இயந்திர மனிதன்

  • 19

ஓய்வு நேரங்களில் கூட
ஓய்ந்து விடாமல்
ஓயாமல் ஓடுகின்றான்
இன்றைய இயந்திர மனிதன்.

மாடாய் உழைத்து
தீரா நோய்களை நண்பனாக்கி
மருந்துகளுக்கு அடி பணிந்து
ஆரோக்கியத்தை இழக்கிறான்
இதய நோயாளியாக.

இயற்கையை இரசிக்க மறந்து
மாற்றங்களின் பின்னால்
மறைந்து போகின்றான்.

இன்பங்களை இழந்து
சந்தோஷங்களை சாய்த்து
மனித நேயத்தை மறந்து
சுற்றம் துறந்து சுருதி பாடுகின்றான்.

அநீதிகளை அரவணைத்து
அன்பை தொலைத்து
உறவுகளை உதறி
உறங்கிக் கிடக்கின்றான் உற்சாகமின்றி.

சிரித்து பேச நேரமின்றி
ருசித்து உண்ண காலமின்றி
காணாமல் போகின்றான் கலியுகத்தில்.

உணர்வுகளைத் தொலைத்து
இலக்குகளே இல்லாமல்
இருப்பதை இழந்து
இல்லாததைத் தேடி
பொன்னான நேரத்தை
மண்ணாக்குகின்றான்
இன்றைய இயந்திர மனிதன்.

இறுதி மூச்சு பிரியும் நேரத்தில்
இன்னதென்று தெரியாத
ஏமாற்றத்துடன் எதையுமே
ஏற்காத வெறுமையுடன்
விடைப்பெறுகின்றான் மண்ணைவிட்டு!

Rushdha Faris
South Eastern University of Sri Lankan.

ஓய்வு நேரங்களில் கூட ஓய்ந்து விடாமல் ஓயாமல் ஓடுகின்றான் இன்றைய இயந்திர மனிதன். மாடாய் உழைத்து தீரா நோய்களை நண்பனாக்கி மருந்துகளுக்கு அடி பணிந்து ஆரோக்கியத்தை இழக்கிறான் இதய நோயாளியாக. இயற்கையை இரசிக்க மறந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *