அப்ப சொத்து யெதுவுமே நமமலுக்கு கெடக்காதா?

  • 18

யார் நீ
காட்சி :04
களம் :ரஞ்சித்தின் வீடு (ராம்னியின் ரூம்)
கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், சாவித்திரி

(இவ்வாறு நாட்கள் கடந்து செல்கையில் ரஞ்சித் பொறுமையிழந்து போனான். ரமனி, தேவா இருவருமே தனித்தனியே எப்பொழுது உண்மை வெளிப்படும் என நினைத்துக் கொண்டிருந்தார். இப்படியிருக்க ரஞ்சித் எப்படியாவது சொத்துப் பத்திரத்தை பெற வேண்டும் எனும் நோக்கில் செயற்பட ஆரம்பித்துவிட்டான். மாலை நேரம் மெதுவாக இருளைப் பரப்பிக் கொண்டிருக்கையில் ரமனி மீண்டும் அழுகையை தொடக்கிவிட்டாள்.)

ரமனி: கடவுளே மறுபடியும் நீயா? யாராச்சும் வாங்களே என்ன காப்பாத்த யாரும் இல்லயா?

கெளஷல்யா: மாப்புள நல்லபடியா எக்டிங்க முடிச்சிட்டு வாங்க. புரிஞ்சுதா?

ரஞ்சித்: வைடி போன, இந்த நேரத்துல!

ரமனி: அம்மா நீ எங்கம்மா இருக்க? பயமா இருக்கு! யே தேவா என்ன தொல்ல பண்ணுற?

கெளஷல்யா: அம்மாடி, பத்திரம் கெடக்கிம் வரக்கிம் கமுக்கமாக இருக்கனும்!

ரஞ்சித்: ரமனி என்ன வெரட்டாத நா தா ஒன்னோட தேவா என்ன கண்டு யேமா அழுற?

ரமனி: தேவாவா இல்ல நீ வேறயாராசும் ஒருத்தனா என்னால எதையுமே நம்ப முடியல? செத்துப் போன என் தேவா எப்படி திரும்ப வர முடியும்?

ரஞ்சித்: கண்மனி யேமா என்ன புரிஞ்சிக்க மாட்டங்குற? ஒன்னோட மனசுல இருக்குற என் கிட்ட சொல்லுமா ? எல்லாத்தயும் சொல்லு. எது எல்லாம் உண்மயோ அத சொல்லு?

ரமனி : என்ன ரஞ்சித் ஓங்கிட்ட நா சொல்ல இருக்கு? பத்திரம் எங்க இருக்குன்னு நா ஒனக்கு சொல்லனுமா? இல்லன்னா ஒரு பொம்பள பொறுக்கி அண்ண பொண்டாட்டிய கண்ணு வெச்சிட்டு அலையிறானு சொல்லனுமா?

ரஞ்சித்: ரமனி என்ன நீ ஒளருற? நா ஒன்னோட தேவா எப்படி நா ரஞ்சித் ஆக முடியும்? யேன்டி இப்படி எல்லாம் பேசுற? எனக்கு ஒன்னுமே புரியலமா!

(தான் அதிர்ச்சி அடைந்ததை காட்டாத ரஞ்சித் தொடர்ந்தும் தேவாவை போலவே நடிக்க முனைந்தான்.)

ரமனி : நடிக்காத ரஞ்சித் எனக்கு எல்லாமே தெரியும். ஒன்னோட புத்திய இப்படி நீ காட்டுவன்னு நா நெனச்சி கூட பாக்கல! துரோகி!

ரஞ்சித்: ரமனி இங்க பாரு நா தேவா தான் இந்த மாதிரி பேசுன எனக்கு.

ரமனி: பாத்தியா ஒன்ன? ஒன்னொட கொணத்த நீயே காட்டிட. ஒன்னோட நோக்கம் எல்லாம் என்னோட நடக்காது! நீயே ஒன்னோட வேஷத்த வெளிப்படுத்திடு இல்லன்னா!

ரஞ்சித்: (ரமனியை இறுகப் பிடித்த வாரே) ரமனி என்ன பேச விடுவியா இல்லயா?

ரமனி: அம்மா! அம்மா! என்ன காப்பாத்துங்க. மறுபடியும் அதே மர்ம உருவம் என்கிட்ட வந்திருக்கு! யாராச்சும் இல்லயா?

கெளஷல்யா: என்னம்மா நீ மறுபடியும் இப்படி அலறுர. ரமனி ரமனி.

சாவித்திரி: அந்த ஆவி நம்ம அம்மா கிட்ட போயிருக்குமோ?

கெளஷல்யா: அப்ப ஒன்னுமே நடக்கல்லயா? அடடா போட்ட ப்ளேன் இப்படி ஆச்சே!

சாவித்திரி: ரமனி அம்மா. ஐய்யோ! ரமனி அம்மா எந்திரிங்க. அம்மா. அம்மா.

கெளஷல்யா: ஐய்யோ ரமனி. ரமனி. எந்திரிம்மா கண்மனுயே சாவித்திரி கொஞ்சம் தண்ணி கொண்டுவா.

சாவித்திரி: சரிங்கம்மா இப்பயே கொண்டு வர்ரேன்.

சாவித்திரி: அம்மா ரமனி யம்மா. எந்திரிங்கம்மா. அம்மா அம்மா என்னம்மா ஆச்சு?

ரமனி: ரஞ்சித் இன்னயோட பயப்பட ஆரம்பிச்சிடுவான். இன்னயொட வேற ப்ளேன் இடிச்சிறுவாங்க.

சாவித்திரி : என்னம்மா சொல்றிங்க? தேவா சேர் தானே வந்தாரு நீங்க என்னமோ சொல்றிங்க?

ரமனி : தேவா இல்ல அது. ரஞ்சித் தா இன்னக்கி வந்தான்! என்னோட வாய் வார்த்தயால ஏதாவது ஒரு க்ளு கெடக்குமானு!

சாவித்திரி : அம்மா என் தலயே சுத்துது. ரஞ்சித்தா எனக்கு ஒன்னுமே புரியல! எப்படிமா கண்டுபுடிச்சிங்க?

ரமனி: சாவித்திரி தேவா என்கிட்ட வந்தா நித்தியா நித்தியா! னு என்ன காப்பாத்த தா ஏதாச்சும் சொல்லுவாரு! ஆனா இன்னைக்கு தேவா சொல்லுமா சொல்லு. உன் மனசுல இருக்குற எல்லாம் சொல்லுனு யேன் கேக்கனும்? அப்பவே நா கண்டுபுடிச்சுட்டேன் அது ரஞ்சித் தானு.

சாவித்திரி: அம்மா நீங்க அவர எதிர்த்து பேசிடிங்க இதுக்கு அப்புறமா என்ன பண்ணுவாரோ? என்னால நெனக்கவே முடியல!

ரமனி: நடக்குறது நடக்கட்டும். நடக்குறது எல்லாம் நல்லதாவே நடக்கனும்னு வேண்டிக்கலாம்.


(இவர்கள் இருவரும் இங்கே பேசிக்கொண்டிருக்கையில் ரஞ்சித் கீழ் மாடியில் கெளஷல்யா விடம் உரையாடுகிறான்)

ரஞ்சித்: அடியே கெளஷல்யா எங்கடி இருக்க??

கெளஷல்யா: என்னாச்சு? ஏதாச்சும் ஒரு துருப்பாச்சும் கெடச்சுதா??

ரஞ்சித்: எங்கடி ஒம் பொண்ணு நா ரஞ்சித் தான்னு கண்டு புடிச்சுட்டா! நீயா இந்த காரியத்த நிறுத்தல நான் நிறுத்த வெச்சுறுவேன்னு மெரட்டுர மாதிரியே சொல்லிட்டா!

கெளஷல்யா: என்ன மாப்புள இப்படி ஆச்சே? எத வெச்சு கண்டு படிச்சா?

ரஞ்சித்: நா கொடுத்து தா எடுத்திருக்கனும்! எடுத்துட்டு கொடுக்கலாமுன்னு தவற விட்டுட்டேன். ச்ச்ச்சசச.

கெளஷல்யா: அப்ப சொத்து யெதுவுமே நமமலுக்கு கெடக்காதா? இப்ப நா என்ன பண்ணுறது?

ரஞ்சித் : அடிங்க இவள! ஒன்ன கொண்ணுறவன் சும்மா கெடடி! நெனச்சது நடக்கலயேனு நானே கவலைல இருக்கேன்!

இப்படியாக நேர்மாற்றமான எண்ணங்களுடன் ரஞ்சித்தின் வீடு திண்டாடிக் கொண்டிருக்கிறது. அங்கே தேவாவின் நிலை தான் என்ன? ரஞ்சித் ரமனியை கைவசப்படுத்த ஏதாவது புது திட்டத்தை கைக்கொள்ளுவானா? பத்திரம் யாருக்கு? விடையை அறிய வேண்டுமா?

தொடரும்
Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
South Eastern University Of Srilanka.

யார் நீ காட்சி :04 களம் :ரஞ்சித்தின் வீடு (ராம்னியின் ரூம்) கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், சாவித்திரி (இவ்வாறு நாட்கள் கடந்து செல்கையில் ரஞ்சித் பொறுமையிழந்து போனான். ரமனி, தேவா இருவருமே…

யார் நீ காட்சி :04 களம் :ரஞ்சித்தின் வீடு (ராம்னியின் ரூம்) கதாப்பாத்திரங்கள் : ரமனி, கெளஷல்யா, ரஞ்சித், சாவித்திரி (இவ்வாறு நாட்கள் கடந்து செல்கையில் ரஞ்சித் பொறுமையிழந்து போனான். ரமனி, தேவா இருவருமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *