனர்
நம்பிப் பேசலாமென்று
நயவஞ்சகம் செய்கின்றனர்.

ஊக்குவிக்கும் பெயரில்
ஊமையாக்குகின்றனர்
சிநேகிதமாய் பேசி
சிறை கைதியாக்குகின்றனர்.

விளக்கம் சொல்வதாய்
விதிவிலக்கை மீறுகின்றனர்
சகோதரத்துவம் என்று
சாக்கடையில் தள்ளுகின்றனர்.

அகிம்சை எனும்பெயரில்
அட்டகாசம் செய்கின்றனர்
ஆளாக்குவதாய் சொல்லி
ஆளக்குழி வெட்டுகின்றனர்.

சகஜமான புன்னகையையும்
சாதகமாக நினைக்கின்றனர்
வெளிப்படை தன்மையைக்கூட
வேதனையாய் மாற்றுகின்றனர்.

ஒழுங்கமைப்பதாய் சொல்லி
ஒழக்கக்கோவை மீறுகின்றனர்
கட்டுப்படுத்துவதாய் எண்ணி
கண்டதெல்லாம் செய்கிறனர்.

புரிந்துணர்ந்து என்று
புது கவசம் அணிகின்றனர்
கடமை என்று சொல்லி
கடன்காரனாக்குகின்றனர்.

தீர விசாரிப்பதாய்
தீரவே விசாரிக்கின்றனர்
அடைக்கலம் எனும்பெயரில்
அடிமையாக்கி கொள்கின்றனர்.

Asana Akbar 
Anuradhapura
SEU Of Srilanka

உதவி செய்வதாய் சொல்லி உதாசீனம் செய்கின்றனர். ஆறுதல்கூறும் விதத்தில் ஆசைக்கிணக்க நினைக்கின்றனர். வழி காட்டுவதாய் சொல்லி வழிகேட்டில் இழுக்கின்றனர் நம்பிப் பேசலாமென்று நயவஞ்சகம் செய்கின்றனர். ஊக்குவிக்கும் பெயரில் ஊமையாக்குகின்றனர் சிநேகிதமாய் பேசி சிறை கைதியாக்குகின்றனர்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *