A/L Exam முடிஞ்சி 10நாள்ல அவசரமா ஒரு கல்யாணம் தேவயா?

  • 10

திருப்பு முனை
பாகம் 3

மருதாணியின் அழகை ரசித்து கொண்டிருந்தாள் லீனா. ட்ரீங் ட்ரீங்! அவளது தொலைபே‌சி அலறல் அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. யாரா இருக்கும் என்ற சிந்தனையோடு போனை எடுத்தாள். போன் திரையில் அவள் பள்ளித் தோழி ஹனாவின் பெயர் காட்டியது.

“ஹலோ. அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஅலைக்கும் ஸலாம் சொல்லுங்க ஹனா”

“சொகமாடி நீ?”

“அல்ஹம்துலில்லாஹ்” என்றாள் லீனா.

“என்னடி ஒனக்கு நாளக்கி wedding ஆ? இப்ப தான் உம்மா சொன்னடி.”

“ஓ. வாங்க கட்டாயம்.”

“மாப்புள யாரு? ஓன்ட familyஅவரா?”

“ஓ.. அவர் தான்.” என்றாள் சாந்தமாக!

ஒனக்கு கொஞ்சம் சரி அறிவில்லயாடி. முடிச்ச ஒத்தன முடிக்க ஒனக்கு கேடா.” என்று ஹனா ஆத்திரப்பட்டாள்.

“அப்படி இல்லவா அவர் நல்லம். நல்ல மார்க்கம்.”

“ஓஓஓ அப்பிடியா. அவ்வளவு நல்லம்டா ஏன் மொத life ல divorce ஆவனும்டு சொல்லேன்.” என்றாள் கோபமாக.

“ஆஹ் அதுல அவ தான் சரில்லயாம் அதனால தான் உட்டதாம், இவர் பாவம்வா.”

“நீ பெய்த்து பாத்தியாடி இல்லயே அடுத்தவங்கட பேச்ச கேட்டுட்டு ஓன்ட வாழ்க்கய நாசமாக்காதடி. கொஞ்சம் யோசி ஒனக்கு வயசா பெய்த்துட்டு இல்லயே. இப்பிடி அவசரமா ஒனக்கு ஒரு கல்யாணம் தேவயா? அதும் A/L exam முடிஞ்சி 10நாள்ல! results வர காட்டியும் சரி நீ wait பண்ண சொல்ல இருந்த தானேடி.

“Wait பண்ண ஏலாதாம் அவங்களுக்கு. ஆனா நல்ல results வந்தா படிக்க உடுவதாம். தெரியும் தானேவா ஒஙல்க்கு. நடந்த பிரச்சின எல்லாம். ஊட்லயும் கஸ்டம் தானே. முடிச்சா எனக்கு குடும்பத சரி பாக்கேலுமே பாவம் உம்மாவும். என்ன தான் செய்ய?”

“ஹூம்ம். சரி இனி ஓன்ட இஷ்டம் இப்ப எதயும் பேசி வேலல்ல. நீ நல்லா இருந்தா அது போதும்.” என்றாள் ஹனா.

“ஆனா லீனா ஒன்ட மட்டும் மனசல எடு. வாழ்க்க ஒரு முற தான் போனா திரும்பி வராது.”

“ம்ம் உண்ம தான்வா” என்றாள் லீனா.

சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தாள் லீனா. ஏனோ மனம் கனத்தது. அவள் முகத்தில் சோகம் பளிச்சிட்டது. ஹனா கேட்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தொழுதுவிட்டு அறைக்குள் வந்த ஷெரீன் அவளது முக மாற்றத்தை கண்டு,

“ஏன் என்னாச்சுடி upset ஆ இருக்கிறாய்?”

ஹனா பேசினா.

“ஆஹ் என்ன சொன்னா அவ.”

“இல்ல நா அவசரப்பட்டு முடிவெடுத்துடேனா ஷெரீன்?”

“ஏன் இப்படி கேக்குறாய்.”

“அவ அப்பிடி சொன்னாவா?”

“ம்ம்.” என்றாள் லீனா.

“அவக்கு பைத்தியம் நீ சும்மா இதுவல மனசுல போட்டு கொலப்பிக்காத. நா என்டா சொல்றேன் இப்படி ஒரு life. யார்க்கும் கெடைக்காது.”

“ம்ம். எனக்கும் அப்படி தான் படுது. அல்லாஹ் எனக்கு தந்த gift இது.”

“ம்ம் அத நெனச்சி சந்தோசப்படு.” என்றவளை பார்த்து புன்னகைத்தாள் லீனா.

ஆனாலும் அவள் மனதில் ஏதோ ஒரு பயம் எட்டிப் பார்த்தது. அதை வெளிக் காட்டாமல் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்தில் இரவுணவும் தயாரானது. இறைவனிடம் அனைத்தையும் பாரம் சாட்டி விட்டு நிம்மதி அடைந்தாள் லீனா. அப்போது ஓர் பெரிய சுமையை இறக்கி விட்ட நிம்மதி அவள் மனதில்.

லீனா வாங்க சாப்பிட. என மர்யம் அழைக்க. உம்மா நாங்க சஹன்ல தின்றோம் போட்டு தாங்களேன் என்றாள். சிறுமிகளும் குமருகளும் சஹனில் இடம் பிடிக்க லீனாவும் சேர்ந்து கொண்டாள்.

உண்மையில் கூட்டாக சாப்பிடுவதும் ஒரு தனி அழகு தான். கோழிக்கும் முட்டைக்கும் சண்டை போட்டு விட்டு, இறுதியில் சமாதானமாவது என்பது ஒரு வித சந்தோசம். அது ஒரு இனிய நினைவாக என்றுமே மனதில் நிலைத்திருக்கும். அந்த இனிய நினைவுகளை சேகரித்து வைப்பதற்காகவே லீனா ஆசைப்பட்டாள்.

எல்லாரும் வயிறார சாப்பிட்டு கொண்டிருக்க. லீனாவின் சிந்தனையில் சங்கமித்துக் கொண்டிருந்தான் அவன். ஆம்! அவன் தான் அவள் கரம் பற்றவுள்ள கணவன் ஷரீப். அவள் அன்புக்கும் நேசத்துக்கும் சொந்தக்காரன்.

நா இங்க இவ்வளவு சந்தோசமா இருக்கிறேன். அவர் அங்க என்ன செய்றாரோ தெரியா. தின்டாரோ இல்லயோ பாவம். என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள். பல கனவுகள் அவளை சுற்றி சிறகடித்துக் கொண்டிருக்க, இப்படியே அன்றைய பொழுது அவளுக்கு மகிழ்ச்சியாகவே கழிந்தது.

*********************

மறுநாள், அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு தொழ தயாராகி கொண்டிருந்தாள் லீனா. அன்றைய நாள் அவள் வாழ்வின் மிக முக்கிய நாள். ஆனால் அது அவள் விதியை மாற்றப் போகும் ஓர் கறுப்பு நாள் என்பதை அவள் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 3 மருதாணியின் அழகை ரசித்து கொண்டிருந்தாள் லீனா. ட்ரீங் ட்ரீங்! அவளது தொலைபே‌சி அலறல் அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. யாரா இருக்கும் என்ற சிந்தனையோடு போனை எடுத்தாள். போன்…

திருப்பு முனை பாகம் 3 மருதாணியின் அழகை ரசித்து கொண்டிருந்தாள் லீனா. ட்ரீங் ட்ரீங்! அவளது தொலைபே‌சி அலறல் அவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. யாரா இருக்கும் என்ற சிந்தனையோடு போனை எடுத்தாள். போன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *