இயற்கையுடன் ஒரு நொடி

ரசனைகள் பலவிதம்
அதில் இயற்கையோ புதுவிதம்.
அந்த இயற்கை எனும் கடலுக்குள்
நான் முத்தாக மூழ்கினேன்.

பல கரங்கள் என்னை
தேடியும் கிடைக்கவில்லை
காரணம் நான் காத்திருக்கிறேன்
என்னை காக்கும் ஓர் சிப்பிக்காக!

தனிமை கொடுமை என்பார்கள் சிலர்
ஆனால் அந்த தனிமைக்கு
இயற்கையின் பிணைப்பிருந்தால்
அது இனிமையே.

உப்பின்றி உணவு சுவைக்காது
அது போல் இயற்கையின் நிழலின்றி
தனிமையும் சுவைக்காது!

இந்த தனிமையும் பிடிக்கிறது
காத்திருப்புக்கள்
என்னை அணைக்கும் போது!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply