நான் ஒரு சீ ஐ டி ஏஜென்ட்

  • 150

கடற்கொள்ளையர்களின் புதையல்
【The treasure of pirates】
【பாகம் 10】

ரெயான் திரும்பி பார்த்தபோது அங்கு ஐரிஸ் நின்றுகொண்டிருந்தாள். முகத்தில் அதிர்ச்சி தொனித்தாலும் அவளை சமாளித்து விடலாம் என்றெண்ணி இறங்கி வந்தான்.

“நீங்க பண்ணுற தப்பெல்லாம் இங்க இருக்குற யாருக்கும் தெரியாது என்று நினைச்சீங்களா?”

“ஐரிஸ்! நீயா ? நீ நீ என்ன பண்ணுறே இங்கே?”

“முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, இவங்க கஷ்டப்பட்டு பிடிச்சி காப்பாத்திட்டு வர்ர கடல்வாழ் உயிரினங்களை எதுக்காக தப்பிக்க விட்டீங்க?”

“என்ன ஒளர்ர?”

“சும்மா ஒன்னும் தெரியாதது போல நடிக்க வேண்டாம். நீங்க என்ன பண்ணீங்க என்பதை நான் பார்த்துட்டு தான் இருந்தேன். சொல்லுங்க எதுக்காக இப்படி பண்ணீங்க?”

என்று கடுமையாக கேட்டாள்.

“ஓகே ரிலாக்ஸ். கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து பேசலாமா?” என்று கேட்டான் ரெயான்.

“கையும் களவுமாக இவனை பிடிச்சிருக்கோம். இவன் என்னடான்னா கூலா, நிதானமாக பேச கூப்பிர்ரான். ஒருவேளை நமக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சதால நம்மள கொன்னுடலாம் என்று பார்க்கிறானா?” என பலவாறெல்லாம் எண்ண தோன்றியது அவளுக்கு.

“பயப்பர்ரே! நான் ஏன் இப்படி பண்ணேன் என்று தெரியணும் அவ்வளவு தானே. ஈஸி என்னோட வேலையே அதுதான்” என்றான் ரெயான். ஐரிஸ் இன்னும் குழம்பி போனாள்.

மாடிப்படிகளில் இருந்து இறங்கி அவன் ஓய்வெடுக்கும் கதிரையில் அமர்ந்து கொண்டான். அவளை முன்னாடி வந்து உட்கார சொன்னான். அவளும் சற்று தயங்கிய படியே அவன் முன்னாடி வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“நான் இங்க உள்ள விஞ்ஞானிகளில் ஒருத்தன் கிடையாது. இன்னும் உனக்கு சொல்லணும் என்றால் என்னோட பெயர் ரெயானே கிடையாது. நான் ஒரு சீ ஐ டி ஏஜென்ட், பெயர் யுவான் ரிச்.” என்று சொன்னதும் திகைத்து போய் நின்றாள் ஐரிஸ்.

“என்ன சொல்லுறீங்க நீங்க அப்போ!” என்று வார்த்தை தடுமாறினாள்.

“ஆமா, நீ இங்கே ஒரு ஷிப் மெக்கானிக் ஆக இருக்கே. என்ஜினையும் சில சமயங்களில் இயந்திரக்கோளாறுகளையும் தவிர வேறு எதுவும் உனக்கு தெரியாது. பாவம் உன்னோட நண்பர்களும் அப்படித்தானே! இன்னிக்கி என்னாச்சுன்னு பார்த்தாய் தானே? உங்களை அங்க வர்றதுக்கே அனுமதி கொடுக்காங்க இல்லை. எப்போதாவது நீ யோசித்து பார்த்ததுண்டா? இங்க அரிய உயிரினங்களை இனப்பெருக்க வெச்சி அதோட குட்டிகளை பாதுகாக்கிறாங்களா என்னு?” என்று திடுமென ஒரு கேள்வியை தூக்கி போட்டான்.

“நீங்க சொல்றத பார்த்தா அப்படி ஏதும் இங்க நடக்கலியா?” என்று திருப்பி கேட்டாள் இவள்.

“இவங்க இந்த உயிரினங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குற பெயரில் இதுங்களை வெச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. மீன்களோட உடலில் இருந்து வித்தியாசமான ஹோர்மோன்களை பிரிச்சி எடுத்து வித விதமான வர்த்தக நிறுவனங்களுக்கு வித்துர்ராங்க. இதனால என்னாகுது தெரியுமா? ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் அந்த  உயிரினம் அது உடம்பிலே ஹார்மோன்களை பிரிச்சி எடுக்க செலுத்தப்படும் ஊசி மருந்தால அதுங்க வழக்கமான ஆயுளை விடவும் குறைவாகவே வாழுகின்றன.” என்றான்.

“என்ன அப்போ அவங்க இதுக்காகத்தான் மீன்களை பிடிச்சிட்டு வந்து கூண்டுல அடைச்சி வைக்கிறாங்களா?” என்று அதிர்ச்சியோட கேட்டாள் ஐரிஸ்.

அப்போது யுவான் திடீரென ஐரிஸை பேசவிடாமல் இழுத்து அணைத்து முத்தமிட்டான். அவனது திடீர் செயலால் திக்கு முக்காடிப்போனாள் ஐரிஸ். அவள் தன்னை விடுவிக்க முயன்ற போது இன்னும் பலமாக அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். சற்று நிமிடம் கழித்து அவனே அவளை விடுவிக்க பளார் என அவன் கன்னத்தில் அறைந்து விட்டு எழுந்து நின்றாள்.

“ச்சை…”

“கொஞ்சம் அவசரப்படாம நான் சொல்றதை கேளு. மேல இருந்து ரெண்டுபேர் இப்போ நம்மள பார்த்துட்டு இருந்தாங்க. அதுதான் அவங்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க அப்படி பண்ணவேண்டியாயிற்று. என்னை மன்னிச்சிடு” என்றான்.

உண்மையில் யுவான் சொன்னது போல யாரோ இருவர் நடமாடுவதை கண்டே யுவான் அவ்வாறு நடந்து கொண்டான்.

“இங்க இருக்குற சுபிரீயண்ட் ரொம்ப மோசமானவன். அவங்க என்ன பண்ணுறாங்க, எதுக்கு பண்ணுறாங்க எல்லா டீடைல்ஸையும் எடுக்க தான் காலைல கண்ட்ரோல் ரூமுக்கு போனேன். கடைசியில் நீ அங்க வந்ததால் எல்லாம் சொதப்பிடுச்சி இன்னிக்கி ஆராய்ச்சிக்கு உட்படுத்த இருந்த டால்பினை தான் இப்போ திறந்து விட்டேன்.” என்றான்.

“உங்களை அடிச்சத்துக்காக என்னை… மன்னி.”

“சரி விடு யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணி இருப்பாங்க. இன்னிக்கி இவ்வளவு போதும். யாரும் வர்றதுக்குள்ள நீயும் போய்டு. நாளைக்கு காலைல சந்திப்போம். இப்போதைக்கு உன் கூட வேர்க் பண்ணுறவங்க கிட்ட கூட இதை பற்றி சொல்ல வேண்டாம்.” என்று விட்டு யுவான் மேலே சென்றான். அவளும் அரவமின்றி யோசித்து கொண்டே அவள் அறைக்கு சென்றாள்.

தொடரும்
A.L.F. Sanfara

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 10】 ரெயான் திரும்பி பார்த்தபோது அங்கு ஐரிஸ் நின்றுகொண்டிருந்தாள். முகத்தில் அதிர்ச்சி தொனித்தாலும் அவளை சமாளித்து விடலாம் என்றெண்ணி இறங்கி வந்தான். “நீங்க பண்ணுற…

கடற்கொள்ளையர்களின் புதையல் 【The treasure of pirates】 【பாகம் 10】 ரெயான் திரும்பி பார்த்தபோது அங்கு ஐரிஸ் நின்றுகொண்டிருந்தாள். முகத்தில் அதிர்ச்சி தொனித்தாலும் அவளை சமாளித்து விடலாம் என்றெண்ணி இறங்கி வந்தான். “நீங்க பண்ணுற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *