பிறரின் தவறுகளை தேடுவதில் ஆர்வம் காட்டாதே!

  • 11

உன் சகோதரனுடைய நல்ல கெட்ட அமல்களைப் பற்றி விசாரிக்காதீர்கள் அது உளவு பார்ப்பதாகும்.  என்று ஹசனுள் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .

ஒரு புத்திசாலி  தனது குறைகளை சீர் செய்து மனிதர்களின் குறைகளைப் பற்றி  உளவு பார்ப்பதை விட்டுவிட்டு அமைதியை கடைபிடிப்பது அவசியமான  கடமையாகும். யார் பிறர் குறைகளை விட்டுவிட்டு தனது குறைகளை சரி செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறானோ அவன் தனது உடலை அமைதிப் படுத்திக் கொள்கிறான். அவனது உள்ளம் சாந்தி நல்வாழ்வு  பெறுகிறது.

தனது தவறுகளை மீட்டிப் பார்க்கும் போதெல்லாம் ஒருவன்  அதே போன்று தவறுகளை பிறரிடம் காணும் போது அவன் உள்ளம் சமாதானம் அடைகிறது. தன்னில் பிழையை வைத்துக் கொண்டு பிறரின் பிழையை தேடுவதில் யார் ஈடுபாடு காட்டுகிறானோ அவனின் உள்ளம் குருடாகி விடுகிறது. உள்ளம் அமைதியை மற்றும் நிம்மதியை இழந்து தவிக்கிறது. இதனால் அவனின் உடல் களைப்படைகிறது. இப்படி பட்டவர்களுக்கு  தனது குறைகளை விட்டு விடுவது கடினமாகி விடுகிறது.

மக்களில் மிகவும் இயலாதவன் யார் என்றால் தன்னிடம் இருக்கும் அதே தவறுகளை வைத்து பிறரை குறை சொல்லுபவன் தான் மிகவும் இயலாதவன். யார் குறை காண்கிறானோ அவன் குறை கூறப் படுவான் .

மன்சூர் பின் முஹம்மத் அல் குறை(zi)ஸி என்ற கவிஞர் பாடுகிறார்:

நான் பிறர் தவறுகளை காணும்
மனிதர்களையேகாணுகிறேன் !
தனது தவறுகளை காண்பதில்
அவர்கள் குருடன் ஆகிவிடுகிறார்கள் !
தனது சகோதரனின்
குறைகளை வெளியே சொல்லி!
தனது குறைகளை மறைப்பதில்
என்ன நன்மை இருக்கப் போகிறது!.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : தனக்கு தேவையில்லாத விடையத்தை விட்டுவிடுவது ஒரு மனிதனுடைய இஸ்லாத்தின் அழகிய பண்பாகும். ஒரு மனிதனின்  ஈமானுடைய  பரிபூரணத்துவதின் அடையாளமாகும் வார்த்தையிலும் செயலிலும்  தனக்கு தேவை இல்லாத உலக  விடைய்ங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது. தாமதத்தில் அமைதியும் அவசரத்தில் கைசேதமும் இருக்கிறது. மனிதனின் நல்வாழ்வு நாவை பேணுவதிலும் அதனை பாதுகாப்பதிலும் உண்டு.

P.T.KASEER Azhary

உன் சகோதரனுடைய நல்ல கெட்ட அமல்களைப் பற்றி விசாரிக்காதீர்கள் அது உளவு பார்ப்பதாகும்.  என்று ஹசனுள் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . ஒரு புத்திசாலி  தனது குறைகளை சீர் செய்து மனிதர்களின் குறைகளைப் பற்றி …

உன் சகோதரனுடைய நல்ல கெட்ட அமல்களைப் பற்றி விசாரிக்காதீர்கள் அது உளவு பார்ப்பதாகும்.  என்று ஹசனுள் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் . ஒரு புத்திசாலி  தனது குறைகளை சீர் செய்து மனிதர்களின் குறைகளைப் பற்றி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *