பெர்முடா தீவு

  • 29

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 09】

பர்மீஸின் ஆட்களை பிடித்து வந்த கேப்டன் குக் பெர்மூடாவில் மாரியா எங்கு வசிக்கிறாள் என்பதை பற்றி விடாது கேட்டு அடித்தான்.

“இங்க கூட்டிட்டு வந்தா எங்களை விட்டுர்ரதா சொன்னீங்க. இப்போ அவங்க எங்கன்னு கேட்டு கொடுமைப்படுத்துறீங்க. விட்டுடுங்க ஐயா எங்களை நாங்க எங்க தீவுக்கே போயிர்ரோம்.” என்று கதறி அழுதார்கள்.

பெர்முடா ஒன்றும் பர்மீஸின் தீவு போல் பழங்குடியினர் வாழும் கிராமம் இல்லை. இங்கு மக்கள் நகரமயமாக்கம் மற்றும் தொழிநுட்ப அறிவு பொருந்தியவர்களாகவே இருந்தார்கள். கிரேக்கத்தின் கப்பற்படை தளபதியும் அவர்களின் படைவீரர்களும் திடுதிப்பென நகரத்துக்குள் நுழைய முடியவில்லை.

பெர்முடா நகர கடல் எல்லை அதிகாரிகளிடம் அவர்கள் கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா செல்வதாகவும், நடுவில் கொஞ்சம் இளைப்பாறளுக்கு வந்ததாகவும் சமாளித்து கொண்டான். அவர்களும் ஆயுதங்கள் எதுவும் இன்றி ஊருக்குள் செல்ல அனுமதி அனுமதி அளித்தார்கள்.

அந்த அப்பாவி தீவுவாசியை மிரட்டி காட்டிக்கொடுக்க நினைத்தால் கப்பலில் இருக்கும் அவனது மனைவி பிள்ளைகளை கொன்றுவிடுவேன் என சொல்லித்தான் பெர்முடாவுக்குள் அழைத்து சென்றான். கடைசியில் மரியாவின் வீட்டுக்கு அடிக்கடி பர்மீஸ் வந்து போவதுண்டு. அப்போது அவருடன் வரும் நபர்களில் ஒருவனைத்தான் தங்களுக்கு வழிகாட்டியாக அழைத்து வந்தனர். அவனும் உயிருக்கு பயத்தில் மாரியாவின் வீட்டுக்கு அவர்களை அழைத்து சென்றான்.

அங்கு மாரியா மற்றும் கணவன் நிக்கலஸ் இருவரும் வீட்டோடு சேர்த்தாற்போல ஒரு ரெஸ்டாரண்ட் அமைத்து வாழ்ந்து வந்தனர். நாற்பத்தி ஒரு வயதான மாரியா அச்சு அசல் அப்படியே ஐரிஸை போலவே இருந்தாள்.

“வாங்க, வாங்க. என்ன சாப்பிரீங்க?” என்று வந்தவர்களை வரவேற்ற போதுதான் அவர் அப்பாவின் ஆட்களில் ஓருவர் என்பதை கண்டுகொண்டாள்.

“புரூஸில்! நீங்களா வாங்க வாங்க அப்பா எங்க வர்றாரா?” என்று ஆவலோடு எட்டிப்பார்த்தாள்.

ஓஹ் நீதான் பர்மீஸின் மகளோ ஓவியத்தில் உன்னை பார்த்து ஒரு இருபது இருபத்தைந்து வயதிருக்கும் என்றெண்ணி கொண்டான்.

“யார் நீங்க?” என்று கேட்டு கொண்டே நிக்கலஸ் அவர்களை நெருங்கி வந்தார்.

உடனே கேப்டன் குக் போலியாக அழுதான். அவன் பர்மீஸை கொன்றதையும் டோரடோ ரகசியத்தை அடையவும் வந்த கொடூர அரக்கன் இவன் என்று சொல்ல முடியாது தவித்தார் புரூஸில்.

“என்னாச்சு ஏன் இவர் அழுறார்? என்று பயத்துடன் கேட்டாள் மாரியா.

“உங்க அப்பா, உங்க அப்பா, மாரடைப்பு வந்து இறந்துட்டார்.” என்று சொல்லி மீண்டும் அழுதான். அப்பா இறந்த செய்தி கேட்டதும் துடியாய் துடித்தாள் மாரியா.

“என்ன? எப்படி இப்படி நடந்தது. நல்லா தானே அவர் இருந்தார். ஐயோ அப்பா.” என கதற நிக்கலஸ் அவளை தேற்றினான்.

“நடந்தது நடந்து போச்சு வா நாம அங்க போய் அவருக்குரிய கடமைகளை செய்யணும். புறப்படலாம்” என்றார்.

மாரியாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இவர்களை கப்பலில் வைத்து விசாரித்து தீவு இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே கேப்டன் குக்கின் திட்டம்.

மாரியாவும் நிக்கலஸும் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். அன்று இரவே அந்த தீவுக்கு செல்ல இவர்களுடன் கப்பலில் ஏறினார்கள். பெர்முடாவில் இப்போதுதான் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது ஆதலால் பர்மீஸுடைய குட்டி தீவுக்கு செல்ல கப்பல் அல்லது எஞ்சின் படகே பயன்படுத்த வேண்டி இருந்தது. எப்படியோ பெர்முடாவின் கடல் அதிகாரிகளை சமாளித்து அழைத்து சென்றான் கேப்டன் குக்.

கப்பலில் ஏறுவதற்கு சற்று முன்னர் மாரியா நிக்கலஸிடம்,

“நாம ஏன் இந்த விஷயத்தை நம்ம பொண்ணுக்கு தெரிவிக்க கூடாது. அவ வேலை பார்க்கிற இடத்துக்கு ஒரு தந்தி அடிச்சிட்டு போகலாமே!” என்று கேட்டாள்.

“இல்லை வேண்டாம் மாரியா. அவளுக்கு தாத்தா மேலே ரொம்ப பாசம். அவ இதை தாங்கிக்கொள்ள மாட்டா” என்றார். அப்போது தான் கேப்டன் குக் அறிந்து கொண்டான் மாரியாவுக்கு ஒரு மகள் இருக்கிறது என்பதை.

*******************************

காலையில் நடந்த சம்பவங்களை எண்ணி கவலையோடு இருந்தாள் ஐரிஸ். அவர்கள் இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். இவளுக்கு தூக்கம் வரவில்லை. அப்போது நீருக்குள் ஏதோ விழுவது போன்ற சத்தம் கேட்டது. அவளுடைய சுறாமீன்கள் தான் வந்திருக்கு என்றெண்ணி ஐரிஸ் வெளியே வந்தாள். ஆனால் அங்கு மீன்கள் வரவில்லை.

“ச்சே. இல்லியா” என்றெண்ணி திரும்பியவள் ஏதோ யோசித்தவளாய் அங்கேயே வெளியே நிலவொளியில் அமர்ந்து இருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் சற்று தூரத்தில் ஒரு டால்பின் மீன் பாய்ந்து ஓடுவதை அவதானித்தாள் ஐரிஸ். அதன் முதுகில் இருந்த காயம் நிலவொளியில் நன்றாகவே தெரிந்தது. அவள் அந்த டால்பினை இதற்கு முன்பு கூண்டுக்குள் கண்டிருக்கிறாள்.

“எப்படி இதுவும் தப்பிச்சி போகுது யார் இந்த மீன்களை தப்பிக்க விர்ரது? இப்போ தண்ணிக்கு அடியில் தானே இருப்பாங்க. எப்படி பிடிக்குறேன்னு பாருங்க.” என்று எண்ணியவள் உடனே ரூமுக்குள் சென்று சுழியோட தேவையானவற்றை அணிந்து கொண்டு பாய்வதற்கு வந்து நின்றாள். ஆனால் அதற்கு முன்னரே நீருக்குள் இருந்து குமிழிகள் வெளியே வர உடனே அருகில் இருந்த மறைவிடம் ஒன்றில் மறைந்து அது யாரென பார்க்க. அவள் கண்ணையே அவளால் நம்ப முடியவில்லை அது அவனே தான். ரெயான் நீருக்குள் இருந்து மேலே வந்து தன்னை யாரும் பார்க்கிறார்களா என பார்த்து விட்டு மாடிப்படியில் ஏறினான்.அப்போது வெளியான ஐரிஸ்.

“அப்படியே நில்லுங்க “என்றாள்.

தொடரும்
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 09】 பர்மீஸின் ஆட்களை பிடித்து வந்த கேப்டன் குக் பெர்மூடாவில் மாரியா எங்கு வசிக்கிறாள் என்பதை பற்றி விடாது கேட்டு அடித்தான். “இங்க கூட்டிட்டு…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 09】 பர்மீஸின் ஆட்களை பிடித்து வந்த கேப்டன் குக் பெர்மூடாவில் மாரியா எங்கு வசிக்கிறாள் என்பதை பற்றி விடாது கேட்டு அடித்தான். “இங்க கூட்டிட்டு…

3 thoughts on “பெர்முடா தீவு

  1. Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You obviously know what youre talking about, why waste your intelligence on just posting videos to your site when you could be giving us something enlightening to read?

  2. Hello! This is my first comment here so I just wanted to give a quick shout out and say I truly enjoy reading your blog posts. Can you suggest any other blogs/websites/forums that go over the same subjects? Thanks!

  3. You have mentioned very interesting points! ps nice site. “Become addicted to constant and never-ending self improvement.” by Anthony D’Angelo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *