நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!

துரோகியே!
உனது துரோகத்தால்
நீ என்னை வென்றதற்காக
இனியும் நான் முடங்கிக் கிடப்பேன்
என்று நினைத்தாயோ?

உன்னை நம்பி
என் வாழ்க்கையை
இழந்த பின்னும்
நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றால்
காரணம் எனது திறமைகளைக் கொண்டு
உன்னை வீழ்த்துவதற்குத் தான்.

பூவாக இருந்த என்னை
இராட்சத முள்ளாக உருமாற்றிய உன்னை
வேட்டையாடவே என் கண்கள்
விழித்துக் கொண்டிருக்கிறது.
நான் வைத்த குறி தப்பாது
தப்பவும் விட மாட்டேன்.

கவிச்சுடர்
Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply