மூஃமீனின் வாழ்க்கையில் சோதனையும் இறைநேசமும்

  • 9

பொதுவாக மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் இடம்பெறுகின்றதை காணலாம். அம்மனித சமூகம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியை பேசக்கூடியவராக இருந்தாலும் சரியே. இவ்வாறு இன்பம், துன்பம் ஏற்படுகின்ற போது அதற்கு வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அல்லாஹ்வை மட்டும் இறைவனாக நம்பிக்கை கொண்டு ரஸுல்மார்களையும் நபிமார்கள், இறைவனிடத்தில் இருந்து வந்த வேதங்கள் கலாகத்ர் மற்றும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு அதன்படி அமல் செய்கின்ற ஒரு முஸ்லிமே மூஃமீனின் என அழைக்கப்படுகின்றது.

இவ்வாறான மூஃமீன் தனது வாழ்கையில் ஏற்படுகின்ற இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, அனைத்தும் அல்லாஹ் தன் மீது விதியாக்கிய சோதனையாகவே கருத வேண்டும். அவற்றின் மூலம் நாம் இறைவனை நெருங்க வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்கிறது. அந்த வகையில் ஒரு மூஃமீன் தனது வாழ்கையில் சோதனைகள் ஏற்படும் போது அச்சோதனையை எதிர் கொள்ள வேண்டும் என்று அழகாக வழிகாட்டுவதை காணலாம்.

மேலும், வெற்றி, தோல்வி அனைத்தும் சோதனை என கூறுவதோடு முழு மனித வாழ்க்கையும் சோதனை என கூறுவதை அல்குர்ஆனில் காணலாம். (நிச்சயமாக இது மிகத்தெளிவான ஒரு சோதனையாக இருந்தது.) (திருக்குர்ஆன் 37: 107)

அந்த வகையில் இந்த உலகத்தில் வாழ்ந்த முதல் நபி முதல் இறுதி நபி வரை அனைத்து நபிமார்களும் சோதனைககு உட்படுத்தப்பட்டார்கள். அல் குர்ஆன் நபி யூனுஸ், நபி மூஸா, நபி யூசுப், நபி இப்ராஹீம், நபி முஹம்மத் போன்ற நபிகள் சோதனைக்கு உட்பட்டுள்ளார்கள் என்பதை அல் குர்ஆன் பறைசாட்டுகின்றது.

(உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.) (திருக்குர்ஆன் 2:214. )

உதாரணமாக நபி யூனுஸ் (அலை) அவர்கள் வயிற்றில் வைத்து சோதிக்கப்பட்டதையும் அவர் எவ்வாறு அதனை அச்சோதனையை வெற்றி கொண்டார் என்பதையும் அல் குர்ஆன் அழகாக கூறுகின்றது. நபி யூசுப் அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டார்கள். இதன் முலம் அல்லாஹ்வை நெருங்கினார்கள். இதனால் நபி யூனுஸ் (அலை )அவர்களும் அல்லாஹ்வின் அருளால் மீன் அந்த சோதனையை வெற்றி கொண்டார் என அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(துன்னூன் (ஆகிய யூனுஸ்) கோபத்துடன் சென்ற நேரத்தை(யும் நினைத்துப் பார்ப்பீராக). நம் தீர்ப்பு அவரைப் பிடித்துக் கொள்ளாது என அவர் எண்ணினார். எனவே அவர் துன்ப வேளையில் (நம்மை) அழைத்து, உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. நீ தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநீதியிழைப்பவர்களைச் சார்ந்தவனாக இருந்தேன் என்றார்). (திருக்குர்ஆன் 21: 87)

இவ்வாறு பல நபிமார்கள் சோதனைக்கு உள்வாங்கப்பட்டார்கள். அப்போதும் அவர்கள் சோர்ந்து போகாமல் தமது தூதுப்பணியை செவ்வனே செய்தார்கள்.

மேலும், அல்லாஹ் மனிதர்களையும் பல வழிகளில் சோதிக்கிறான். சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் சிலருக்கு குழந்தைப்பேறு கொடுத்தும் சிலருக்கு கொடுக்காமலும் சோதிக்கிறான். இது பற்றி அல்குர்ஆனிலும் காணலாம்.

(உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும்(உங்களுக்குச்)சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது). (அல்குர்ஆன் 64:15)

இவ்வாறு அல்லாஹ்வினால் தரப்பட்ட செல்வங்கள் ஒரு அருளாக இருப்பினும் அதனை இறை வழிகாட்டலுக்கமைய செழவழிக்கின்றானா என்பதை சோதிப்பதற்கே செல்வங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஸகாத் கொடுத்தல், ஸதகா போன்ற தான தர்மங்கள் செய்தல், கடன் கேட்டால் வழங்கள் போன்ற வழிமுறைகள் முலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். செல்வம் கொடுக்காமலும் அல்லாஹ் சிலரை சோதிக்கிறான். இவர்கள் அல்லாஹ்விடம் பிராத்தனை மற்றும் அல்லாஹ்வின் மீது தாவக்குல் வைப்பதன் மூலம் இறை நெருக்கத்தை அடைந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு குழந்தை பாக்கியமும் சோதனை என அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

(வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்) (அல்குர்ஆன் 42:49-50)

மேலும் மரணத்தை கொண்டும் அல்லாஹ்வின் தனது அடியானை சோதிக்கிறான். (அல்லாஹ் கூறுகிறான். உலகில் என் அடியானின் நேசத்துக்குரிய ஒருவரை நான் கைப்பற்றி, அதன் மீது என் அடியான் பொறுமை கொண்டு நற்கூலியை ஆதரவு வைத்தால், அவனுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை, என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்). (ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

மேலும், பல வகையான நோய்களை கொடுத்தும் தனது அடியார்களை அல்லாஹ் சோதிக்கிறான் அதாவது தோற்று நோய்களையும் அல்லாஹ் இப்பூமிக்கு இறக்குகிறான். இது நபி (ஸல் ) அவர்களின் காலம் முதல் இருந்துள்ளது. இவ்வாறான காலங்களில் எவ்வாறு நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது பற்றியும் இஸ்லாம் வழிகாட்டுகின்றது.

தற்காலத்திலும் கொரொனா கொவிட் 19 என்ற ஒரு தோற்று நோய் இவ்வுலகில் பரவலாக காணப்படுகின்றது. இதனை மனிதர்கள் செய்த பாவங்களுக் கிடைத்த அல்லாஹ்வின் தண்டனையாகவும் அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு சந்தர்பமாகவும் அருளாகவும் நோக்கலாம். எவ்வாறு இருந்தாலும் ஒரு மூஃமீன் இதனை ஒரு சோதனையாக கருதி அல்லாஹ்விடம் பிராத்தனை மூலம் இந்த சோதனையிலிருந்து வெளியேற வேண்டும்.இவ்வாறான சந்தர்பத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்று நபி அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

(நான் நபி(ஸல்) அவர்களிடம் பிளேக் நோயைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது அல்லாஹ், தான் நாடுவோர் மீது இறக்கி வைக்கும் வேதனையாகும். (எனினும்) மூஃமின்களுக்கு அதனை அல்லாஹ் ரஹ்மத்தாக ஆக்கிவிட்டான். யார் பிளேக் ஏற்பட்ட ஊரில் அல்லாஹ் (விதியில்) எழுதியிருந்தாலே தவிர, அது தம்மைத் தொடாது என்று உறுதி பூண்டு நற்கூலியை ஆதரவு வைத்தவராக பொறுமை கொண்டு இருப்பாரோ அவருக்கு “ஷஹீது” என்னும் புனித தியாகியின் நற்கூலி கிடைக்கும் எனக் கூறினார்கள்). ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

(ஒரு முஸ்லிமை வந்தடையும் கஷ்டம், நோய், கவலை, நோவினை, துக்கம் – அவரது காலில் குத்திவிடம் முள்ளின் வேதனை வரை- அவை அனைத்தைக் கொண்டும் அவர் பிழைகளை அல்லாஹ் அழித்தே தவிர வேறில்லை). (புகாரி, முஸ்லிம் : அபூஸயீது, அபூஹுரைரா(ரலி))

அல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்ததிருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். சோதனைக் காலங்களை அல்லாஹ் மனிதர்களிடத்தில் மாறி மாறி வரச்செய்வது அவன் நியதிக்குட்பட்டதாகும். அவ்வாறு உங்களுக்குச் சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடியுங்கள். அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கையை வையுங்கள். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம்.

எனவேஅல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்ததிருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே ஆகும். அல்லாஹ் தனது நல்லடியாகளை இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். சோதனைக் காலங்களை அல்லாஹ் மனிதர்களிடத்தில் மாறி மாறி வரச்செய்வது அவன் நியதிக்குட்பட்டதாகும். அவ்வாறு சோதனைகள் வரும்போது பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் ஏனெனில் அல்லாஹ் பொறுமையாளருடன் இருக்கிறான். அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்க வேண்டும். (உயிரை வழங்குபவனும், மரணத்தைக் கொடுப்பவனும் அவனே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.) (திருக்குர்ஆன் 10: 56)

JEMSIYA NASIM
ATULUGAMA
SEUSL

பொதுவாக மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் இடம்பெறுகின்றதை காணலாம். அம்மனித சமூகம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியை பேசக்கூடியவராக இருந்தாலும் சரியே. இவ்வாறு இன்பம், துன்பம் ஏற்படுகின்ற போது அதற்கு வெவ்வேறு…

பொதுவாக மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் இடம்பெறுகின்றதை காணலாம். அம்மனித சமூகம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியை பேசக்கூடியவராக இருந்தாலும் சரியே. இவ்வாறு இன்பம், துன்பம் ஏற்படுகின்ற போது அதற்கு வெவ்வேறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *