இறையோனை நினைத்திடு!

0 Comments

உலகம் அது விளைநிலம்
அகிலம் அது சோதனைக் களம்

சோதனையக் கடந்து
சாதனை புரியப் பிறந்த நீ
சோகத்தை எண்ணிக் கவலைப் படாதே!

நீ உன்னை அறிந்ததை விட
உன் இறைவன்
உன்னை அறிந்தவன்

கல்பின் கவலை மறந்து
கடைசி வரை வாழனுமா??
கண்ணியமானவனை
கல்பில் நிறுத்தி கனிவோடு பிரார்த்தி!

உள்ளம் அமைதியடைய
இறையோனை நினைத்திடு!
உன் கவலைக்கு மருந்து இறைவனிடமே

Binthi Asadh

Leave a Reply

%d bloggers like this: